கேக், பிஸ்கட் தயாரிக்க

இமா அம்மா,
கேக், பிஸ்கட் செய்ய வீட்டில் தயாரிக்கும் வெண்ணெய் பயன்படுத்தலாமா? எங்க வீட்டிலிலேயே நிறைய வெண்ணெய் கிடைக்கும். இப்பொழுது வரை கேக், பிஸ்கட்டுக்கு வெளியில் வாங்கி தான் உபயோகிக்கிறேன். ஆனால் வீட்டிலேயே நிறைய கிடைக்கும் போது வெளியில் வாங்க சங்கடமாக உள்ளது. எனக்கு பதில் தேவை தோழிகள் தெரிந்தாலும் பதில் சொல்லுங்கப்பா.

பிஸ்கட்டுக்கு நன்றாகவே இருக்கும்.

கேக் நன்றாகத்தான் வர‌ வேண்டும். முன்பெல்லாம் வீட்டில் செய்யும் வெண்ணெயை வைத்துத்தானே கேக் செய்திருப்பார்கள்! வாசனையாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன். //வீட்டிலேயே நிறைய கிடைக்கும் போது வெளியில் வாங்க// எதற்கு வாங்க‌ வேண்டும்! வீட்டுத் தயாரிப்பு என்னும் போது அதில் என்ன‌ இருக்கிறது என்பது எமக்குத் தெரியும். ஒரு தடவை கேக் செய்து பாருங்கள். சுவைக்கும் போது என்ன‌ மாற்றம் செய்ய‌ வேண்டும் என்பது புரிந்துபோகும்.

‍- இமா க்றிஸ்

நன்றி மா.செய்து பார்க்கிறேன். எங்களுக்கு ஒரு 15 பேர் வேலை செய்யும் அளவில் பெரிய டீ ஷாப் இருக்கிறது. வீட்டுக்கு தேவைப்படும் போது பாலாடை கொடுத்து விட சொன்னால் அனுப்பி விடுவார்கள் அதனால் எனக்கு தேவைக்கு நிறைய கிடைக்கும் விற்க மாட்டோம். ஷாப்பில் ஸ்வீட் வகைகளுக்கு நெய்யாக்கி யூஸ் பண்ணிக் கொள்வார்கள். அதனால் தான் ஹோம் மேட் யூஸ் பண்ணலாமானு கேட்டேன். நன்றி மா

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

முன்பெல்லாம் ஐரோப்பிய‌ வீடுகளில் butter churn கொண்டுதான் வெண்ணெய் தயாரித்திருக்கிறார்கள். அந்த‌ வெண்ணெயைத் தான் கேக்குகளிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். butter churn முறைக்கும் மத்தினால் கடைந்து வெண்ணெய் எடுக்கும் முறைக்கும் எந்த‌ வித்தியாசமும் இல்லை.

தற்போதைய‌ கேக்குகள் (குறிப்புகள்) கடைகளில் கிடைக்கும் பட்டரைப் பயன்படுத்திச் சமைப்பவை. பட்டர் கிடைக்காத‌விடத்தில் தாவரக் கொழுப்பு (மாஜரின்) பயன்படுத்தினாலும் குறையேதும் இல்லாமல் கிட்டத்தட்ட அதே பெறுபேறுகள் கிடைக்கின்றன‌. வீட்டுத் தயாரிப்பு வெண்ணெய், மாஜரினுக்கு எந்த‌ வகையிலும் குறைந்தது அல்லவே. முயற்சி செய்யுங்கள். முதலில் சின்னதாக‌ ஒரு கேக், உங்கள் வீட்டாருக்கென்று செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

கண்டிப்பா செய்து பார்க்கிறேன் பார்த்திட்டு சொல்றேன். இன்று பிஸ்கட் செய்ய போகிறேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அன்று பிஸ்கட் செய்த போது ரொம்ப முட்டை ஸ்மெல்லா இருந்தது.இத்தனைக்கும் நன்றாக முட்டையை அடித்து தான் யூஸ் பண்ணேன்.இதற்கு முன்பு செய்த போது கூட அவ்வளவாக ஸ்மெல் வரல.இபோ ரொம்ப ஸ்மெல் வந்தது.என்னால் அதை சாப்பிடவே முடியல.ஆனால் மற்றவர்கள் ஸ்மெல் வந்தாலும் சாப்பிட்டார்கள்.ஸ்மெல் வராமல் பிஸ்கட் செய்ய என்ன பண்ணலாம். சர்ச் பாக்சில் தேடினேன்.நன்றாக அடிக்க வேண்டும் என வந்தது நான் அடித்துதானே செய்தேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

1. வனிலா எசென்ஸ் சேர்த்தீர்களா? சேர்த்தால் வாடை இராது.
2. முட்டையில் வெண்கருவில் திரண்ட‌ நூல் போல‌ ஒரு பகுதி இருக்கும். அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்தினாலும் வாடை வ‌ராது.

என்ன‌ பிஸ்கட் செய்தீர்கள்? இங்கிருந்து எடுத்த‌ குறிப்பு என்றால் லிங்க் கொடுங்கள், பார்த்துச் சொல்லுகிறேன்.

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/28126
முசியின் இந்த பட்டர் பிஸ்கட் அம்மா. வெனிலா எசென்ஸ் சேர்த்தேன் அம்மா. முட்டை வாடை பிடிக்காததால் எப்பொழுதும் குறிப்பை விட கால் தேக்கரண்டி அதிகமாகவே சேர்ப்பேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

பார்த்தேன். முட்டை மஞ்சட்கரு மட்டும்தான் சேர்க்கச் சொல்லியிருக்கிறாங்க‌. அதனால் வனிலா சேர்ப்பது மட்டும்தான் ஒரே வழி. வனிலா எக்ஸ்பைரி டேட் செக் பண்ணீங்களா? அதுவும் சரியாக‌ இருந்தால் முசியின் குறிப்பின் கீழ் கேள்வியை வைக்கலாம். ஆனால் அங்கு ஏற்கனவே உள்ள‌ உங்கள் கேள்விக்கே இன்னும் பதில் வரவில்லை. :‍)

பதில் கிடைக்கும் வரை... வேறு குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

இது புது பாட்டில் தான். போன வாரம் தான் புது பாட்டில் வாங்கினேன். ட்ரை பண்ணி பார்க்கிறேன் வேற குறிப்புகளை . நன்றி இமாம்மா

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்