
நம் முன்னோர் அழகான வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல கருத்துகளை ஒரு வரியில் அல்லது சிறு வாக்கியத்தில் அழகாக சொல்லி சென்றனர். அவை அனைத்தும் சிறிதாக இருந்தாலும் ஆழமான கருத்துக்களை கொண்டவை. ஆனால் அதன் பின் (அவர்களுக்கு அடுத்து) வந்த நம் முன்னோர் அந்த வாக்கியங்களுக்கு வேறு அர்த்தத்தை கூறினர். நாமும் அதையே பின்பற்றுகிறோம். ஆனால் நம்மில் பலர் அந்த பழமையான மொழிக்கு உண்மையான அர்த்தம் அறியவில்லை. அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் எனக்கு தெரிந்த நான் சரியான பொருள் தெரிந்து கொண்ட பழமொழியின், இப்போது உள்ள அர்த்தத்தையும் உண்மையான அர்த்தத்தையும் கூற உள்ளேன்.
1. கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே:
நாம் யாராவது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் கப்பலா கவிழ்ந்துடுச்சி. இப்படி கன்னத்துல கை வச்சி இருக்கியேனு பெரியவங்க கேப்பாங்க. இது இப்போ இருக்க அர்த்தம்.
இதன் உண்மையான அர்த்தம்:
இங்கு வரும் கன்னம் என்பதின் பொருள் திருட்டு என்பது ஆகும். ஒருவர் கப்பல் வைத்து இருக்கும் அளவு வசதி படைத்தவராக இருந்து அவர் கப்பல் எல்லாம் கவிழ்ந்து ஏழையாக ஆனாலும் (கன்னம் - திருட்டு) திருட்டில் கை வைக்காதே. (திருடாதே)
2. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்.
யாராவது திருந்தலனா அடிச்சி திருத்தனும். அடி உதவற மாறி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்கனு நாம எல்லாம் நினைத்து இருக்கோம்.
ஆனால் உண்மையான அர்த்தம்:
இதற்கு பல அர்த்தம் உண்டு.
i) தம்பி பரதன் அண்ணனான இராமனை ஆட்சி பொருப்பை ஏற்க சொல்லி கெஞ்சும் போது அவனுக்கு உதவாமல் இராமன் காடாள சென்றான். அந்த நேரத்தில் இராமனுடைய அடியை (பாதணி) எடுத்து வந்து பரதன் ஆட்சி செய்தான். அண்ணனே உதவாத போது அவருடைய அடி தான் உதவியது என்பதை குறிக்கும் வகையில் இது சொல்ல பட்டது.
ii) பகவான் திரு அடிகளே சரணம் என இறைவன் பாதங்களில் சரண் அடையும் போது அந்த இறைவன் திரு அடிகள் நமக்கு உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பது இன்னுமொரு அர்த்தம்
iii) நாம் வாழ்க்கையில் நொந்து இருக்கும் நேரத்தில் நம் அண்ணன் தம்பிகளே கூட உதவிக்கு வராத நிலையில் நாம் முன்னேறி செல்ல நம் கால் அடிகளே நமக்கு உதவும் என்பது இன்னுமொரு அர்த்தம்.

3. ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்
யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்னு நாம தப்பா நினச்சிட்டு இருக்கோம்.
ஆ (பசு) நெய் - பசு நெய், பூ நெய் - பூவிலிருந்து வண்டு எடுக்க கூடிய நெய்யாகிய தேன். குழந்தை பருவத்தில் குழந்தைக்கு பசு நெய் ஊட்டி வளர்ப்போம். அதேபோல வயதான காலத்தில் மருத்துவத்திற்கு அல்லது முதியோருக்கு தேன் நல்லது. பிறந்த அனைவரும் குழந்தையாகவே இருக்க மாட்டோம். பசு நெய் சாப்பிடும் ஒருவர் கட்டாயம் தேனையும் சாப்பிட வேண்டி வரும். பிறப்பு என்பது போல இறப்பும் உறுதி என்பதே இதன் பொருள்.
இது ஆனை பூனை இல்லை. ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும். என்பதே ஆகும்
4. மாமியார் உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன் சட்டி:
இது ஏறதாழ அதே அர்த்தத்தோடு தான் காணப்படுகிறது. ஒரு சாதாரண மண் சட்டியை மாமியார் உடைத்து விட்டால் அது தேவையில்லாத ஒன்று தான் பரவாயில்லைனு சொல்வாங்களாம். ஆனால் அதே மண்சட்டியை மருமகள் உடைத்தால் அய்யோ அது என் பரம்பர சொத்து பொன் மாறி காப்பாத்தி வந்தனே அதை போய் உடைச்சிட்டியேனு மருமகளை குத்தம் சொல்வாங்களாம். மருமகள் எது செய்தாலும் மாமியார் குறையாக தான் எடுத்துக் கொள்வார் என்பதே இதன் பொருள்.
5. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாதுனு நாம நினைச்சிட்டு இருக்கோம்.
ஆனால் கழு என்பது பாய் நெய்ய பயன்படும் ஒரு வகை தாவரத்தண்டு. அது கற்பூர வாசனையுடன் இருக்கும். அதை தண்ணீரில் ஊறவைத்து பதப்படுத்தி தான் பாய் நெய்ய முடியும். அப்படி நெய்யும் போது அதன் கற்பூர வாசனை அழிந்து விடும். கழு தைத்த பின் கற்பூர வாசனை தெரியாது என்பதையே நாம் இப்படி புரிந்து கொண்டுள்ளோம்.
இது கழுதைக்கு இல்லை கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை.

6.கழுதை கெட்டா குட்டி சுவர்
யாராவது தப்பு செய்தால் கழுதை கெட்டா குட்டி சுவர். இப்டி தான் இருக்கும்னு நாம திட்டுவோம்.
ஆனால் இதன் உண்மையான பொருள். கழுதைக்கு எட்டா குட்டி சுவர்.
கழுதையால் தாண்ட முடியாது. அது என்றும் முயற்சித்ததும் இல்லை. அதனால் அதற்கு குட்டி சுவர் கூட எட்டுவதில்லை. அதை போல முயற்சி இல்லாதவர்க்கு எந்த ஒரு விஷயமும் கைக்கு எட்டாது.
7. பொன்னு கிடச்சாலும் புதன் கிடைக்காது:
இது ஒரு அறிவியல் சார்ந்த பழமொழி. நாம நினைச்சிட்டு இருக்கோம். கல்யாணத்துக்கு பொண்ணு கிடைத்தாலும் கல்யாண தேதி புதன் கிழமைகளில் கிடைக்காது என்று. ஆனால் இதன் உண்மை அர்த்தம் பொன் என்றால் தங்கம். இப்போ தங்கம் விக்கற விலையில யாரும் அதை கீழே போட மாட்டாங்க. அப்படியே நம் கண்களுக்கு பொன் கீழிருந்து கிடைத்தாலும் புதன் கிரகம் (மெர்குரி) நம் கண்களுக்கு கிடைக்காது (அகப்படாது) என்பதே இதன் உண்மை பொருள்.
இன்னும் சில பழமொழி அடுத்த வலைபதிவில் வரும். உங்களுக்கு தெரிந்ததையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Comments
பால சிஸ்
ரொம்ப அருமையான வலைப்பதிவு, ஆஹா அருமையான விளக்கம் எல்லா பழமொழிக்கும். சூப்பர் .
முன்னோர்கள் சரியா அழகா ஆழமா சொல்லிவிட்டுச் சென்ற பழமொழிகளை இடையில வந்தவங்க ரொம்பவே மாத்திட்டாங்க,
இப்போ எல்லாரும் அதை புரிஞ்சிகிட்டு சரியான அர்த்தம் தெரிஞ்சுக்கிறாங்க.
எனக்கு தெரிந்தவை:
1) ஆப்பையில இருந்தா தான் சட்டி ல வரும்னு சொல்வாங்க
ஆனா அது தவறு " சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு வளரும்" தான் சரி,
2) "ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்"
இது தவறு அகத்துல போட்டாலும் அறிந்து போடனும்" இதான் சரி.
ஆத்துல இல்ல அகத்துல அதாவது மனசுல
பலவிதமான கருத்துகளை நாம் கேட்போம் , பார்ப்போம் அப்போ
அவையெல்லாத்தையும் சரியா அறிந்து அகத்துல நினைவு வச்சுக்கனும்னு அர்த்தம்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
அன்பு சுபி
முதலில் நன்றி. உங்கள் பழமொழியும் விளக்கமும் அருமையாக உள்ளது.
அருமையான விளக்கங்கள். ஆனால் சிறு பிழை திருத்தம். அது "ஆப்பையில இருந்தா தான் சட்டி ல வரும்" இல்லை சட்டி ல இருந்தா தான் ஆப்பையில வரும் அதாவது சஷ்டியில் விரதம் இருந்தால் முருகன் அருளால் நம் அகப்பை (கருப்பை)யில் கரு வரும் என்பதே இப்படி ஆயிற்று. அருமையான விளக்கம் சுபி. நன்றி.
எல்லாம் சில காலம்.....
பாலா
எனக்கு இதெல்லாம் தெரியாதுங்க... ரொம்ப அருமை. ரொம்ப நாளைக்கு பின் ஒரு வலைப்பதிவை நான் நிதானமா ஒவ்வொரு வரியா படிச்சிருக்கேன்னா அது உங்களோடது தான். :) சூப்பர். படிச்சதும் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமா அழகான தெளிவான விளக்கம். கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கன்னமிடுதல்
//இரண்டு சுழி ன் தான் முகத்தில் உள்ள கன்னம்.// ஆமாம். இது சரி.
//கண்ணத்தில் கை வைக்காதே:// இங்கும், 'கன்னத்தில்' என்றே தான் வரவேண்டும் சகோதரி.
//இங்கு வரும் கண்ணம் என்பதின் பொருள் திருட்டு என்பது ஆகும்.// !!! எங்கு, 'கண்ணம்' என்று வருகிறது!!
நீங்களும் குழம்பி எல்லோரையும் குழப்புகிறீர்கள். :-) அங்கும், 'கன்னம்' என்றே தான் வரவேண்டும். நீங்கள் தான் தவறாகத் தட்டச்சு செய்திருக்கிறீர்கள்.
//(கண்ணம் - திருட்டு)// :-) இணையத்தில் கண்ணமிடுதல், கன்னமிடுதல் இரண்டையும் தனித்தனியே தட்டித் தேடிப் பாருங்கள், எது சரியான சொல் என்பது புரியும்.
- இமா க்றிஸ்
வனி அக்கா
உங்க கமென்ட் கேட்டு எவ்ளோ நாள் ஆகுது. அது என்னமோ உங்க கமென்ட் பாத்தாலே ஒரு சந்தோஷம். ஏன்னு தெரில. மிக்க நன்றி அக்கா.
எல்லாம் சில காலம்.....
இமா அம்மா
நானும் குழம்பலை உங்களையும் குழப்பலை இமா அம்மா. தெளிவாகவே போட்டு இருக்கேன். கப்பல் கவிழ்ந்தாலும் கண்ணத்தில் (திருட்டில்) கை வைக்காதே என்பதே இதன் உண்மை பொருள். முகத்தில் உள்ள கன்னத்தில் கை வைக்காதே என்பது இல்லை.
எல்லாம் சில காலம்.....
கன்னம்
//உங்களையும் குழப்பலை இமா அம்மா.// :-) நான் குழம்பவில்லை குட்டிப் பெண்ணே! உங்கள் இடுகையிலுள்ள அந்த வரிகளைப் படிக்கும் யாராவது தப்பான சொல்லைச் சரியென்று கொள்ளப் போகிறார்களே என்கிற கவலையில் சொன்னேனே தவிர குற்றம் பிடிக்கும் நோக்கில் அல்ல.
//தெளிவாகவே போட்டு இருக்கேன்.// :-) ஆமாம், அது தட்டச்சின் போது தற்செயலாக நேர்ந்த எழுத்துப்பிழை அல்லவென்பது எனக்குத் தெளிவாகவே புரிந்தது. கண்டும் காணாதது போல் போக முடியவில்லை. நீங்கள் என் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை பாலா, விட்டுவிடலாம்.
//(திருட்டில்) கை வைக்காதே என்பதே இதன் உண்மை பொருள். முகத்தில் உள்ள கன்னத்தில் கை வைக்காதே என்பது இல்லை.// ;))) நீங்கள் நான் சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. //முகத்தில் உள்ள கன்னத்தில் கை வைக்காதே என்பது இல்லை.// இதை நான் தப்பென்று எங்கும் சொல்லவே இல்லையே! :-)
நான் பழமொழிக்கான உங்கள் விளக்கத்தை விமர்சிக்கவில்ல சகோதரி; எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டினேன். முகத்திலுள்ளதும் க'ன்ன'ம்; திருட்டும் க'ன்ன'ம். எதிலும் ணகரம் வராது; னகரம் மட்டுமே வரும் என்கிறேன்.
ஒரு சொல் / ஒரே உச்சரிப்பு; அர்த்தம் மட்டும் இடத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. கன்னம் என்கிற சொல்லுக்கு திருட்டு, முகத்திலுள்ள கன்னக் கதுப்பு என்னும் இரு அர்த்தங்களுடன் காது, பெருமை என்னும் இரு அர்த்தங்களும் கூட உள்ளன.
ஆதாரம்... கழகத் தமிழ்க் கையகராதி - பக்கம் 123
கண்ணம் என்பது திருட்டு அல்ல. சொல்லப் போனால்... அது ஒரு சொல்லே அல்ல.
- இமா க்றிஸ்
பாசத்திற்குரிய பாலா
பல பழமொழிகள் சொல்லி இருக்கீங்க. எல்லாமே அருமை. காலப்போக்கில் அர்த்தங்கள் மாறி விடுகின்றன.
இப்படித்தான் நமது இதிகாசங்களில் கூட இடைச்செருகல்கள் தோன்றிவிடுகின்றன.
கன்னத்தில் கை வைத்திருக்கும் குழந்தை முகத்தில் ஏகப்பட்ட சோகம்.
பால நாயகி
ஹாய்,
''கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை'''இந்த பழமொழிக்கு கொடுத்த விளக்கம் மிக அருமை. நல்ல பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
பாலா க்கா
ஓ சாரி, உங்க பதிவை படிச்சிட்டு பதிவிடாம போக மனசு வரல, அவசரத்துல மாத்தி டைப் பண்ணிட்டு போய்ட்டேன்.......
திரும்ப மாத்தலாம்னு வந்தேன் அதுக்குள்ள நீங்க பதிலளி போட்டுடீங்களா அதான் மாத்த முடியல.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
இமா அம்மா
மன்னிக்கவும். நான் திருட்டு என்று அர்த்தம் தரும் கன்னத்திற்கு "ண்" என்று நினைத்து விட்டேன். திருத்தியமைக்கு நன்றி. நானும் திருத்தி விடுகிறேன். அழகான விளக்கம். உங்களை டார்லிங்னு சொல்லனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஒரு தடவ மட்டும் சொல்லிக்கறேன். என் செல்ல இமா டார்லிங். இவ்ளோ அழகா வேற யாரு சொல்லி தருவாங்க சொல்லுங்க. நீங்க இப்டி சொல்ல வேணாம்னு சொன்னாலும் எனக்கு நீங்க டார்லிங் தான். நன்றி இமா அம்மா.
பின் குறிப்பு: இதுக்குலாம் கோச்சிட்டு கோவமா அடுத்த பதில் தரக்கூடாது. அன்பா எதிர்ப் பார்க்கிறேன்.
எல்லாம் சில காலம்.....
அன்பு தோழி நிகி
நன்றி நிகி.
//எல்லாமே அருமை. காலப்போக்கில் அர்த்தங்கள் மாறி விடுகின்றன.// இன்னும் நிறைய இருக்கு நிகி. எனக்கு தெரிந்தவற்றை மட்டுமே கூறியுள்ளேன்.
//கன்னத்தில் கை வைத்திருக்கும் குழந்தை முகத்தில் ஏகப்பட்ட சோகம்.// அப்படி சோகமா கன்னத்தில் கை வைத்திருந்தால் தான் கப்பலா கவிழ்ந்துடுச்சி கன்னத்துல கை வச்சி இருக்கனு கேப்பாங்க. அதான் அப்டி ஒரு ஃபோட்டோ போட்டேன்.
எல்லாம் சில காலம்.....
ரஜினி அம்மா
நன்றி ரஜினி அம்மா.....
எல்லாம் சில காலம்.....
பழம் :)
//கோச்சிட்டு கோவமா அடுத்த பதில் தரக்கூடாது. அன்பா எதிர்ப் பார்க்கிறேன்.// ;)))))))) தப்பா தட்டினா... தப்பாமல் அன்பா கோபிச்சிட்டு கோபமா பதில் போடுவேன். ;)
- இமா க்றிஸ்
அன்பு சுபி
சாரிலாம் எதுக்கு? இது நல்லா இல்லை. வேறு யாருமே சொல்லாத சொல்ல வராத பழமொழிக்கு நீங்க அழகா சொல்லி கருத்து சொன்னது ரொம்ப அழகு. அதில இருந்த சின்ன கவன குறைவை மட்டும் தான் நான் சொன்னேன். எனக்கு எவ்ளோ தப்பு வருது. இந்த வலை பதிவுலயே என்னோட ஒரு பிழையை இமா அம்மா சொல்லி இருக்காங்க. இது சகஜம். இதுக்கு சாரி சொல்றது தான் தப்பு. இயல்பா எடுத்துக்கோங்க தோழி. உங்க கருத்துக்கு மிக்க நன்றி. அதிலும் ஒன்றுக்கு இரண்டாக பழமொழி தந்து அசத்தியதற்கு மிக மிக நன்றி. நீங்க கல்க்கிட்டீங்க சுபி. அருமை.
எல்லாம் சில காலம்.....
//தப்பா தட்டினா... தப்பாமல்
//தப்பா தட்டினா... தப்பாமல் அன்பா கோபிச்சிட்டு கோபமா பதில் போடுவேன். ;)//புரிஞ்சிடுச்சி... நல்லா தெளிவா புரிஞ்சிடுச்சி.... கோபமா கோச்சிக்காம இருந்தா சரி தான். ;)
எல்லாம் சில காலம்.....
பாலா
பழமொழியின் உண்மையான அர்த்தங்கள் இப்ப தான் தெரியுது. ஆனால் இன்னுமே எல்லாரும் தவறான அர்ர்த்தத்துடன் தானே அதை பயன்படுத்துறாங்க. எல்லாரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவு.
தேவி
நன்றி தேவி. நிறைய பேர் தெரியாமல் தப்பாக உபயோகிக்கின்றனர். நாமாவது தெரிந்து கொண்டு நமக்கு தெரிந்தவர்க்கும் புரிய வைக்கலாம்.
எல்லாம் சில காலம்.....
இமா
//தப்பா தட்டினா... தப்பாமல் அன்பா கோபிச்சிட்டு கோபமா பதில் போடுவேன். ;)//புரிஞ்சிடுச்சி... நல்லா தெளிவா புரிஞ்சிடுச்சி.... கோபமா கோச்சிக்காம இருந்தா சரி தான். ;)
எல்லாம் சில காலம்.....