தேதி: September 15, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரை நெல்லிக்காய் - 10
மிளகாய் வற்றல் - 8
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - குண்டு மணி அளவு
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - கால் கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
நெல்லிக்காயை இட்லி பானை தட்டில் வைத்து 5 நிமிடம் ஆவியில் வேக விடவும். வெந்ததும் நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கி உரித்து விடவும்.

வெறும் வாணலியில் மிளகாய் வற்றல், வெந்தயம், பெருங்காயம், கடுகு ஆகியவற்றை போட்டு 3 நிமிடம் இளம் சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, பொடித்த மிளகாய் பொடி சேர்க்கவும்.

அதில் வேக வைத்த நெல்லிக்காயை போட்டு 5 நிமிடம் எண்ணெய்யில் கொதிக்க விடவும்.

பிறகு மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விடவும். 2 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.

Comments
நெல்லிகாய் ஊறுகாய்
அக்கா எத்தனை நாள் வச்சுக்கலாம் இந்த ஊறுகாய் ரொம்ப சூப்பரா இருக்கு.நீங்க பதில் சொன்ன நான் செய்து பார்க்கலாம் நு ஒரு ஐடியா அதான் கேட்டேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி