அந்த‌ ஏழு நாட்கள்

சுந்தரிக்கும், மகனுக்கும் நடக்கும் இரண்டாம் நாள் சவால்.
மெனு_‍‍__பூரி+ பருப்பு கதம்பக் கூட்டு.
குக்கரில் ஒரு சிறிய‌ டம்பளர் துவரம் பருப்பு போட்டாள். அதில் பொடியாக‌ நறுக்கிய‌ கோஸ், பீன்ஸ், கேரட், கத்தரிக்காய், உருளை, நூல்கோல், குடை மிளகாய் சேர்த்தாள். பொடியாக‌ நறுக்கிய‌ வங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்தாள். பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து குழைவாக‌ வேக‌ வைத்தாள். எண்ணையில் கடுகு, சீரகம், பெருக்காயம், சிறிது உளுத்தம் பருப்பு, கரிவேப்பிலை சேர்த்து தாளித்தாள். பச்சை வாசனை போகும் வரை கொதிக்க‌ வைத்து, கொத்தமல்லி இலையை பொடியாக‌ நறுக்கி சேர்த்தாள். கமகம‌ என்று பருப்பு காய்கறி கதம்பக் கூட்டு தயார் ஆனது. வட்டமான‌ தட்டில் பொன்னிறமான‌ ஆறு பூரிகளை வைத்து, பக்கத்தில் காய்கறி கதம்பக் கூட்டினை ஒரு கிண்ணம் நிறைய‌ வைத்து, தன் மகனுக்கு கொடுத்தாள். மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு தங்களுக்கு என்ன‌ மதிப்பெண் கிடைத்தது என்று அறிந்துக் கொள்ளும் ஆவலில் இருப்பார்களோ அந்த‌ நிலையில் இருந்தாள் சுந்தரி. தன் தாயின் பரபரப்பை பார்த்துக்கொண்டே பூரிகளை சாப்பிட்டான் மகன் பாபு. ம்ம்ம் என்னும் முனகலுடன் எல்லோரையும் ஒரு பார்வைப் பார்த்தான். '''IT'S ALL RIGHT. O.K..BETTER.''என்று மதிப்பெண் கொடுத்துவிட்டு கூலாக‌ சென்றான். உடனே தன் கணவனிடம், ''நேற்று 35 மார்க்; இன்று 45 மார்க்;'' என்று ஆனந்தக் கூச்சலிட்டாள். கணவனும், தன் மனைவிக்கு ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க‌ விட்டான். தாத்தாவும், பாட்டியும் ஒருவருக்கொருவர் ஹைபை கொடுத்துக் கொண்டனர்.

மூன்றாம் நாள் மெனு'''பூரி+சாலட்

ஊற‌ வைத்த‌ கொண்டைகடலையை வரமிளகாய், பூண்டு, உப்புடன் சேர்த்து கரகரப்பாக‌, கெட்டியாக‌ அரைத்தாள். ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை பொடி, சிறிது மைதா மாவு சேர்த்தாள். பொடியாக‌ நறுக்கிய‌ வங்காயம், கரிவேப்பிலை சேர்த்து நன்றாக‌ பிசைந்தாள். சிறிய‌, சிறிய‌ உருண்டைகளாக‌ உருட்டி எண்ணையில் பொரித்தாள். தயரில், கொத்தமல்லி+பச்சை மிளகாய்+ உப்பு சேர்த்து நன்கு கலக்கினாள். அதில் பொரித்த‌ உருண்டைகளைப் போட்டு, கேரட் துருவலை தூவி சாலட்டை அலங்கரித்தாள். பாபு ஆறு பூரியையும், சாலட்டையும் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டான். தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தாயை, தந்தையை, பாட்டியை, தாத்தாவை சிரிப்புடன் பார்த்தான். '''O.K.,O.K. DON'T AFRAID. BETTER AND GOOD FOR YOUR MENU'' என்று சொல்லி ஓடி விட்டான். மாமனார், மாமியார் மற்றும் தன் கணவரின் பாரட்டு மழையில் சுந்தரி '''பூரியாக‌ பூரித்து'''நின்றாள்.

5
Average: 5 (1 vote)

Comments

நானும் கதம்பகூட்டு செய்து பார்க்க போறேன். பூரிக்கு நல்லாருக்குமா. பூரி ஆசையை கிளப்பி விட்டுட்டிங்களே... டயட் இருக்க விட மாட்டறாய்ங்களே.

Be simple be sample

உங்கள் கதையை படித்து நாங்கள் பூரிக்கிறோம்...

"Patience is the most beautiful prayer !!!"

ஹாய்,
'''பூரி ஆசையை கிளப்பி விட்டுட்டிங்களே''. பூரி செய்யும் போதே சைட்டிஷ் இல்லாமலே நாலுப் பூரியை சத்தம் இல்லாமல் உள்ளே தள்ளும் ரகம் நான்.
'''பூரி சாப்பிட்டு பூரிப்பா இருப்போர் சங்கம்'''ஆரம்பித்து விடலாம், கவலையே படாதீங்க‌ ரேவதி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

''உங்கள் கதையை படித்து நாங்கள் பூரிக்கிறோம்'''பூரிக்கு இவ்வளவு மௌஸ்ஸா? நீ பூரித்தா ரொம்ப‌ சந்தொஷம்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ரஜினிம்மா கதை அருமை. எல்லாரும் கதை கருக்கு யோசிப்பாங்க நீங்க பொசுபொசு பூரிய வச்சே கதைய உருவாக்கிட்டீங்க. அதுவும் அறுசுவைக்கு ஏத்தது போல. மீதி கதைக்கு வெயிட்டிங் நோ நோ மற்ற சைட் டிஷ்க்காக வெயிட்டிங்க.

எனக்கும் பூரி ஆசையைத் தூண்டிவிட்டிருக்கிறீங்க‌ ரஜினி. :‍) அதோட கூடவே ஒரு ஆங்கிலக் கதை படிக்கும் ஆவலையும் தூண்டிவிட்டிருக்கிறீங்க.

கதை கலக்கலா போகுது ரஜினி. இன்னும் 4 நாள்தான் இருக்கா! ஒரு வாரத்துக்கு 10 நாள்னு இருந்திருக்கலாம் என்று இப்பவே நினைக்க‌ வைக்கிறீங்க‌. :‍) இணையத்துக்கு வந்ததும் நேரே இங்கதான் வந்திருக்கிறேன்.

நான் தற்போது வேலைபார்க்கும் பாடசாலையில், அதிபர் திடீர் திடீரென்று எதையாவது bake செய்து எடுத்து வருவார். அவர் தோழி சிரித்துக் கொண்டே, "Did you pick this recipe from your 'Murder' book?" என்பார், எங்களையும் அதே மாதிரிக் கேட்கச் சொல்லுவார். :) 'Recipe for Murder' என்று ஒரு புத்தகத்தை தோழி அதிபருக்குப் பிறந்தநாட் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சமையற் குறிப்பு வருமாம் என்றார்கள். இப்போ உங்கள் கதையைப் படிக்கும் போது அந்தக் கதையையும் படித்துவிட‌ ஆவல் வருகிறது.

//வங்காயம், கரிவேப்பிலை// எப்பவும் இப்படித்தான் சொல்லுவீங்களா? நான் எப்பவும் வெண்காயம் என்றுதான் எழுதுவேன். ஒரு தோழி என்னைக் கலாய்ப்பாங்க‌. அவங்க‌ 'கிக் கிக்' சொல்லிச் சொல்லியே... சில இடங்களில் வெங்காயம் என்று எழுதினேன். ஆனாலும் வெண்காயம் என்று எழுதினால்தான் திருப்தியாக இருக்கும் எனக்கு.

‍- இமா க்றிஸ்

சுந்தரி பூரியாக பூரித்து நின்றாள். ரசித்து படித்தேன் இந்த வரியை. எப்படியோ ஒரு நல்ல கதையுடன் ரெசிப்பியும் கிடைக்குது நன்றி.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ரெசிபிலாம் சூப்பரா இருக்கு. அழகா கதை சொல்ற‌ மாறி ரெசிபியும் சொல்றீங்க‌. ரெண்டுமே சூப்பரா இருக்கு. 3 நாள் முடிஞ்சிடுச்சி. இன்னும் 4 சைடு டிஷ் காக‌ வெயிட்டிங். சீக்கிரம் அனுப்புங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

ஹாய்,
என்னுடைய‌ புதிய‌ தோழியே தேவியே ''வாழ்க‌ வளமுடன்''வாழ்த்துக்கள்மா. ''நீங்க‌ பொசுபொசு பூரிய‌ வச்சே கதைய‌ உருவாக்கிட்டீங்க‌'''பூரிக்கு இவ்வளவு பாராட்டா. சந்தோஷத்தில் என் மனசு பூரித்து போயிடுச்சு. பாராட்டுக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
''RECIPE FOR MURDER''அருமையான‌ + அர்த்தமுள்ள‌ வாக்கியம். ரெசியில் கொஞ்சம் சொதப்பிட்டோம் என்றால் கூட‌ அந்த‌ ரெசிபியே மர்டர் ஆகிவிடும். வெங்காயம் என்பதே சரியானது. ;;வெண்காயம்''என்பது நான் அறியாத‌ புதிய‌ சொல். நன்றி இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
எனது புதிய‌ தோழியே வணக்கம். ''சுந்தரி பூரித்து நின்றாள். ரசித்து படித்தேன்'' எனது பதிவை பாராட்டியதற்கு நன்றி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
''ரெசிபி எல்லாம் சூப்பர‌ இருக்கு''பாராட்டுக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

//வங்காயம், கரிவேப்பிலை// எப்பவும் இப்படித்தான் சொல்லுவீங்களா?// என்று கேட்டிருந்தேன். சில‌ இடங்களில் பல்லாரி என்கிறார்கள்; சிலர் உள்ளி என்கிறார்கள் என்பது அறுசுவைக்கு வந்த‌ பின்னால் நான் அறிந்து கொண்டது. உங்கள் பக்கம் வங்காயம் என்னும் சொல் வழக்கில் உள்ளதோ என்று அறிந்து கொள்வதற்காகக் கேட்டேன். கறிவேப்பிலை / கருவேப்பிலை ‍‍‍‍‍‍‍‍‍‍அறிவேன். நீங்கள் கரிவேப்பிலை என்று எழுதியிருந்தது என் கவனத்தை ஈர்த்தது. கரிவேப்பிலைக்கும் கருவேப்பிலைக்கும் கருத்தில் எந்த‌ வேறுபாடும் இல்லை. இந்த‌ அவதானம் சுவாரசியமாக‌ இருந்தது. அதனால் வந்த கேள்வி அது. உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வெந்தியம் என்றும் எழுதியிருந்தீர்கள். எங்கள் பக்கம் வெந்தயம் அல்லது உலுவா / உலுவா அரிசி என்றும் சொல்வோம். :‍) உலுவா என்பது சிங்கள மொழியிலிருந்து வந்து கலந்த‌ சொல்லாக‌ இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.

//வெங்காயம் என்பதே சரியானது.// அதிகம் புழக்கத்திலுள்ள‌ சொல் வெங்காயமே என்றாலும் வெங்காயம், வெண்காயம் இரண்டுமே சரியான‌ சொற்கள் தான். முன்னால் என் தோழி கலாய்த்ததும் நான் செய்த‌ முதல் வேலை கையில் கிடத்த‌ அகராதிகளையெல்லாம் ஆராய்ந்து பார்த்தது. இணையத்தில், 'வெண்காயம்' என்று தட்டித் தேடிப் பாருங்கள். அப்படி ஒரு சொல் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

வேதாகமத்தில் வெண்காயம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எங்களிடத்தில் வேலை செய்யும் BIHAR‍-லுள்ள‌ பையன்கள் வங்காயம் என்று சொல்கிறார்கள். சிறிய‌ வெங்காயத்தை உள்ளி எனவும், பெரிய‌ வெங்காயத்தை பல்லாரி எனவும் நாங்கள் கூறுகிறோம்.

அன்புடன்
ஜெயா

ஹாய்,

''வங்காயம், வெந்தியம், கரிவேப்பிலை'''இந்த‌ சொற்கள் எல்லாம் பேச்சு வழக்கு சொற்கள். அதில் வந்த‌ குழப்பம். ஆசிரியரான‌ நமக்கு தவறுகள் சட்டுனு தெரிந்துவிடும். காதல் கடிதம் கொடுத்தால் கூட‌ அதிலும் எழுத்துப்பிழையை கண்டுப்பிடிப்பவர் ஆசிரியர் என்று ஒரு ஜோக்கே உள்ளது. நன்றி இமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு