ஆப்பம்

தேதி: October 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

பச்சரிசி - 2 கப்
புழுங்கல் அரிசி - 2 கப்
உளுந்து - ஒரு கைப்பிடி
சாதம் - ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை


 

பச்சரிசியுடன் புழுங்கல் அரிசி மற்றும் உளுந்து சேர்த்து கழுவி 3 மணி நேரம் ஊற‌ வைக்கவும்.
கிரைண்டரில் முதலில் சாதத்தை போட்டு நன்கு அரைத்து அதனுடன் ஊற வைத்த‌ அரிசியை சேர்த்து அரைக்கவும். (சாதத்தை கடைசியாக சேர்த்தால் அரைப்படாது ஆகவே முன்னமே அரைக்கிறோம்.)
சற்று கொரகொரப்பாக‌ இருக்கும் போதே வழித்து எடுத்து விடவும். தேங்காய் சேர்க்கும் விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைக்கலாம். மாவுடன் உப்பு சேர்த்து ஒரு நாள் முழுவதும் புளிக்க‌ விடவும். நன்கு புளித்து இருந்தால் தான் ஆப்பம் மிருதுவாக‌ வரும்.
புளித்த‌ மாவுடன் ஒரு சிட்டிகை ஆப்ப‌ சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு நீர்க்க‌ கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஆப்ப‌ சட்டியை வைத்து நன்கு சூடேற்றி பின் சிம்மில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி மேலும் கீழுமாக சாய்க்கவும்.
பின்னர் அதே போல் இடமிருந்து வலமாக‌ சாய்க்கவும்.
அதேப் போல் கிரிஸ் க்ராஸாக‌ இடபக்க‌ மேலிருந்து வலபக்க‌ கீழாக‌ சாய்க்கவும்.
அதன் பிறகு கிரிஸ் க்ராஸாக‌ வல‌பக்க‌ மேலிருந்து இட‌பக்க‌ கீழாக‌ சாய்க்கவும். X போல‌ சாய்க்கவும். இதை மூடி போட்டு சிம்மில் ஒரு நிமிடம் வேக‌ விடவும்.
தேங்காய் பாலுக்கு தேங்காயை நன்கு அரைத்து 2 (அ) 3 முறை தண்ணீர் விட்டு பால் பிழிந்து அதனுடன் தேவைக்கேற்ப‌ சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
ஆப்பம் வெந்த‌தும் எடுத்து தேங்காய் பாலுடன் பரிமாறவும். சுவையான‌ மிருதுவான‌ ஆப்பம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆப்பம் சூப்பர். இது என்ன டிசைன் ஆப்பமா பாலா.
ஆனால் எனக்கு தேங்காய் பாலோட கடலை கறியுடன் சாப்பிட தான் பிடிக்கும்

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ டீமிற்க்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி தேவி. இது ஃப்ளவர் டிஸைன் ஆப்பம். இப்போ இது தான் ட்ரென்ட்.

//ஆனால் எனக்கு தேங்காய் பாலோட கடலை கறியுடன் சாப்பிட தான் பிடிக்கும்// தேங்காய் பாலோ கடலை கறியோ எப்டியோ ஆப்பம் சாப்ட்டு ஏப்பம் விட்டா சரி தான். செய்து பாருங்க‌ தேவி.

எல்லாம் சில‌ காலம்.....

ஆப்பம் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது.கண்டிப்பாக நாளைக்கு ட்ரை பண்ண வேண்டும்.

நன்றி சாந்தனு. நாளைக்கு வேண்டாம் நாலனைக்கு ட்ரை பண்ணுங்க‌. ஏனா மாவு நல்லா புளிச்சா தான் ஆப்பம் சாஃப்டா இருக்கும். நாளைக்கு சாயங்காலம் அரைத்து நாலனைக்கு காலைலயே சுடுங்க‌. அப்டி நாளைக்கு செய்யனும்னா இப்பவே மாவு அரைத்து வச்சிடுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

ok

என்ன பாலா... ஆப்பம் நடுவில் குஷ்பு இட்லி தெரியுது ;) நல்லா இருக்கு.. செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஆப்பம் நடுவில் குஷ்பு இட்லி தெரியுது//அப்போ இதுக்கு குஷ்பூ ஆப்பம்னு பேர் வெச்சிடலாம் அக்கா. சரியா?

இதுவும் குஷ்பு இட்லி மாறியே சாஃப்டா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க‌ அக்கா.

எல்லாம் சில‌ காலம்.....

Super

thanks

எல்லாம் சில‌ காலம்.....

Aappam super. naan ippothu than muthal murai aapam try seithen ungal kuripinai parthu, migaum nandraga irunthathu. kadalai curry vaithu sapitom thengai paal illai. thank you.
saatham etharku serka vendum. saatham serkamal seithal nalla irukatha. athu mattume doubt.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.