தேதி: September 28, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காரட் - 2
பீட்ரூட் - 2
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - ஒன்று
பார்சினிப் - 2
சாட் மசாலா
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைப்பட்டால்
காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய காய்களை ஈரம் போக ஒரு துணியில் உலர்த்தவும். அல்லது வெயிலில் காய வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி காய்கறிகளை போடவும்.

நன்கு வெந்ததும் முறுகலாகப் பொரித்தெடுக்கவும்.

பொரித்தவற்றை ஒரு அகலமான டிரேயில் போட்டு சாட் மசாலா தூவி தேவையானால் உப்பும் சேர்த்து கலந்து விடவும்.

குழந்தைகளுக்குப் பிடித்தமான வெஜிடபுள் சிப்ஸ் தயார். காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும்.

Comments
Hi vaany this looks simply
Hi vaany this looks simply delicious. I am in uk and tried this from M&S,there only this will be good to eat. Your's is very easy to make at home.
How to cut in to thin slice's like yours? How long I should fry them to get the crispness? Thank you.
Looking forward for more
Looking forward for more recipes from you.
வெஜி சிப்ஸ்
சூப்பர் வாணி. பார்ஸ்னிப் & கூம்ரா பொரிச்சு சாப்பிட்டிருக்கிறேன், பிடிக்கும். காரட், பீட்ரூட் புட்துசா இருக்கு. காரட் மட்டும் ட்ரை பண்ணுறேன். :) பாட்டிலில் போட்டு வைக்கிற ஐடியாவும் பிடிச்சிருக்கு.
- இமா க்றிஸ்
சோனாஞ்சலி,
வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி :)
\\How to cut in to thin slice's like yours?\\
உருளையை பஜ்ஜிக்கு வெட்டுவது போன்று வெட்ட வேண்டும்.பெரிய சைஸ் கத்தி இருந்தால் மெல்லிதாக வெட்டுவதற்க்கு வசதியாக இருக்கும். அல்லது ஸ்லைசர் பயன் படுத்தியும் வெட்டலாம்.
How long I should fry them to get the crispness?
எண்ணெயின் சலசலப்பு அடங்கியதும் எடுத்து விடலாம். காரட் & பார்சினிப் சீக்கிரம் வெந்து விடும், அதுவே சர்க்கரை வள்ளி கிழங்கு வேக நேரம் எடுக்கும். பொரிக்கும் முன் நறுக்கிய காய்கறி துண்டுகளில் ஈரப் பதம் இருக்கவே கூடாது. முதல் முறை முயற்ச்சிக்கையில் கொஞ்சமாக செய்து பாருங்கள், அதன் பின் எளிதாக இருக்கும்.
இமா
நன்றி இமா :)
கூம்ரா என்னவாக இருக்கும் ?!!
கூம்ரா
நியூஸி சர்க்கரைவள்ளி. kumara என்று எழுதுவோம்; உச்சரிப்பு கூம்ரா போல கேட்கும். :-)
- இமா க்றிஸ்
Thanks vaany.
Thanks vaany.