அந்த‌ ஏழு நாட்கள்.

சுந்தரி ஐந்து நாள் போராட்டத்தை அழகாய் முடித்த‌ எனர்ஜியுடன் ஆறாம் நாள் மெனுக்கு யோசிக்கலானாள். யோசித்து, யோசித்து மூளையே தேய்ந்துவிட்டதுப் போல் இருந்தது. எங்கெங்கு நோக்கினும் பூரியும்+ சைடிஷுமாகவே கண்ணிற்கு தெரிந்தது. என்னடா நமக்கு வந்த‌ சோதணை என்று எண்ணி சோகமாக‌ வலம் வரும் மனையாளைப் பார்த்தான் கணவன். எதோ நம்மால் முடிந்த‌ உதவி என்று, நுரை ததும்பிய‌ சூடான‌ ஒரு டம்ளர் பில்டர் காபியை '''கார்த்தி, காஜல் அகர்வால்'''விளம்பரம் போல் காதலுடன் சுந்தரியிடம் கொடுத்தான். நன்றி பார்வையுடன் காபியை பருகலானாள் சுந்தரி. மாமியார் தன்னிடம் பொங்கல் கொத்சுக்கு வெங்காயம் நறுக்கட்டுமா என்று கேட்டவுடன் ;;;ஐடியா;;; என்று குதிக்கலானாள் சுந்தரி. இன்று ;வெங்காய‌ கொத்சு''''தான் சைடிஷ் என்றாள். நான்கு வெங்காயத்தை தோலுரித்து நறுக்கினாள். பூண்டையும் தோல் நீக்கி உரித்தாள். மிளகாயின் காம்பு நீக்கினாள். எல்லாத்தையும் எண்ணையில் வதக்கினாள். அதனுடன் தேவையான‌ உப்பு சேர்த்து அரைத்து எடுத்தாள். வாணலியில் எண்ணைவிட்டு கடுகு, சீரகம், பெருங்காயம் இட்டு தாளித்து அதனுடன் அரைத்த‌ வெங்காய‌ கலவையை சேர்த்து சுருள‌ வதக்கினாள். பூரியுடன் , வெங்காய‌ கொத்சுடன் டிஸ்பிளே செய்தாள். பாபு நமட்டுச் சிரிப்புடன் பூரியையும், வெங்காய‌ கொத்சுவையும் சாப்பிட்டான். தன்னையே கவனித்து வரும் குடும்பத்தினரை பார்த்தான். தன் தாயிடம் ''NOT BAD, BUT JUST PASS ''' என்றான். சுந்தரியின் முகம் சோர்ந்தது.

ஏழாம் நாள்__‍ பூரி+ காராபூந்தி குருமா.

பாரதப் போர் குருஷேத்திரத்தில் 18 நாட்கள் நடந்தது என்பது வரலாறு. பூரியின் போர் ஏழு நாட்கள் நடப்பதே நமது வரலாறு. ஐந்து நாள் வெற்றிக்குப் பிறகு ஆறாம் நாள் பின்னடைவு சுந்தரிக்கு பெரிய‌ கவலையாக‌ இருந்தது. வெற்றியா? தோல்வியா? என்பதே அவளது கவலை. எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாள். ''காரா பூந்தி குருமா''வை மிகவும் கவனத்துடன் தயார் செய்யலானாள். தேங்காய், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி விதையை எண்ணையில் வதக்கினாள். மக‌ நைசாக‌ அரைத்தாள். அதில் மஞ்சள் தூள், உப்பு , தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கினாள். வாணலியில் எண்ணையை விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளித்தாள். அதனுடன் அரைத்த‌ மசாலா கலவையை கொட்டி நன்கு கொதிக்க‌ வைத்தாள். காராபூந்தியை கொதிக்கும் குருமாவில் போட்டு கலக்கினாள். [[காரா பூந்தி என்பது லட்டுக்கு போடும் உதிர் பூந்தி, ஆனால் காரமாக‌ இருக்கும், ஸ்வீட் கடையில் கிடைக்கும்]]]]. குருமா மணக்க‌, மணக்க‌ கொதித்து வாசனை தூள் கிளப்பியது. நேற்று ஜஸ்ட் பாஸ் நு கவலையுடன் மதிப்பெண் கொடுத்த‌ மகனைப் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. கடைசி தேர்வு என்றாலே எல்லோருக்கும் ஒரே சந்தோஷமாக‌ இருக்கும் இருந்தாலும் இந்த‌ கடைசி தேர்வினை சரியாக‌ செய்து விட‌ வேண்டுமே என்ற‌ கவலையும் இருக்கும். இதுதான் இருதலைக்கொள்ளி எறும்புப் போல் என்ற‌ நிலை. அந்த‌ நிலையில் தான் இருந்தாள் சுந்தரி. பாபுவும் ஒரு பெரிய‌ மனிதன் தோரனையுடன் பந்தாவாக‌ வந்து அமர்ந்து சாப்பிடலானான். சுந்தரியோ முகமலர்ச்சியுடன் சந்தோஷமாக‌ இருப்பதுப் போல் காட்டிக்கொண்டாள். ஆனால் அவள் மனசோ டென்ஷனாக‌ இருந்தது. தாத்தா, பாட்டி, தந்தை, தாய் எல்லோருமே பரபரப்பாக‌ இருந்தார்கள். பாப்பா மட்டுமே சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தை அல்லவா அது கவலை இல்லாமல் சிரிக்குது. டெலிஷியஸ், டேஸ்ட் குருமாவை ரசித்து, ருசித்து சாப்பிட்டான் மகன்.
தன் தாயின் அருகில் வந்த‌ மகன், தன் தாயைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான். தன் தாயைத் தூக்கி தட்டாமாலை சுற்றினான். இங்கும் அங்கும்
பரபரவென்று ஓடினான். தன் தாயின் கையைப் பிடித்து,''YOU ARE SO SWEETMAA. YOU ARE A BUNDLE OF JOY MAA. YOU CARE FOR MY HAPPY MAA. NOW I AM VERY PROUD OF YOU MAA. I LOVE YOU SO MUCH AND I LIKE YOU VERY MUCH. LOT OF THANKS MAA;;; என்று ஆரவாரமாக‌ ஆனந்தக் கூத்தாடினான். தன் கையால் தானே செய்த‌ ''my
family kitchen Queen''என்னும் கீரிடத்தை தன் தாய்க்கு சூட்டினான். மாமியாரும், மாமனாரும் சுந்தரி கைக்கு வளையல் போட்டு, கைக் குலுக்கினர். கணவன் தன் பங்குக்கு பட்டுப் புடவையை பரிசளித்து அவள் கையில் முத்தமிட்டான். சுந்தரிக்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடியது. தானும் தன் குடும்பத்தினற்கு ஹைபை கொடுத்து குதுகலத்தை கொண்டாடினாள்.
இந்த‌ கதையில் இருந்து நான் தெரிந்துக் கொண்ட‌ நீதி_____ பெண்கள் தம் குடும்பத்தில் உள்ள‌ அனைவரையும் தம்பக்கம் ஜால்ரா போட‌ வைப்பதற்கு ஒரே சாய்ஸ் சுவையான‌ உணவு மட்டுமே'''

5
Average: 4.3 (3 votes)

Comments

கதை சூப்பரோ சூப்பர். இந்த‌ ஏழு நாள்ல‌ கதை கவிதை சமையல் உவமை எல்லாம் வந்துடுச்சி. இன்னிக்கு இங்கிலிபிஸ்‍-ம் வந்துடுச்சி. நடுல‌ விளம்பர‌ இடைவேளை வேறு. அது இல்லாம‌ இடையில் பாரத‌ போரையும் புகுத்திட்டீங்க‌. பாராட்டு மகிழ்சி ஆரவாரம்னு எல்லாமே நிறைந்த‌ கதை இது. சூப்பரா இருக்கு.

ஆறாம் நாள் மட்டும் சின்ன‌ பின்னடைவு. அது சுந்தரிக்கு மட்டும் தான். எங்களுக்கு எப்பவும் போல‌ அழகான குறிப்பு கிடச்சி இருக்கு.

கடைசியில் வந்த‌ கருத்து கந்தசாமி அழகா ஒரு கருத்தை சொன்னாங்க‌. //பெண்கள் தம் குடும்பத்தில் உள்ள‌ அனைவரையும் தம்பக்கம் ஜால்ரா போட‌ வைப்பதற்கு ஒரே சாய்ஸ் சுவையான‌ உணவு மட்டுமே// என்று. அந்த‌ கருத்து கந்தசாமி யாருனு கேக்கறீங்களா? சாக்ஷாத் நீங்க‌ தான். ரொம்ப‌ அருமை. இது கதையா? இல்லை சமையல் குறிப்பா? டைரக்டர் ரெடி ஆகிட்டீங்க‌ போல‌?

ஒரு சின்ன‌ ரெக்வஸ்ட். அந்த‌ ஏழு நாட்கள். நீங்க‌ ஏழூனு போட்டு இருக்கீங்க‌. அதை மட்டும் மாற்றவும்.

இந்த‌ கதைல‌ சுந்தரிக்கு வளையல் போடறாங்க‌. பட்டு புடவை குடுக்கறாங்க‌. ஆனா எங்க‌ வீட்ல‌ சமச்ச‌ கைக்கு தங்க‌ வளையல் போடனும்னு சொல்றாங்க‌. பேச்சிக்கு ஒரு கண்ணாடி வளையல் கூட‌ வாங்கி தர‌ மாட்றாங்க‌. நானே கடைக்கு போய் வாங்க‌ வேண்டி இருக்கு. :( சுந்தரிக்கு கிடச்ச மகன் சுந்தரியால் குடுத்து வெச்சவனா? இல்ல‌ இப்டி ஒரு குடும்பம் கிடைக்க‌ சுந்தரி குடுத்து வைத்தவளா?

எல்லாம் சில‌ காலம்.....

சூப்பர். அசத்திட்டீங்க. ரெசிபிக்களுக்கு ரொம்ப நன்றி. ஒரு நாள் ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ஹாய்,
''சூப்பர் அசத்திட்டீங்க‌'''பாராட்டுக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

Your recipes are very interesting and useful. Thanks lot
The mahabaratha war was 18 days I think. Please check.
Thank you

hai,

how are u? ''The Mahabaratha war was 18 days. I think.'' yes 18 days is right. I am also correct my error. o,k. Thank u.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நான் தினமும் இந்த‌ பக்கதில் வரும் தகவல்கலை படித்து அனைவரிடமும் சொல்லுவன் ... இன்ட்ரு தன் account create பன்னினன்

Life Is In Your Hand

நல்ல கதை அக்கா.அத்துடன் மணமணக்கும் சுவையான‌ கார‌ பூந்தி குருமா.

ஹாய்,
கதை சூப்பரோ சூப்பர்'' பாராட்டுக்கு நன்றிமா. சமையலை இன்னும் டேஸ்டா செய்ங்க‌ உங்க‌ கைக்கு கண்ணாடி வளையல் என்ன‌ வைர‌ வளையலே போட்டு அசத்துவாங்க‌. அது தான் கருத்து கந்தசாமி சொல்லுகிறேனே. ஒ,கே. நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
புதிய‌ உறுப்பினரே வருக‌/வருக‌. உன் வரவு நல்வரவு ஆகட்டும். தொடர்ந்து பதிவுகளைப் படித்து கருத்து தெரிவிங்க‌. நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

''நல்ல‌ கதை அக்கா. அத்துடன் மணமணக்கும் சுவையான‌ காரா பூந்தி குருமா'''பாராட்டுக்கு நன்றி சகோதரி. பதிவுகளைப் படித்து உடனுக்குடன் கருத்துக்களை சொல்லுங்க‌ அதுதான் அக்கா தங்கை பாசம்.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஓகே ... மிக்க மகிழ்ச்சி

Life Is In Your Hand

OK ரஜினி அக்கா.கண்டிப்பா.

பூரிக்கு இவ்வளவு சைடு டிஷ் பண்ணலாம்ன்னு இன்றைக்கு தான் தெரியும்...அப்பப்பா கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை....படிக்க படிக்க நாவில் எச்சில் ஊறுகிறது....கதையை படித்து முடித்ததும் சாப்பிட்ட மாதிரி இருந்தது....கதை ரொம்ப tasty,crispy.

அன்பு தோழி. தேவி