திருமதி. செய்யது கதீஜா அவர்களை வாழ்த்துவோம்

நீங்கள் இவ்வளவு சீக்கிரம் 100 குறிப்புகள் கொடுத்துள்ளது பிரமிப்பூட்டுகிறது. உங்களின் எல்லா குறிப்புகளுமே வித்தியாசமாக இருப்பது மற்றொரு ஸ்பெஷாலிட்டி. நீங்கள் போகும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த மாதம் ஆயிரத்தை தொட்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்க எங்களின் வாழ்த்துகளையும், கொடுத்த குறிப்புகளுக்கு எங்களின் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

எப்படி இருக்கிறீர்கள் அறுசுவை உறுப்பினாராகி இரண்டு மாதம் கூட முடியவில்லை அதற்குள் நூறு குறிப்புகள் கொடுத்து அசத்தி விட்டீர்கள் ... போகிற வேகத்தை பார்த்தால் இன்னும் ஒரு மாதத்தில் 200 கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் குறிப்புகள் எல்லாம் புதுவகைகள் அனைத்தும் அருமை மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

வாழ்த்துக்கள் திருமதி செய்யத். தட்டுக்களில் உணவுகள் பறப்பதை பார்த்திருக்கின்றேன், ஆனால் அறுசுவை இணையத்தளத்தில் உணவு குறிப்புகள் பறந்து வருவதை தங்கள் பகுதியில் தான் பார்க்கின்றேன், தொடர்ந்து தங்களின் இந்த சுவையான,அருமையான மின்னல் வேக பயணம் தொடர வாழ்த்துகின்றேன். வாழ்க வளர்க. நன்றி.

Dear செய்யத் கதீஜா! எக்ஸ்பிரஸ் வேகத்தில் நீங்கள் தந்துக்கொண்டிருக்கும் குறிப்புகள் பன்மடங்காக பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

எப்படி இருக்கிறீர்கள்.உங்கள் பாராட்டுக்கு ரெம்பவும் நன்றி. அடுத்த மாதம் ஆயிரம் குறிப்பை தொட்டு இருப்பேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்.அந்த அளவுக்கு எல்லாம் முடியுமா என்று தெரியவில்லை. நிறைய குறிப்புகள் கொடுக்க ஆசைதான்.என்னால் இயன்ற அளவு குறிப்புகள் கொடுக்கிறேன்.

நான் ரெம்பவும் நல்ல இருக்கிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்.உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது.இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க ஆசை. என்னால் இயன்ற அளவு குறிப்புகள் கொடுக்கிறேன்.

மேலும் எனது குறிப்புகள் புதுமை, அருமை என்று சொன்னீர்கள் .மிக்க நன்றி

எப்படி இருக்கிறீர்கள். தடடுகளில் உணவுகள் பறப்பதை பார்த்து இருக்கிறேன் ஆனால் அறுசுவை இணையதளத்தில் குறிப்புகள் பறந்துவருவதை இப்பொழுதுதான் பார்த்து இருக்கிறேன் என்று எழுதி இருந்தீர்கள்.

நன்றி நான் ஒன்றும் உங்களை போல் எக்ஸ்பர்ட் இல்லை.உங்களை எனக்கு ரெம்பவும் பிடிக்கும். நான் எப்பொழுதும் என் கணவரிடம் உங்களை பற்றிதான் பேசிக்கொண்டு இருப்பேன் எல்லா விதமான டேலன்டும் உள்ள ஒரு பெண்மணி மனோஹரி மேடம் என்று மேலும் வளர வாழ்த்துங்கள்.

நலமாக இருக்கிறீர்களா. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி மேலும் வளர வாழ்த்துங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்.
மேலும் பல குறிப்புக்கள் தொடர வாழ்துக்கள்.

sajuna

hello superfast மேடம்,

வாழ்த்துக்கள். மின்னல் மாதிரி சமையல் குறிப்புகள் கொடுத்து கலக்கிடேங்க. மேலும் கலக்குங்க.

Seyedkatheeja அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்