வாந்தி எடுக்கிறான் உதவி தேவை

என் குழந்தை நேற்றிலிறுந்து ஆறு முறை வாந்தி எடுத்து விட்டான்
Help

மாப்பொருள் தான் அதிகம். இரண்டாவது - சீனி. அடுத்தது - கொழுப்பு. இதற்கு மேல் ப்ராண்ட் & வகையைப் பொறுத்து, குறைந்த அளவில் வைட்டமின்கள் சிலதும் கனியுப்புக்கள் சிலதும் இருக்கலாம்.

உலர்பழங்கள், சாக்லெட் சிப்ஸ், மால்ட் என்று ஏதாவது சேர்த்திருக்கும் பிஸ்கட்டுகளில் அந்தந்த உணவுப் பொருட்களின் சத்துக்களும் அடங்கி இருக்கும். சிலவற்றில் நார்ப் பொருள் அடங்கி இருக்கும்.

பொதி செய்து வரும் எந்த பிஸ்கட்டிலும் அதன் சேர்மானப் பொருட்களின் அட்டவணையும் சத்துக்களின் அட்டவணையும் அச்சடித்து இருக்கும்.

‍- இமா க்றிஸ்

cool அல்ல கூழ் தான்...ராகி கூல் காய்ச்சி டம்ளரில் கொடுக்கேன்...செர்லாக் கொடுக்கரப்போ ஓங்கரிக்து விடுவாள்.. அப்படியே கொடுப்பதை நிறுத்தி விட்டு 1/2 நேரம் கழித்து பாலுடன் செர்லாக் சேர்து டம்ளரில் கொடுத்து விடரேன் இப்படி செய்யலாமா... டாக்டர் குழந்தைக்கு 4 மணி நேரத்துக்கு ஒரு முறை திட உணவு கொடுத்தால் போதும் என்றாா்.. அப்படி கொடுத்தால் என்ன சத்தாண உணவு தரலாம் plz சொல்லுஙகள்...... மருத்துவர் சொன்னது போல 3 வேலை தான் திட உணவு தரலாம் என்றால் தேவையான சத்தக்கள் நிரம்பியிருக்கும் உணவு எது என்று கூற முடியுமா தோழி...நான் தறபோது செர்லாக் காலையும் மதியம் கேரட் or உ.கிழங்குடன் சிறிது சாத மும் அரைத்து தரேன் வேர என்ன சத்தானது தரலாம்... மதிய வேளையில் ஜுஸ் தரலாம் என்றால் எப்படி தரவேண்டும்..ஆப்பிள் ஜூஸ் பச்ைசயாக தராமா ...மாதுளை ஜுஸ் பச்சையாக தரலாமா.... தண்ணிராகவா அல்லது சிறிது கட்டியாகவா.... வேக வைத்தால் ஜீஸ் செய்ய முடியுமா... மாதுளை ஜூஸ் எனறால் நல்லதா.. எதுவேநே பச்சையாக குடித்தால் சாப்பி்டால் செமிக்காது...சளி பிடிக்கும் என்பது சரிதானா....plz தயவு செய்து தெளிவு படுத்தவும்

///அப்படியே கொடுப்பதை நிறுத்தி விட்டு 1/2 நேரம் கழித்து பாலுடன் செர்லாக் சேர்து டம்ளரில் கொடுத்து விடரேன் இப்படி செய்யலாமா.// செய்யலாம்.

//என்ன சத்தாண உணவு தரலாம்// பாப்பாவுக்கு வயது 10 மாசம் என்று நினைவு. சரிதானே! இனி என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாமே!

//தேவையான சத்தக்கள் நிரம்பியிருக்கும் உணவு// முட்டை!

நாம் தான் சத்துக்களைச் சேர்த்து எடுக்க வேண்டும். //கேரட் or உ.கிழங்குடன் சிறிது சாத மும்// இவற்றில் என்ன சத்து இருக்கிறது? சாதமும் கிழங்கும் கிட்டத்தட்ட ஒன்றுதான் - மாப்பொருள். கரட்டிலும் மாப்பொருள் தான் அதிகம் இருக்கிறது. அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் வைட்டமின்கள் அது இது என்று இருந்தாலும் புரதம் அடியோடு காணோம்! தினமும் இதையே தான் கொடுக்கிறீங்களா? சாதம் கொடுத்தால் கிழங்கு வேண்டாம் கிழங்கு கொடுக்கும் போது சாதம் வேண்டாம். முட்டை, மீன், பருப்பு மாற்றி மாற்றி சேருங்க. பழவகைகள் கொடுங்க.

//ஆப்பிள் ஜூஸ் பச்ைசயாக தராமா// தாராளமா. பழங்களைச் சமைக்கும் போது சத்துக் குறைந்து போகும். உண்மையில் இப்படி அடிக்கும் போதே கொஞ்சம் குறைந்துதான் போகும். பரவாயில்லை, கொடுங்க.

//மாதுளை ஜுஸ் பச்சையாக தரலாமா.// தரலாம்.
//மாதுளை ஜூஸ் எனறால் நல்லதா.// கூடாது என்று இல்லை.
கண்டதே இல்லை. நிறைய சந்தேகம் வருது. ரெடிமேட் ஜூஸா? நீங்களா முத்துக்களைக் கசக்கி எடுத்துக் கொடுக்கப் போறீங்களா? ம்... கொஞ்சம் கசக்காது!

//தண்ணிராகவா அல்லது சிறிது கட்டியாகவா.// கட்டி - எப்படி ஜூஸ் ஆகும்! ஆப்பிள் ப்யூரியைக் கேட்கிறீங்களா? கொடுக்கலாமே.

//வேக வைத்தால் ஜீஸ் செய்ய முடியுமா.// முடியாது. அதுக்கு வேற பேர் வந்துரும்.

//எதுவேநே// ;))) என்ன தமிழ் இது!! ;)))

//பச்சையாக குடித்தால் சாப்பி்டால் செமிக்காது.// எல்லா உணவுகளும் அப்படி இல்லை. சிலது செமிக்கும்.

//சளி பிடிக்கும் என்பது சரிதானா.// இல்லை.

‍- இமா க்றிஸ்

மிகவும் நன்றி. தெளிவு படுத்தியமைக்கு. சாதத்துடன் வேற என்னவெல்லாம் சேர்த்து கொடுக்கலாம்..சாதம்.பருப்புடன் கிழங்கு or கேரட் சேர்த்து தரலாமா ,, தினமும் பருப்பு தரலாமா...

//சாதம்.பருப்புடன் கிழங்கு or கேரட் சேர்த்து தரலாமா // - //சாதம் கொடுத்தால் கிழங்கு வேண்டாம் கிழங்கு கொடுக்கும் போது சாதம் வேண்டாம்.//
//கேரட் சேர்த்து தரலா//ம்.

///தினமும் பருப்பு தரலா//ம். //முட்டை, மீன், பருப்பு மாற்றி மாற்றி சேருங்க.//

[சாரி, சொன்னதையே திரும்ப தட்ட சோம்பலா இருந்துது. :-) ]

கொஞ்சம் வெரைட்டியா சத்து உள்ளே போக வேண்டாமா! தொட்டி மீனுக்கு தீன் போட்டுற மாதிரி டீஃபால்ட் உணவு கொடுத்துப் பழக்கிட்டா, பிறகு ஒரு காலம் திரும்ப அறுசுவைல வந்து, 'இப்போ என் குழந்தை காரட், பருப்பு சாப்பிட மாட்டேங்குறா. வேற எது கொடுத்தாலும் ஓங்காளிக்கிறா,' என்று த்ரெட் போடுற நிலமைல இருப்பீங்க. நீங்க சைவம் என்கிறதா ப்ரொஃப்பைல்ல காணோம். முடிந்த வரை எல்லாம் கொடுத்துப் பழக்குங்க.

‍- இமா க்றிஸ்

என்ன தரலாம் கை மருந்து.. வாய்க்குள்ள அவளுக்கு பால் குடுத்தாலும் வருது 10 மாதம் குழந்தைக்குஓங்கரிக்க செய்து கை மருந்து சொல்ல முடிமா

மேலும் சில பதிவுகள்