<!--break-->Enaku thirumanam agi 1years aguthu ethuvaraikum kulantha vendamnu ninaichom nan padichidu erunthala Oct 2 my last period ananen enaku 28 days normal periods enum enaku period agala today morning check pannen negative result varuthu pls help me epa nan pregnant erukena elaya
பூங்கோதைகண்ணம்மாள் மேடம்
அன்புள்ள பூங்கோதைகண்ணம்மாள் மேடம் க்கு நன்றி. உங்கள் இந்தக் குறிப்பை(பசலைக் கீரை) நான் ஏற்கனவே படித்து நிறைய வீடுகளில் கேட்டு கடைசியாக 3 நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டில் இருப்பதை கண்டுபிடித்து விட்டோம். நான் பாரம்பரிய மருத்துவம் கடந்த 2 வருடங்களாக பார்த்து எழுதி வைத்தும் ஒரு சில மருத்துவத்தை கடைபிடித்தும் வருகிறோம். எனக்கு 38 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருகிறது. இது நார்மல் தானா மேடம். நன்றி.
அன்புடன்
ஜெயஸ்ரீ
அன்புள்ள ஜெயஸ்ரீக்கு,
அன்புள்ள ஜெயஸ்ரீக்கு,
உங்களுக்கு ஆரம்பம் முதலே இப்படி இருந்தால்
அதற்காக கவலைப்பட வேண்டாம் என்று தான் நினைக்கிறேன். இதைச் சரிப்படுத்த ஆங்கில மருத்துவர்கள் தரும் மருந்து நாளடைவில் கருத்தரிப்பதை
மட்டுப்படுத்துவதாக நாட்டு மருத்துவர் சொன்னதாக நினைவு. எனவே யோசித்து
முடிவெடுக்கவும். அவரே அதற்கு வழியும் கூறியிருக்கிறார், அதையும் பார்க்கவும்
அல்லது ஓமியோபதியில் பார்க்கவும். தொடர்ந்து இந்தக் கீரையை உண்ணலாம்.
என்னுடைய மாணவிகள் சிலருக்கு இந்த மாதிரி இருந்து ஒருமாத மருந்திலேயே
குணமாகி இன்று நல்லதோர் குடும்பத் தலைவியராக உள்ளனர்(12 ஆம் வகுப்பு
மாணவியர்) அவர்கள் எடுத்துக் கொண்ட வைத்திய முறை ஓமியோபதி முறை.
நீங்களும் முயன்று பாருங்கள். தற்போதைய நாள்சுழற்சி முறையில் நீங்களாக
இருபத்தியெட்டு நாள் கணக்கு தானே வரவேண்டும் என்று மாதவிலக்கு ஆக வேண்டும் என்று எந்த மருத்துவமுறையையும் கடைப்பிடிக்காதீர்கள்.
கீரை வைத்தியத்தால் நல்ல பலன் கிடைத்தால் நாள் தள்ளிப்போகும்தானே.
வழக்கமாக நாள் தள்ளிப்போகும் போது உடல் முழுவதும் சொல்லமுடியாத
வலி, மன எரிச்சல், கைகால் உளைச்சல் என்று எதுவும் இல்லை என்றால்
மிகவும் நல்லது. பொறுத்தது பொறுத்தீர்கள், ஒருமாதம் கீரையை உண்டபின்
(ப்ரக்னென்சி டெஸ்ட் நாற்பது நாள்களுக்குப் பின் எடுத்துப்பாருங்கள்)
டெஸ்ட் எடுத்துப் பாருங்கள். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆனவர்கள்,
கண்டியோ கேட்டியோ என்று ஆனவர்களுக்குக் கூட குழந்தை பிறந்திருக்கின்றது
அதனால் இறைவனை நம்புங்கள், நல்லதே நடக்கும், பாப்பாவும் நடக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
Jai today eve enaku periods
Jai today eve enaku periods agiduchi I feel very bad ungaluku kulantha elanu epa than parthen udampa pathukonga kandipa ungaluku kulantha porakum enaku yen thidirnu period agiduchi enaku ungaluku therinja pathil solunga enaku kandipa kulantha venum
Entha nilayum marum
to s maya
மாயா நீங்க டிரீட்மென்ட்(treatment) எடுத்துக் கொண்டு இருக்கீங்களா இல்லையா. பதில் சொல்லுங்க பா.
பிறகு நான் எனக்கு தெரிந்த ஐடியா தருகிறேன்.
பூங்கோதைகண்ணம்மாள் மேடம்
மேடம் எனக்கு டிரீட்மென்ட் எடுத்தால் மட்டுமே 30 நாட்களுக்கு ஒருமுறை பிரீயட்ஸ் வருகிறது. 5 ஐயுஐ செய்தும் கருதரிக்கவில்லை. பணம் தான் செலவாகியது. அதற்க்கு மேலே மாத்திரை சாப்பிட்டு அல்சர் தான் பாஃர்ம் ஆகியது. எனக்கு செப்டம்பர் 8-ம் தேதி பிரீயட்ஸ் வந்தது. இன்றுடன் 61 நாட்கள். நேற்று டாக்டரிடம் சென்று பீட்டா எச் சி ஜீ ரத்த பரிசோதனை செய்தோம் நெகடிவ் என்று வந்தது. பிரீயட்ஸ் வர டேப்லட் கொடுத்திருக்கிறார்கள். நான் டிரீட்மென்ட் ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுத்திவிட்டேன். பிறகு தான் இப்படி தள்ளி போனது. மேடம் என் கணவர் உங்களிடம் ஒரு சந்தேகத்தை கேட்க சொன்னார். அது பசலை கீரையை பச்சையாக அரைத்து சாப்பிடலாமா என்பது தான். தீர்த்து வையுங்கள். என்க்கு கருமுட்டை சரியாக வளராமலும், அல்லது வெடிக்காமலும் இருந்தால் இவ்வாறு நாள் தள்ளி வரும் என்று டாக்டர் கூறினார். மேடம் கருமுட்டை வளர பச்சைபயறு சாப்பிட வேண்டும் என்று இத்தளத்தில் தெரிந்துகொண்டேன். பசலைக்கீரையும் பிரீயட்ஸ் வந்த பின் சாப்பிடுகிறேன் மேடம். என் பிரச்சனைக்கு வேறு ஏதேனும் தீர்வு அல்லது உங்க கருத்தைக் கூறவும் மேடம். மற்ற தோழிகளும் எனக்கு உதவி செய்யுங்கள்.
உங்கள் பதிலுக்கு எனது நன்றிகள் மேடம்.
அன்புடன்
ஜெயஸ்ரீ
அன்புள்ள ஜெயஸ்ரீக்கு.
அன்புள்ள ஜெயஸ்ரீக்கு,
தினமுமே பச்சைப் பயறு சாப்பிடுவதால்
பருப்பு வேகவைத்து பருப்புசாதம் நெய் ஊற்றி சாப்பிடுவது போல கீரையை
நிறைய சேர்த்து சாப்பிடலாம் என்பது என்கருத்து. பச்சையாக சாப்பிடவேண்டும்
என்று அதில் சொல்லவில்லை. பாசிப்பருப்பு,கீரை,தக்காளி, தேங்காய் சேர்த்து
கூட்டு அல்லது சூப் போலவும் எடுத்துக் கொள்ளலாம், உங்கள் கணவருக்கு
முருங்கைக் கீரை, முக்கியமாக முருங்கைப்பூ, முருங்கைக்காய் தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவாகக் கொடுங்கள்.
முடிந்தால் விருப்பமும் வசதியும் இருந்தால் ஏதாவது பூனைக்குட்டி,அல்லது நாய்க்குட்டி அல்லது வேறு எந்தப் பிராணி பிடிக்கிறதோ
அதை வள்ருங்கள். அதன் அன்பு, பாசம், விளையாட்டு, அதை வளர்ப்பதில் உங்கள் கவனம் திரும்பும் போது உங்களை ஒரு தாயாய் உணருவீர்கள்.
இதுவரையில் நான் இன்னும் அம்மா ஆகவில்லையே என்ற உங்கள்
சோகம் காணாமல் போகும். ஏக்கம் மறையும் போது உங்கள் மனமும் அதை
அடுத்து உடலும் உங்கள் சொந்தக் குழந்தையை வரவேற்கத் தயாராகிவிடும்.
பிறகென்ன நீங்களும் உங்கள் குழந்தையுடன் ஓடிப் பிடித்து விளையாடும்
காலம் விரைவில் ஓடிவரும். நாளை அல்லது மறு நாள் வேறு குறிப்புக்களைத்
தேடிப் பார்த்துப் பதிவிடுகிறேன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
poongothaikannammal madam and imma madam
ரொம்ப நன்றி மேடம். நீங்க சொல்வது போலே செய்கிறேன். இந்த மாதம் பிரீயட்ஸ் வந்ததும் மலைவேம்பும் (இந்த தளத்தில் நிறைய தோழிகள் பயன்படுத்தி குழந்தை பெற்றிருக்கிறார்கள் என்பதை படித்தேன்) 2 -ம் நாள் முதல் 4-ம் நாள் வரை 3 நாட்களுக்கு குடிக்கலாம் என்று இருக்கிறேன் மேடம். இந்த தளத்திற்கு வந்த பின் எனக்கு நிறைய தெளிவு கிடைத்திருக்கிறது மேடம். மாதா மாதாம் ஹாஸ்பிடலுக்கு செல்வது மருத்துவர் தரும் மாத்திரை விழுங்குவது, கரு வெளிவரும் நாட்கள் மட்டும் அதாவது 3 நாட்கள் மட்டும் சேர்ந்திருப்பது மறுபடியும் பீரியட்ஸ் வருவது இப்படியே 6 வருடங்கள் முடிந்து இதோ 7 வது வருடம் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 3 டாக்டர் பார்தாகிவிட்டது, யாருமே இது தான் உங்களுக்கு பிரச்சனை என்று எந்த மருத்துவரும் சொல்லவில்லை. ஒருவேளை நான் சரியான மருத்துவரை நாட வில்லையோ என்னவோ. ஆனால் எனக்கு மருத்துவம் செய்த எந்த டாக்டரையும் நான் குறைசொல்லவில்லை. கடவுள் என் அருகிலேயே இருந்து என்னை சோதிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நானும் அவரை விடுவதாய் இல்லை. எனக்கு கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நிச்சயம் என்னை கை விடமாட்டார். நானும் நிறைய முயற்ச்சிகள் செய்துகொண்டுதான் இருக்கிறேன். பார்ப்போம் என் முயற்ச்சிகள் வெற்றி அடைவது கடவுள் கைகளிலேயே உள்ளது.
அன்புடன்
ஜெயஸ்ரீ
anbudan jai
Nan kulanthaikaga ethuvaraikum entha treatment edukala adikadi enaku healthwise problem varum so karupapai weak erukumonu check pannen Dr normal than erukenu sonnanga 1 month vitmin taplet koduthanga vera ethum solala da
Entha nilayum marum
அன்புள்ள மாயா
அன்புள்ள மாயா உங்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வரும் என்று சொல்லியிருக்கீங்க. அதன்படி உங்களுக்கு பீரியட்ஸ் நின்றதும் 5 அல்லது 6-ம் நாள் முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் 12-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை தினமும் உறவு வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக 13 மற்றும் 14-ம் நாள்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க. பீரியட்ஸ் வருவதற்க்கு ஒருவாரம் முன்பு உறவு வைப்பதை நிறுத்தி விடவும்.
சில குறிப்புகள்
1. பச்சை பயறு முளைகட்டி சாப்பிடுங்கள், எதாவது ஒரு கீரை தினமும் சாப்பிடுங்கள்.
2.ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.(பெரிய டம்லரில் 12 முறை)
3.மாதுளை தினமும் சாப்பிடவும்.
4.உங்க கணவருக்கு தினமும் இரவில் 2 முதல் 5 வரை பாதாம்,பிஸ்தா, தரவும். மாதுளை,முருங்கை கீரை கொடுங்கள்,.
4. இருவரும் செவ்வாழை தினமும் சாப்பிடுங்கள்.
5.முக்கியமாக இருவரும் டென்ஷன் இல்லாமல் சந்தோசமாக இருங்கள்.
6. தினமும் அலுத்துக்கொள்ளாமல் இதை பஃலோ செய் பா. நிச்சயம் வெற்றி அடைவீர்கள்.
விரைவில் நல்ல செய்தி சொல்லவும் மாயா.
அன்புடன்
ஜெயஸ்ரீ
அன்புள்ள ஜெயஸ்ரீ.
கொடிப்பசலையப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மூலிகைவளம்
என்ற தளத்தினைப் பார்க்கவும். தமிழகத்தில் நம் அருகிலேயே இருந்து
நம்மால் தெரிந்து கொள்ள முடியாத எளிய அரிய கீரைவகைகள், மலர்கள்
என்று ஏராளமாகக் கிடைக்கும். தேடினால் மேலும் பல தளங்கள் நமக்குக்
கிடைக்கும். தீபாவளி வாழ்த்துக்களுடன்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.