பாகற்காய் குழம்பு

தேதி: October 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

பாகற்காய் - 2
வேக வைத்த பருப்பு - அரை கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் - 2
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தனியா - 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
வெல்லம் - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றலை தனியாக வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு வதக்கவும்.
அதில் புளிக்கரைசலை ஊற்றி மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து மிளகாய் வாடை அடங்கியதும் பருப்பு கலவையுடன் கலந்து வைத்திருக்கும் விழுதினை ஊற்றவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
இறக்கும் நேரத்தில் சிறிது வெல்லம் சேர்க்கவும். நன்கு திக்காக ஆனதும் இறக்கவும்.
சுவையான பாகற்காய் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்