தோழிகளே...எனக்கு ஒரு உதவி

தோழிகள் அனைவரும் நலமா. எனக்கு ஒரு உதவி. என் பேத்திக்கு 3வயது ஆகுது.எதுவும் சாப்பாடு சாப்பிடமாட்டேங்கிறா.ஜூஸ் பால்.பழம் கேரட் இது எப்பவாவது.சோயாமில்க்தான் அடிக்கடி கேக்குரா.அதிகமா குழந்தைகள் குடிக்க கூடாதென்று பக்கத்தில் உள்ளவங்க சொல்ராங்க.சோயாமில்க் கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்க

poongothaikannammal தமிழில் உங்கள் பெயர் தப்பா போட்டிருந்தா மன்னிக்கவும்

Nikila தமிழில் உங்கள் பெயரை தப்பா போட்டதுக்கு.மன்னிக்கவும்

Imma உங்கள் பெயரை தவறாக போட்டதுக்கு மன்னிக்கவும்

surejini உங்கள் பெயரை தப்பா போட்டதுக்கு மன்னிக்கவும்

நான் முதலில் போட்ட பதிவு 4 முறை பார்த்து பார்த்து அடித்தேன்.

:‍) நிஷா, நான் என் பெயரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே! எதற்காக‌ மன்னிப்பு எல்லாம்! இப்போது சொற்களுக்கு இடையே இடைவெளி சரியாக‌ விட்டிருக்கிறீங்க‌. நல்ல‌ பொண்ணு. இதை நினைவு வைத்திருந்து எப்பொழுதும் சொற்கள் இடையே ஸ்பேஸ் தட்ட‌ வேண்டும். சரிதானே! அல்லாவிட்டால் அறுசுவை அமைப்பில் பிரச்சினை ஆகும்.

சிலர் இடுகைகளின் கீழே பெயரைத் தமிழில் போட்டிருக்கிறார்கள். காப்பி பண்ணிப் போடுவது வேலையும் சுலபம், தப்பாகாகவும் வராது.

‍- இமா க்றிஸ்

முதலில் உங்களை வருத்தப்படுத்தியதற்காக‌ என்னை மன்னிக்கக் கோருகிறேன். நான் அப்படித் தட்டியிருக்கக் கூடாதுதான். மன்னித்துக் கொள்ளுங்கள்.

//தமிழில் பிழை இல்லாமல்// அவ்வ்! எனக்கே ஒழுங்காகத் தமிழ் தெரியாதே! :‍) தமிழைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை விஜி.

//டென்ஷன்// நீங்கதான் டென்ஷன் ஆகி இருக்கீங்க‌ குட்டிப் பெண்ணே! :‍))

//ஆகாதீங்க‌ ஸ்பேஸ் பயனில்லை//
//உள்ளது ஸ்பேஸ் தமிழில்//
//முயற்சிப்போம் ஸ்பேஸ் கனிவாகவும்//
புள்ளிகள் வைத்தாலும் ஒரு 3 புள்ளிகள் தட்டிவிட்டு மறக்காமல் ஸ்பேஸ் தட்டுங்க‌. அல்லாவிட்டால் ஒரு நீளமான‌ சொல் போல் ஆகிவிடுகிறது.

அன்பாகத்தான் சொல்கிறேன். முயற்சிப்பதாகச் சொல்லியிருக்கிறீங்க‌. அடுத்த‌ தடவை நினைவு வைத்துச் சரியாகத் தட்டுவீர்கள் இல்லையா! இப்பொழுதே என் அன்பு நன்றி. :‍)

‍- இமா க்றிஸ்

சரிங்க‌ இமா அம்மா.நானும் டென்ஷன் ஆகவில்லை. படிக்கும் போது உங்க‌ பதிவு கடுமையாக‌ தெரிந்தது. அதனால் தான் கேட்டேன்.

மன்னிப்பு எல்லாம் வேண்டாம் அம்மா. உங்க‌ மகள் போல் நினைத்து கொள்ளுங்கள் என்னை. எனக்கு இப்பொழுது தான் பெண் குழந்தை பிறந்துள்ள்து.
வாழ்த்துங்கள்!!!!!!!

மேலும் சில பதிவுகள்