குழந்தையின் உதடு கருமையாக‌ உள்ளது

அன்பு தோழிகளே,
எனக்கு குழந்தை பிறந்து 22 நாட்கள் ஆகின்றது. குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் அவள் உதடை துடைத்துவிடுகிறேன். இருப்பினும் அவளின் உதடு கருப்பாக‌ உள்ளது. சிவப்பான‌ உதடு கருப்பாக‌ இருக்கின்றது. கருமை நீங்க‌ எதவாது டிப்ஸ் இருக்கிறதா? சொல்லுங்களேன்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு உதடு அவ்வளவு எளிதாக கருப்பாகாது.நீங்கள் பவுடர் பால் குடுத்தாலும் சரி தாய்ப்பால் குடுத்தாலும் சரி உடனே ஈரத்துணியால் குழந்தையின் உதடை துடைத்து விடவும்.நீங்கள் பவுடர் பால் கொடுக்கிறீர்கள் என நினைக்கிறேன்.நீங்கள் நன்றாக துடைத்து விட்டு விடுங்கள் அதுவே சரியாகிவிடும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Abi sister,
நான் குழந்தைக்கு தாய்ப்பால் தான் கொடுக்குறேன்.

நீங்க நல்லா தண்ணீர் வச்சு துடைச்சு விடுங்க. அதுவே சரியாகிடும். முன்னாடி பால் பவுடர் கொடுத்திங்க தானே அதான் இப்படி ஆகியிருக்கும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ஹாய் விஜி, உதடு கருமை பற்றி கவலை வேண்டாம் அது தானாக சரியாய்டும் பால் குடுத்ததும் உதட்ட எப்பயும் நல்லா துடைச்சு விடுங்க,அஎன் குழந்தைக்கும் உதடு கருமையாக தான் இருந்தது தானாக சரியாகி விட்டது.

OK abi sister

நன்றி தீபா....

hai viji

kuzhanthai ku babyoil thadavinal athai light ta kayil thotu lips la thadavavum. coconut oil lum use pani lips la thadavalam pa. en payanukum, ponnukum appadi than seithen.

இதென்ன கடவுளே , பிறந்து 1 மாசம் வரைக்கும் குழந்தைக்கு சரும மாற்றம் , சருமம் உலருதல் , கறுத்தல், எல்லாம் நார்மலா நடக்கிறதுதானே. இதுக்கெதுக்கு கை வைத்தியம். வழக்கம் போலவே எண்ணெய் தேய்ச்சு குளிக்க வைக்கிறது. சுத்தமா துடைச்சு வைக்கிறது இதுவே போதும் . தானாக பிறகு சரியான நிறம் வரும் .எண்ணெயை எல்லாம் உதட்டில பூசி நீண்ட நேரம் விடாதீங்கோ.

அப்படியா சுரேஜினி அக்கா.....தகவலுக்கு நன்றி

நன்றி சஞ்சனா......

மேலும் சில பதிவுகள்