தேதி: October 19, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
இறால் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 9
பச்சை மிளகாய் - 5
உப்பு - அரை தேக்கரண்டி
கறி மசாலா - அரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
சோம்பு தூள் - முக்கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
இறாலை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் நடுவில் எண்ணெய் நிற்பது போல் ஊற்றி அதில் அரைத்து வைத்திருக்கும் இறால் கலவையை வடை போல் தட்டி போடவும்.

மூன்று நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு பொன்னிறமானதும் மேலும் மூன்று நிமிடம் கழித்து எடுத்து விடவும்.

சுவையான இறால் குப்பத்தா வடை தயார்.

Comments
இறால்
இறால் இங்கு கிடைக்காது ஆனாலும் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி