பச்சைமிளகாய் சாம்பார்

தேதி: November 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

துவரம் பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 3
கடுகு - அரை தேக்கரண்டி
புளிக்கரைச்சல் - 3 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - கால் கப்
வெண்டைக்காய் - 7
கத்திரிக்காய் - 1
மாங்காய் - பாதி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 கொத்து
வெங்காயம் - 3
தக்காளி - 2
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, போட்டு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த பருப்புடன் வதக்கிய வெண்டைக்காய், மாங்காய், கத்திரிக்காய், போட்டு புளிக்கரைச்சல் ஊற்றி, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை சாம்பாருடன் சேர்த்து சேர்த்து கலக்கி விட்டு இறக்கவும்.
சுவையான பச்சைமிளகாய் சாம்பார் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காரசாரமா இருக்கும் போல. கத்திரிக்காய் முருங்கை மாங்காய் பார்த்திருக்கேன்... வெண்டை காம்பினேஷன் புதுசு. ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையாக‌ இருந்தது

Reiki Guna ( Reiki Distance Group Healer )