தடுப்பூசி

என் குழந்தைக்கு 2 நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டென் 1 1/2 வயது ஊசி. ஊசி போட்ட‌ பிறகு நன்றாக‌ தான் நடந்தான். இரவு காய்ச்சல் வந்தது மருந்து கொடுத்தென். காலையில் சரியாகி விட்டது ஆனால் 2 நாட்களாக‌ நடக்க‌ மாட்டென்கிறான் கை பிடித்து நடக்க‌ வைத்தால் அழுகிறான். என்ன‌ செய்வது. ஒத்தடம் கொடுத்தால் சரியாகி விடுமா எப்படி கொடுக்க‌ வேன்டும் கொஞ்சம் உதவுங்கள். ஊசி போட்ட‌ இடம் வீங்கி இருக்கிரது

ஊசி தொடையில் போட்டாங்களா. தடுப்புசி அழுத்தி தேய்க்கக் கூடாது.ஐஸ் கியூப் ஒரு மெல்லிய காட்டன் துணியில் சுற்றி ஒத்தடம் குடுக்கலாம்.

Be simple be sample

ஆம் தொடையில் போட்டாங்கள். இது குளிர் பிரதெசம். ஏற்கனவெ காய்ச்சல் அதான் ஐஸ் கியூப் வைக்க‌ பயமாக‌ உள்ளது

இங்கு தடுப்புசி போட்டவுடன் தேய்க்காமல் ஐஸ்கட்டி ஒத்திடம் தான் டாக்டர் கொடுக்க சொல்லறாங்க. வெந்நீர் ஒத்தடம் கொடுக்கக்கூடாது அப்படின்னு தான் எனக்கு டாக்டர் சொன்னார். லேசான ஒத்திடம் கொடுக்கலாம். மற்ற தோழிகள் யாராவது சொல்கிறார்களா பார்ப்போம்.

Be simple be sample

மேலும் சில பதிவுகள்