
தேதி: October 17, 2015
பரிமாறும் அளவு: 2 நபர்கள்
ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மொத்த நேரம்: 10 நிமிடங்கள்
நறுக்கின வெள்ளரிக்காய் - அரை கப்
தயிர் - அரை கப்
சீனி - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

மிக்ஸியில் இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு தயிர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

அரைத்த வெள்ளரிக்காயுடன் சீனி மற்றும் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும்.

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வெள்ளரி லெஸி ரெடி. இதனுடன் ஐஸ்கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பருகலாம்.

Comments
செண்பகா
சூப்பர்! பிடித்திருக்கிறது. விரைவில் பருகிப் பார்த்துக் கருத்துச் சொல்லுகிறேன்.
- இமா க்றிஸ்
செண்பகா
செய்தாச்சு; ரசிச்சு சாப்பிட்டாச்சு. யம்ம்ம்ம்!
ஃபேஸ்புக் க்ரூப்ல படம் போட்டிருக்கிறேன்.
- இமா க்றிஸ்