தேதி: October 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
வெல்லத் துருவல் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வடகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - சிறிது






இதே முறையில் முடக்கத்தான் கீரைக்கு பதிலாக கறிவேப்பிலை, தூதுவளை, வல்லாரை, புதினா எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
இந்த துவையல் ஒரு வாரம் வரை கெடாது.
நீண்ட நாள் வைக்க விரும்புவோர் மேலும் எண்ணெய் ஊற்றி, வினிகர் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
வெல்லம் சேர்க்காமலும் செய்யலாம். ஆனால் முடக்கத்தான் கசப்பு சுவை உடையது. வெல்லம் சேர்க்காவிடில் அதிகம் கசப்பு தெரியும்.
Comments
முடக்கத்தான் துவையல்
ஆஹா! பார்க்கவே ஆசையாக இருக்கிறதே! //வல்லாரை, புதினா எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.// என்கிறீங்க. கிடைக்கும். நிச்சயம் சமைத்துப் பார்க்கிறேன்.
- இமா க்றிஸ்
பாலா
பாலா
தூதுவளைக் கீரையை துவையல் செய்யும் போது அந்த இலையில் உள்ள ஒவ்வொரு முள்ளையும் நீக்க வேண்டுமா பாலா:))
இல்லாவிடில் அரைக்கும் போது போயிடுமா
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
இமா அம்மா
நன்றி இமா. நீண்ட இடைவெளிக்கு பிறகு எவ்ளோ பெரிய ஜாம்பவான் கிட்ட இருந்து என் குறிப்புக்கு அருமையான பாராட்டு.
புதினாவில் மட்டும் வெல்லம் சேர்த்து அரைக்க தேவையில்லை. இதை குறிப்பிட மறந்து விட்டேன். சேர்த்தாலும் தவறில்லை. நன்றி இமா அம்மா. கட்டாயம் செய்து பாருங்க. செய்து பார்த்து கருத்தும் போடுங்க.
எல்லாம் சில காலம்.....
நிகி
தூதுவளை முள்ளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை நிகி. அப்படியே நீரில் கழுவி சுத்தம் செய்து சேர்க்கலாம். அரைக்கும் போது முள் மசிந்து விடும். அந்த முள்ளும் நம் உடலுக்கு ஏற்றதே. அதில் விஷம் இல்லை. நன்றி நிகி.
எல்லாம் சில காலம்.....
பாலா
//விஷம் இல்லை//
காமெடி பண்ணுறீங்களா பாலா.....:))