தோழிகளே யாராவது ஜீன்ஸ் லெக்கின்ஸ் வாங்கியிருக்கீங்களா? நன்றாக இருக்குமா? நான் கேட்ட கலரில் ஜீன்ஸ் இல்லாததால் இதை காட்டினார்கள். ஆனால் புதிதாக இருப்பதால் நன்றாக இருக்குமா? என நினைத்து எடுக்கவில்லை. தோழிகள் யாராவது வாங்கியிருக்கிறீர்களா? உபயோகத்திற்கு நன்றாக இருக்குமா??
அபி
நான் இரண்டு வைத்திருக்கிறேன்... ஒன்று நன்றாக இருக்கும். அதனால் ட்ரை பண்ணி ஃபிட் பிடிச்சா வாங்குங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
ஆனால் பட்டன் இல்லாமல் எலாஸ்டிக் இருப்பதால் எனக்கென்னமோ யோசனையாக தான் இருந்தது. அதனால் நார்மல் ஜூனே எடுத்துட்டு வந்துட்டேன்.அடுத்த முறை வாங்கிடலாம். தேங்க்ஸ்க்கா.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ஜூன்ஸ்!
லெக்கிங்ஸ் ப்ராண்டா இல்ல டிசைனா! பேர் ஸ்டைலா இருக்கு.
- இமா க்றிஸ்
ஜூலைஸ்!!
//நார்மல் ஜூனே எடுத்துட்டு வந்துட்டேன்.// அவ்வ்! ;)))))) ஜீன்ஸா!!!! ;))))))
- இமா க்றிஸ்
இமாம்மா
இது லெக்கின்ஸ் போல ஜூன்ஸ் போல இரண்டுக்கும் நடுவில் இருக்கு. துணியே எலாஸ்டிக் டைப்பில் இருக்கு. பட்டன் கிடையாது லெக்கின்ஸ் போல எலாஸ்டிக் அதனால் ஜீன்ஸ் லெகின்ஸ் ஆம் அதோட பெயர்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ஜீன்ஸ்
///அவ்வ்/// ஜீன்ஸா!!! ரொம்பவே பிடித்த உடை ஹி!!ஹி!!
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அபிராஜ சேகர்
அபி அந்த துணியோட பெயர் ஜெக்கின்ஸ். நானும் ஒன்னு எடுத்தேன் க்ரே கலர்ல.வேற கலர் எடுக்கணும். வாங்குங்க நோ ப்ராப்ளம்.
Be simple be sample
ஜீன்ஸ்
துணியோட பெயர் ஜெக்கின்ஸ். ஆனால் மாடல் நேம் ஜீன்ஸ் லெக்கின்ஸ்... அப்படி தான் சொன்னாங்கோ...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ஜீ vs ஜூ
அபி... கிக்கிக்.. ;)))) என்னால சிரிச்சு முடியல. ;)) முழு நீளத்துக்கு விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி. என்னிடமும் இருக்கு அது.
ஜூஸை ஜீஸ் என்று எழுதிப் பார்த்திருக்கேன். ஜீன்ஸை ஜூன்ஸ்னதும் திருத்திப் படிக்கத் தோணல; சட்டென்று குழம்பிட்டேன். ;)))))
- இமா க்றிஸ்
இமாம்மா
சரி கேட்டுட்டீங்களேனு காலையில் எழுந்து டீ கூட போடாமல் பதில் சொன்னா தெரிஞ்சுகிட்டே கேட்டு கலாய்ச்சிருக்கீங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன்... இனி நான் எதுவும் கேக்கல பதில் சொல்லலலலல...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி