தேதி: October 29, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பெரிய வெங்காயம் - ஒன்று
கடலைப் பருப்பு - அரை மேசைக்கரண்டி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - குண்டு மணி அளவு
தனியா - அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து அதில் கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுத்து எடுக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஆறியதும் மிக்ஸியில் வதக்கியவற்றை போட்டு புளி, உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்.

சுவையான பெரியவெங்காய சட்னி தயார்.

Comments
Ok,not good
Ok,not good