ஹோட்டல் வேண்டும்

நாங்கள் ஆகஸ்டு மாதம் திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு போகிறோம். அங்கு தங்க நல்ல hôtel எது என்பதை சொல்லுங்க..
பார்க்க வேண்டிய இடங்களும் சொன்னால் மிகவும் நல்லது

எனக்கு தெரிஞ்சு நிறைய‌ கோவில்கள் உள்ளது. திருச்சியில் உச்சி பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சாவூரில் தஞ்சை பெரிய‌ கோவில் மற்றும் அதன் அருகில் தஞ்சாவூர் டு கும்பகோணம் போகிற‌ வழியில் பாபாநாசத்தில் இறங்கி திருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் மற்றும் கும்பகோணம் அருகில் திருமண்ச்சேரி மற்றும் திருநாகேஸ்வரம் பக்கத்திலே நடந்தகூட‌ போகலாம் உப்பில்லியப்பன் கோவில் மற்றும் நிறைய‌ கோவில் கும்பகோணம் அருகில் உள்ளது.நாங்கள் தற்சம்யம் அந்த‌ ஊரை சுற்றி போன‌ கோவில். பிளான் பன்னாம் போனோம் அப்படி இருந்தே இத்தனை கோவில் போய்ட்டு வந்துட்டோம். நீங்க‌ கொஞ்சம் பிளான் பன்னி போன‌ இன்னும் நிறைய‌ போகலாம் அதுவும் கும்பகோண்ம் சுற்றி 9 நவகிரகங்கள் கோவிலும் உள்ளதாம்..நாங்க‌ பஸ்சில் 1 நாள்கள் கும்பகோணம் போகிற‌ வழியில் பாபாநாசத்தில் இறங்கி திருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் மற்றும் கும்பகோணம் அருகில் திருமண்ச்சேரி மற்றும் திருநாகேஸ்வரம் உப்பில்லியப்பன் கோவில் போய்ட்டு வந்தோம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Na kumbakonam thane. Enga urula ellatha kovil ethume ella. Ovvoru kovilukum ovvoru sirappu. Kumbakonam busstand LA erunthu daily morning oru bus pogum. Athu 9 navagraga kovilukum pogum. Thirumanacheri and thirukarukavur karbagaratchagambigai ponga. Innum niraya erukku.

மன்னிக்கவும்.மீனா செல்வி என்ற‌ பழைய‌ இழையில்லியே கருத்து தெரிவிக்கவும்.
நீங்கள் கும்பகோணம் என்றால் ஓட்டல் எதுவும் தேட‌ தேவையே இல்லை. உங்கள் வீட்டிற்கு வந்து தங்கி விடுகிறோம்.
இல்லை இல்லை சும்மாதான் சொல்கிறேன். பயந்து விடாதீர்கள்.
பதில் அளித்தற்கு மிகவும் நன்றி.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றி கனகமுத்து.
முதலில் சொல்லிக்கொள்கிறேன். எனது பழைய‌ கடவுசொல் கிடைத்து விட்டதால். என் பழைய‌ இழையிலேயே பேசலாம். தவறாக‌ நினைக்க‌ வேண்டாம்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

கும்பகோணத்தை சுற்றி நவகிரக கோயில்களும் பக்கத்திலே சிறுசிறு கோயில்களும் உள்ளது. குறைந்த‌ வாடகையிலே ஹோட்டல் இருக்குது. நீங்க‌ கும்பகோணத்தில் இறங்கி ரூம் போட்டு லக்கேஜ் வச்சுட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு கிளம்பணூம். மேப் கையில் இருந்தால் தான் ஈஸியா இருக்கும். கார்ல போனிங்கனா கும்பகோணத்தை சுற்றீ 10 டூ 15கிலொமீட்டர்லயே எல்லா கோயில்களும் இருக்குது. 2 நவகிரகம் தான் அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். அப்பறம் பக்கத்திலே கூத்தனூர் சரஸ்வதி கோயில் இருக்குது. சரஸ்வதிக்கென்று தனி கோயில் இங்குதான் உள்ளது.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றி கிருஷணாமெர்சி,
நவகிரக் கோயில் என்று சொல்கிறீர்களே,அது எப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக‌ 9 கோயிலா? எல்லாம் ஒன்றாக‌ சேர்த்து ஓரே கோயிலா? சரஸ்வதிக்கு ஒரு கோயிலிருப்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

வணக்கம் சகோதரி. ஒரு ஒரு நவக்கிரகங்களுக்கும் தனிதனி கோயில்கள் இருக்கிறது.அதுமட்டுமல்ல கும்பகோணத்தில் 5 கி மீ சுற்றியுள்ள கோயில்கள் பார்க்கவே உங்களுக்கு ஒரு நாள் பத்தாது. அத்தனை கோயில்கள் உள்ளன. கும்பேஷ்வரர் அபிமுஹேஷ்வரர் காசி விஸ்வநாதர் சாரங்கபாணி நாகேஸ்வரன் கோயில் என இன்னும் நிறைய கோயில்கள் இருக்கிறது. சரஸ்வதி கோயில் கும்பகோணத்தில் இருந்து 35-40 கிமீ தூரத்தில் கூத்தனூர் (பூந்தோட்டம்) என்னும் ஊரில் உள்ளது. செல்லும் வழியில் இன்னும் பல கோயில்கள் தரிசிக்கலாம்

எனக்கு தெரிஞ்சு நிறைய‌ கோவில்கள் உள்ளது.உங்களுக்கு பாக்குறதுக்குத்தான் டைம் வேணும் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் ஒதுக்கினால் எல்லாக் கோவில்களும் பாத்துவிடலாம் என‌ நினைக்கிறேன். போகிற‌ வழி எல்லாம் கோவில்கள் தான் அதுவும் ஒவ்வொன்றும் பிரசித்தம் பெற்றது

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்