தேதி: October 2, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தினையரிசி - 3/4 டம்ளர்
கடலைப்பருப்பு - கால் டம்ளர்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
முருங்கைக்கீரை - அரை கப்
பல்லாரி - ஒன்று
சீரகம் - கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
காயம் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தினையரிசி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

முருங்கைக்கீரை, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த பருப்பு வகைகளை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கீரையை லேசாக வதக்கி எடுக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் மாவுடன் மஞ்சள் பொடி, காயம், உப்பு, மிளகாய் பொடி, சீரகம் மற்றும் வதக்கிய கீரை வெங்காயத்தை சேர்க்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உப்பு சரிப் பார்த்து வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடையாக ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

முறுகலான அடையை வெண்ணெய், வெல்லம் வைத்து சூடாகப் பரிமாறவும்.

Comments
நிகி அக்கா
தினையரிசி கீரை அடை பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு,
உங்க ராகி தோசை செய்து சாப்பிட்டாச்சு டேஸ்ட் சூப்பர்.
கம்பு தோசையும் செய்தாச்சு அது ரேவா அக்கா குறிப்புனு நினைக்கிறேன், அதுவும் சூப்பர்.
நெக்ஸ்ட் அடை தான்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
நிகி
அரசி கீரை இரண்டுமே ரெடியா இருக்கு... கட்டாயம் செய்து பார்க்கிறேன் :) ரொம்ப சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுபி
ராகி தோசை செய்தீங்களா. ரொம்ப சந்தோசம் சுபி.
இதுவும் நல்லாருக்கும். நீங்க தானே சிறுதானிய குறிப்புகளை ஆர்வமா கேட்டீங்க.
செய்து பாருங்க சுபி:)) ரொம்ப எளிய குறிப்பு.
வனி
எல்லாமே வீட்டில் இருந்தால் உடனே செய்யலாம். செய்துட்டு படம் காட்டுங்க..
நீங்க தந்த லின்க் ஆச்சே...
சுவையான, ஹெல்தியான குறிப்பு.
நன்றி வனி:))
நிகி
அன்பு நிகி, நலமா? ரொம்ப நாளா செய்ய முடியாம போச்சு, சில நேரம் செய்தும் படம் எடுக்க முடியல. அடிக்கடி செய்யறேன் இந்த அடை. எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. படம் க்ரூப்ல போட்டிருக்கேன். சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி நிகி. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அன்பு வனி
நான் ரொம்ப நல்லா இருக்கேன்.
இணையம் பக்கம் அடிக்கடி வர முடியல. கொஞ்சம் பிசி.
க்ரூப்ல படம் பார்த்தேன். நீங்க தந்த லின்க் ஆச்சே. சும்மாவா...
தினையரிசி ரொம்பவும் நல்லது. இறைவனுக்கு தேனும் தினை மாவும் படைப்பாங்களே. சிறு தான்யத்தில் சிறந்தது தினையரிசி.
உங்க வீட்ல அனைவருக்கும் பிடிச்சதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி வனி:)