
நான்காம் நாள் __ பூரி + தக்காளி கிரேவி
மூன்று நாள் சமையல் தேர்வினை நன்றாக செய்தோம் என்ற திருப்தியில், நான்காம் தேர்விற்கு தயாரானாள் சுந்தரி. நன்கு பழுத்த ஐந்து தக்காளியை பொடியாக நறுக்கினாள். கடுகையும், வெந்தியத்தையும் வறுத்து மிக்சியில் பொடித்து வைத்தாள். பொடியாக நறுக்கிய தக்காளியுடன் வரமிளகாய், உப்பு சேர்த்து நைசாக அரைத்தாள். வாணலியை அடுப்பில் வைத்து தாராளமாக எண்ணையை ஊற்றினாள். அதில் கடுகு போட்டு தாளித்து தக்காளி கலவையைக் கொட்டி கொதிக்க வைத்தாள். அதில் சிறிது பெருங்காயத் தூள், மஞ்சள் தூளையும் சேர்த்து கொதிக்க வைத்தாள். எண்ணை பிரிந்து தக்காளி கலவை தளதள என்று கொதிக்கும் போது, வறுத்து பொடி செய்து வைத்த கடுகு+ வெந்தியப் பொடியை சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பை அணைத்தாள். இப்போது தக்காளி கிரேவி கலர்ப்புல்லாகவும், சுவைப்பதற்கு ரிச்புட்டாகவும் இருந்தது. பாபு பூரியையும்+ தக்காளி கிரேவியையும் பார்த்தான். சாப்பிட ஆரம்பித்தான். அம்மாவுக்கு , தன் கண்களிலேயே பாராட்டு தெரிவித்தான். தாத்தா, பாட்டியை பார்த்து கண்ணடித்தான். தந்தையைப் பார்த்து சிரித்தான். பாப்பாவை கொஞ்சி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாவிடம்,'''my sweet mother. your recipe is very good. thankyoumaa''என்றான். பறக்கும் முத்தத்தையும் பறக்க விட்டான். சுந்தரி சந்தோஷத்தில் தன் கணவனை கட்டிப் பிடித்தாள். குடும்பமே மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் கைக்கொடுத்துக் கொண்டனர்.
ஐந்தான் நாள்__ பூரி+ வெஜ் மசாலா
கோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி திட்டமாக நறுக்கி, எண்ணையில் வதக்கி , மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்தாள். பொட்டுக்கடலை[சட்னி கடலை]யுடன், மிளகாய், பட்டை, லவங்கம் சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்தாள். வெந்த காய்கறியில் அரைத்த பொடியை கொட்டி கலக்கி, காயும் காரமும் நன்கு சேரும்படி கிளறினாள். கொத்தமல்லியை தூவி பதமாக பரிமாறினாள். நன்கு ரசித்து, சுவைத்து சாப்பிட்டான் . தன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டு, '' SUPER''' என்றான். தன் பிள்ளையிடம் கிடைத்த பரிசை, கணவருக்கு கொடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியானாள் சுந்தரி.
,
Comments
rajinibai madam...
பாராட்டாமல் போக முடியலை..அனைத்து பதிவுகளும் அருமை..சமையல் குறிப்புகளும் தான். உங்க பையனுக்கு நன்றி.
// தன் பிள்ளையிடம் கிடைத்த பரிசை, கணவருக்கு கொடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியானாள் சுந்தரி.
எதார்த்தமான கவிதை....
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
ரஜினி
கலக்குறீங்க. இன்னும் 2 நாள் பாக்கி இருக்கு.
அருமையான கற்பனை. கற்பனை என்றில்லாமல் நிஜமாக்க முடிந்தால்! ஏன் நீங்கள் இந்தச் சமையல்களை செய்முறைக் குறிப்பாக, படங்களோடு அறுசுவைக்கு அனுப்பக் கூடாது! எங்கும் அசைவம் வரவில்லை என்பதனால் ஈர்க்கப்பட்ட இமாவின் அன்பு வேண்டுகோள் இது. நிறைவேற்றி வைப்பீர்களா? நிச்சயம் நானும் முயற்சித்துப் பார்ப்பேன்.
- இமா க்றிஸ்
ரஜினி
சூப்பருங்க.
சமையல் குறிப்பு ஒருபுறம் ; கதை மறுபுறம்.
குறிப்பை விடவும் அந்த கடைசி வரி உவமை //சூடிக்கொடுத்த சுடர்க்கொடி// ஹைலைட் ங்க.
அற்புதம்.
ரஜினி அம்மா
கதை, சமையல் குறிப்பு வந்துட்டு இருந்துச்சி. இப்போ கவிதையும் சேர்ந்து வருது. இந்த மூன்று பதிவில் (ஐந்து நாட்களுக்கு) கதை கவிதை சமையல்னு மூன்று விதம் வந்துடுச்சி. இன்னும் இரு நாளுக்கு புதுசா என்ன என்ன வரும்னு எதிர் பாத்துட்டு இருக்கோம்.
எல்லாம் சில காலம்.....
ராஜி
ஹாய்,
''பாராட்டாமல் போக முடியவிலை'''அழகான கருத்து வெளிப்பாடு வாக்கியம். நன்றிமா.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
இமா
ஹாய் இமா,
''ஏன் நீங்கள் இந்தச் சமையல்களை செய்முறைக் குறிப்பாக, படங்களோடு அறுசுவைக்கு அனுப்பக் கூடாது? எங்கும் அசைவம் வரவில்லை என்பதனால் ஈர்க்கப்பட்ட இமாவின் அன்பு வேண்டுகோள்.''''உண்மை இமா. நான் சைவப்பிரியை. அசைவம் சமைப்பேன், ஆனால் நான் சைவம். உங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று சமையல் குறிப்புக் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
நிகிலா
ஹாய்,
///சூடிக் கொடுத்த சுடர்கொடி,,,ஹைலைட்ங்க/// பாராட்டுக்கு நன்றிமா.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
பாலனாயகி
ஹாய்,
என் பதிவை பாராட்டியதற்கு நன்றிமா.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு