வரகு வெள்ளரி தோசை

தேதி: October 15, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

வரகு - 100 கிராம்
பிஞ்சு வெள்ளரிக்காய் - 100 கிராம்
மிளகாய் - ஒன்று
தேங்காய் - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது


 

வரகை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்த வரகு மற்றும் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து எடுக்கவும்.
அதேப் போல் மிளகாய், சீரகம், தேங்காய், கொத்தமல்லியை அரைத்து எடுக்கவும்.
வரகு மாவுடன் அரைத்த மிளகாய் கொத்தமல்லி விழுதை சேர்த்து கலக்கவும்
மாவு புளிக்கத் தேவையில்லை. உடனே தோசையாக வார்த்து எடுக்கலாம்.
சுவையான சத்தான தோசை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வரகு வெள்ளரி தோசை சூப்பர். உங்கள் கேழ்வரகு உளுந்து தோசையும் செய்து சாப்பிட்டாச்சு. போட்டோ எடுக்க வேணும் என நினைத்தேன் காலை நேர பரபரப்பில் மறந்து விட்டேன். அடுத்த முறை கண்டிப்பா செய்து போட்டோ எடுத்து போடுறேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

கேழ்வரகு உளுந்து தோசை எங்க‌ வீட்டில் வாரம் ஒரு முறை செய்வோம் அபி.

வரகு வெள்ளரி தோசை வெயிலுக்கு ஏற்றது. உடனே செய்யலாம். செய்து படம் காட்டுங்க‌ அபி:))

உப்பு போட வேண்டாமா?

‍- இமா க்றிஸ்

//உப்பு போட‌ வேண்டாமா?//

ஹி..ஹி...நான் உப்பு போடாமல் கூட‌ சாப்பிடுவேனாக்கும்.:))

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணுமே....:))

நீங்கள் மாவில் கலந்து கொள்ளுங்கள் இமா. உப்பு போட்டு சாப்பிட்டுப் பார்த்து எனக்குச் சொல்லணும்:))

மிக்க‌ நன்றி. :))

pls yeravathu answer pannungapa.yenga intha question kekarathu theriyala.ulunthu vada seyanum samiku 1 kg la evlo vada varum approaximate sollunga pls.

நமது அறுசுவை மிகவும் பயன் உள்ளதாக‌ உள்ளது இதில் வரும் சமையல் குறிப்புகளை நான் நிறைய‌ செய்து பார்த்தும் விட்டேன். மிகவும் தினை பணியாரம் நன்றாக இருந்தது. நன்றி

சின்னதா செய்தால் 80 வடை வரை வரும் பா

தினைப் பணியாரம் பிடிச்சுதா..
தினையில் பிஸ்கட் கூட‌ நல்லா இருக்கும்.:))

விருப்ப பட்டியலில் சேர்தாத்தாசு
சீக்கீரம்செய்து பார்து சொல்லரேன்.அரிசி இல்லாதது பெரிய +