தேதி: October 10, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தக்காளி - 5
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் - 8
உதிரியாக வடித்த சாதம்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் 5 பல் பூண்டை இடித்து சேர்த்து காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் வேக விடவும்.

இடையிடையே நன்கு கிளறி விடவும். நன்கு மசிந்து வரும் வரை வேக விடவும்.

இதனுடன் உதிர் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறவும்.

தனித்த தக்காளி சுவையுடன் கூடிய தக்காளி சாதம் தயார்.

இதில் காரத்திற்கு காய்ந்த மிளகாய் மட்டுமே. அதனால் அதிகமாகவே சேர்க்கலாம். இந்த சாதம் காய்ந்த மிளகாய் தக்காளி சுவையுடன் நன்றாக இருக்கும்.
Comments
balanayagi
Simple a eruku. Nan milakai podi mattum pottu seiven. Eni ethu pola seithu parkiren. Super.
ரம்யா ஜெயராமன்
பாலா மேடம்
பார்க்கவே சூப்பரா இருக்கு. ஆமா அது என்ன ஒரிஜினல் தக்காளி சாதம்? ஒரு வேளை ஒரிஜினல் தக்காளி வச்சு செஞ்சதா இருக்குமோ? நான் போன வாரம் தக்காளி சாதம் பண்ணேன். என் கசின் ஒருத்தன் குக்கர திறந்து பார்த்துட்டு இதை நம்பி சாப்பிடலாமா?னு கேட்டான். ( கேட்டுட்டு 2 தடவை வாங்கி சாப்பிட்டான்) என் ஹஸ் கூட என்கிட்ட அப்படி கேட்டதில்லை. அவனுக்கு அடுத்த தடவை இத பண்ணி கொடுத்திட வேண்டியதுதான். நன்றி பாலா மேடம்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமுக்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
ரம்யா
நன்றி ரம்யா. இதில் தனி டேஸ்ட் அந்த காய்ந்த மிளகாய் தான். இது போல் ட்ரை செய்து பாருங்க.
எல்லாம் சில காலம்.....
abi
//ஆமா அது என்ன ஒரிஜினல் தக்காளி சாதம்?// அதாவதாகபட்டது என்னவெனில் சிலர் தக்காளி சாதம்னு வெங்காயம் மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து செய்வார்கள். அது போல் இல்லாமல் தக்காளி மட்டுமே உபயோகித்து செய்யும் முறை என்பதால் ஒரிஜினல் தக்காளி சாதம் எனப்பட்டது. முற்காலத்தில் இதுதான்
தக்காளி சாதம் என இருந்தது. அதன் பின் மற்ற சுவைக்காக வெங்காயம் மற்றவை சேர்க்கப்பட்டது. இந்த செய்முறையில் தக்காளியின் தனி சுவை தனியாக தெரியும்.
எல்லாம் சில காலம்.....
மிகவும் எளிமையாக உள்ளது
மிகவும் எளிமையாக உள்ளது தோழி
மிக்க நன்றி :)
நான் நானாக இருப்பதில் கர்வம் கொள்கிறேன் :)
என்றும் அன்புடன்
உங்கள் தோழி :)
ரீடா
மிக்க நன்றி ரீட்டா.
எல்லாம் சில காலம்.....