படிப்பு

ஹாய் friends

என் பையனுக்கு 4 வயசு ஆகுது. இப்ப‌ அவன் kindergarten போகிறான். எப்பவும் phone ல‌ cartoon பார்கிறான். படிக்க‌ சொல்லி கொடுத்தால் அதில் ஆர்வம் இல்லை. ஒன்று சொல்லி கொடுத்து அலுத்துபோய் நாம் மறந்து விடுவொம்.(after 1 month) அதற்கு பின் அதை அவன் சொல்வான். அவனுக்கு படிப்பில் எப்படி ஆர்வம் வர‌ வைப்பது.அடுத்த‌ வருடம் அவனை india வில் school la 1st illa u.k.g செர்ககாலம் என்று இருகிறோம். அதற்குள் அவனை எப்படி படிக்கவைப்பது.விளையாட்டாக‌ சொல்லிக்குகொடுத்தாலும் அதை கவனித்து சொல்றதை கேட்கும் பொறுமை இல்லை.cartoon பார்பதில் தான் ஆர்வம் இருகிரது. அவனுக்கு inge விளையாட‌ யாரும் இல்லை. அதனால் ரொம்ப‌ கண்டிக்கவும் பாவமாக‌ இருக்கு. pls pathil sollunga.

உண்மையில் இது எல்லா குழந்தைகளும் செய்வது தான்.என் மகளுக்கும் 4 1/2 வயது தான் ஆகிறது.கிட்டதட்ட 4, 5 மாதம் முன்பு வரை காலையில் எழுந்ததும் நான் எழும் முன்பே எழுந்து போனில் கார்ட்டூன் பார்ப்பாள். விழித்திருக்கும் நேரம் முழுதும் டிவி, சிஸ்டம், போன் எல்லாவற்றிலும் இந்த வேலைதான்.
நீங்க போனில் எந்த கார்ட்டூனும் வைக்காதீங்க. அவனுக்கு யூஸ்புல்லான ரைம்ஸ், ஏபிசி ஹேன்ட் ரைட்டிங் ஆப், இது போல போனில் ஸ்டோர் பண்ணுங்கள். நானும் இதெல்லாம் போனில் வைத்திருந்தேன். கார்ட்டூனுக்கு இடையிலும் இதல்லாம் செய்வாள். ஆனால் மகள் பள்ளி செல்வதால் அவளுக்கே இன்ட்ரஸ்ட் வந்து இப்பொழுதெல்லாம் நோட்டும், கையுமாக தான் இருப்பாள். கார்ட்டூன் அரிதாக எப்போதாவது பார்ப்பாள்.
நீங்களும் படித்தால் தான் நீ கேட்ட பொருள் கிடைக்கும் என்று சொல்லி பாருங்கள். அவன் நன்றாக படிக்க வாழ்த்துக்கள்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

//4 வயசு ஆகுது.// முடிஞ்சுது என்று கூட‌ சொல்ல‌ முடியல‌ உங்களால‌.
//படிக்க‌ சொல்லி கொடுத்தால் அதில் ஆர்வம் இல்லை.// எப்பிடிங்க‌ வரும்!! அவர் குழந்தைங்க‌.

ஒண்ணு பண்ணுங்க‌ சஞ்சனா. உங்க‌ அம்மா, அப்பாவிடம் கேட்டுப்பாருங்க‌, நீங்க‌ நாலு வயசு ஆகும் சமயம் ஆர்வமா படிச்சீங்க‌, விளையாடவே இல்லை என்று சொல்லுறாங்களா என்று பாருங்க‌. அப்போ நீங்க‌ ஃபோன்ல‌ கார்டூன் பார்த்திருக்க‌ மாட்டீங்கதான். ஆனா அந்தக் காலத்தில் எது இருந்ததோ அந்த‌ விடயம் உங்கள் மனதையும் ஆக்கிரமித்து இருந்திருக்கும்.

//நாம் மறந்து விடுவொம்.(after 1 month) அதற்கு பின் அதை அவன் சொல்வான்.// ;) இது நல்ல‌ விஷயம்தானே! உங்களை விட‌ பையர் புத்திசாலியா இருக்கார். //அவனுக்கு படிப்பில் எப்படி ஆர்வம் வர‌ வைப்பது.// கர்ர்.. ஆர்வம் ஏற்கனவே இருக்க‌ வேண்டிய‌ அளவுல‌ இருக்கிறதாலதானே உங்களால‌ உங்க‌ பையனைப் பற்றி இப்படிப் பெருமையாக‌ச் சொல்ல‌ முடியுது!! 4 வயசுக்கு இதுக்கு மேல‌ என்ன எதிர்பார்க்கிறீங்க‌!

//cartoon பார்பதில் தான் ஆர்வம் இருகிரது.// இதுக்கு இன்னொரு கர்ர்.. வசதி செய்து கொடுத்தது நீங்க‌. தப்பு குழந்தையோடது இல்லை. நமக்கே சமயத்தில் முக்கியமான‌ வீட்டு வேலைகளை விட‌ ஃபேஸ்புக்கும் அறுசுவையும்தான் முக்கியமானதாப் படுது. அவர் சின்னவர். இயல்பா இருக்கார்.

//india வில் school la 1st illa u.k.g செர்ககாலம்// ;)))) என்ன‌ எழுதி இருக்கீங்க‌! இன்டியா வில் ஸ்கூல் ல‌ 1ஸ்ட் இல்ல‌ யூகேஜி செர்ககாலம்!! என்ன‌ காலம் இது!! இந்தியாவைத் தமிழில் எழுத‌ முடியாதா!! தப்பா நினைக்காதீங்க‌, சும்மா ஜாலியா படிச்சுப் பாருங்க‌. இங்க‌ ஒரு டென்ஷன்ல‌ வந்து போஸ்ட் போடுறீங்க‌. குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அது இருக்கக் கூடாது. மனசு அமைதியா இருக்கணும். இல்லாட்டா இதே போல‌ தப்புத் தப்பா சொல்லிக் கொடுக்கிற‌ மாதிரி ஆகிரும். சின்னவர் டீச்சர் சொல்றதை நம்பவா, அம்மா சொல்றதை நம்பவா என்று தெரியாமல் குழம்பிப் போவார்.

பாவங்க‌. ஸ்கூல் போகும் போது அங்க‌ சொல்லிக் கொடுக்கிறதை அவர் படிச்சா போதும். இப்பவே இறுக்காதீங்க‌. விளையாடட்டும். இது உடம்பு வளரும் காலம். வேறு விளையாட்டுகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுங்க‌. மூளை வளர்ச்சிக்கு பாடம் மட்டும் போதாது. அதற்கான‌ விளையாட்டுகள் இருக்கின்றன‌. விளையாட்டு மூலம் எதையும் புரிய‌ வைக்கலாம். 'பாடம்', 'படிப்பு' என்னும் சொற்கள் கொஞ்சம்... என்ன‌ சொல்றது!! டெக்னிக்கல்!!

//அதனால் ரொம்ப‌ கண்டிக்கவும் பாவமாக‌ இருக்கு.// ம். கண்டித்தால் விளைவு எதிர்மாறானதாக‌ இருக்கச் சாத்தியம் அதிகம். படிப்பு பிடிக்காமல் போகலாம். சின்னவர் மனசு அறிந்து நடந்துக்கங்க‌.

‍- இமா க்றிஸ்

நன்றி அபி. கொஞ்சம் பயமா இருக்கு. இப்ப‌ school la இடையில் சேர்ப்பது கடினம் என்று சொல்கிறார்கள். அதான் பா.family problem vera. அதனால‌ ரொம்ப‌ யோசித்து யோசித்து வர‌ பயம் பா.

பள்ளி சென்றால் சரியாகி விடுவான். போனில் ஆப் வைத்து கொடுங்கள். அதில் பழகினால் அடுத்து நோட்புக் வாங்கி கொடுங்கள். ஈசியாக படிப்பான். அதே சமயம் இமாம்மா சொன்னது போல விளையாட்டும் அவசியம்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

\\வசதி செய்து கொடுத்தது நீங்க‌.\\ ஆமாம் இமா அம்மா. preganant ta இருந்தப்ப‌ ரொம்ப‌ முடியல‌. ஒரு வாய் தண்ணிர் கூட‌ குடிக்க‌ முடியல‌. அதனால கொடுத்து பழக்கியாசு.

\\இதே போல‌ தப்புத் தப்பா சொல்லிக் கொடுக்கிற‌ மாதிரி ஆகிரும்.சின்னவர் டீச்சர் சொல்றதை நம்பவா, அம்மா சொல்றதை நம்பவா என்று தெரியாமல் குழம்பிப் போவார்.\\ english la India தான் வரும் அம்மா.

குடும்ப‌ பிரச்சனை. அதனால‌ சரியா வளர்க்கனும் யோச்சிகிறதால‌ வர பயம் தான் அம்மா. கண்டித்தால் படிப்பு பிடிக்காமல் போய் விடும்னு விட்டால் ஒடிவிடுகிறான். அதான் என்ன‌ பன்றதுனு தெரியல‌.முடிந்த் அளவு சொல்லிகுடுக்கிறேன். அவனுக்கு புரியாமல் இல்லை.ஆனால் எப்பவும் cartoon நினைவு தான். கொஞசம் நாம் சொன்னதை கேட்டு செய்தால் நமக்கும் திருப்தியா இருக்கும்.

ok pa. போனில் எப்படி பா பழக்குறது. App name சொல்லுக‌ பா. pls

//நாம் சொன்னதை கேட்டு செய்தால் நமக்கும் திருப்தியா இருக்கும்.// உங்கள் நிலை புரிகிறது.

இந்த விஷயத்துல என்னால் பெற்றோர்களுக்காகவோ ஆசிரியர்களுக்காகவோ பேச‌ முடியுறது இல்லை.. :‍) என் சின்னவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக, அவர்கள் பாடசாலையில் தயாரான‌ போது நிறைய‌ மனம் நொந்திருக்கிறேன்.

எங்கள் சமுதாயம் குழந்தைகளைக் குழந்தைகளாக‌ வளர‌ விடாது. ;((

‍- இமா க்றிஸ்

Play store ல் ABC hand writing என்று போட்டு பார்த்து டவுன்லோட் செய்யுங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ஆமாம் மா. எங்கேயும் அப்படித்தான். பார்போம். முடிந்த‌ அளவு சொல்லி கொடுப்போம். அப்புறம் கடவுள் விட்ட வழி.

ok பா செய்து பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்