தேதி: October 20, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சப்பாத்தி - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
குடைமிளகாய் - ஒன்று (சிறியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - ஒன்று
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, லவங்கம், பட்டை தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

குடைமிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து வதக்கவும்.

சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும்.

முட்டை வெந்து கலவையுடன் ஒன்றாக ஆனதும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

சுவையான சில்லி கொத்து சப்பாத்தி தயார்.

சப்பாத்தி அதிகமாய் மீந்து போனால் இப்படி செய்யலாம். இதில் குருமா வகைகள், குழம்பு ஏதேனும் இருந்தால் ஒரு கரண்டி சேர்த்து பிரட்டி இறக்கலாம்.
Comments
முட்டை கொத்து
சூப்பர். சமையல் பிடிச்சிருக்கு. படத்தைப் பார்க்கவே வயிறு நிறைஞ்சு போச்சு. :-)
- இமா க்றிஸ்
முட்டை கொத்து
சூப்பரா இருக்கு. ஒரு நாளைக்கு ட்ரை பண்ணணும்...வாழ்த்துக்கள்
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ரேவ்'ஸ்
ரொம்ப நல்லா இருக்கு. கலக்கல் ரேவ்'ஸ்
எல்லாம் சில காலம்.....
சில்லி கொத்து சப்பாத்தி
சில்லி கொத்து சப்பாத்தி பாக்கவே நல்லா இருக்கு. டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். நல்ல ரெசிபி இதை கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கணும்.
team
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& டீம் நன்றிகள் பல
Be simple be sample
இமாம்மா
பார்த்ததும் வயிறு நிறைஞ்சா நல்லாத்தான் இருக்கும் எனக்கும். ஆனா எல்லாத்தையும் எடுத்து சாப்பிட்டுடறனே :). உங்களுக்கு பிடிச்சது ரொம்ப சந்தோஷம். தான்க்யூ இமாம்மா
Be simple be sample
அபிராஜ சேகர்
அபி செய்து பார்த்துட்டு கட்டாயம் சொல்லணும். தான்க்யூ
Be simple be sample
பாலா
தான்க்யூ பாலா
Be simple be sample
சக்தி
ஆமாப்பா டேஸ்ட் நல்லதுக்கும் செய்து பாருங்ஜ. தான்க்யூ
Be simple be sample
சில்லி கொத்து சப்பாத்தி
வணக்கம் தோழி மிகவும் அருமையாக இருக்கிறது நானும் ட்ரை பண்ணி பார்கிறேன்
najun
Thanku najun.
Be simple be sample