துபாய் ட்ரான்சிட் - சந்தேகம்

நான் இந்தியா செல்கிறேன். விமானம் dubai வழியாக போகிறது.அங்கு 8 மணிநேரம் காத்திருக்க வேண்டும் என்றும்,வேண்டுமானால் விமான நிலையத்திலிருந்து வெளியே சென்று dubai கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம் என்கிறார்கள். யாராவது அப்படி சென்றிருந்தால்,எனக்கு விளக்கம் சொல்லுங்கள். விமானநிலையத்தை விட்டு எப்படி வேளையில் செல்வது எப்படி? என்ன பார்க்க வேண்டும் என்று...உங்களுக்கு இருந்த அனுபவங்களை எனக்கும் சொன்னால், எனக்கும்,என்னைப்போன்ற பலருக்கும் உதவியாக இருக்கும். ஓன்றும் தெரியாது செல்பவர்களுக்கு வழி காட்டும்.

நானேதான். முன்பு இருந்த‌ கடவு சொல்லை மறந்து விட்டேன். அதனால் வந்த‌ பிரச்சை தான் பெயர் மாற்றம். எனக்கு 2 பெயர்கள்.மறதியினால் வந்த‌ வினைத்தான் இது.

எனது கேள்விகளுக்கு பதில் அளித்த‌ எல்லோருக்கும் நன்றி.

மீண்டும் சொல்கிறேன் எனது பெயர் மாற்றம் செய்ததிரற்கு எதுவும் நினைக்க‌ மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
இமா நீங்கள் சொன்னதுப்போல‌ தலைப்பை மாற்றிவிட்டேன். உங்கள் யோசனைக்கு நன்றி.
நான் பிராஞ்சு பிரஜை. பிரான்ஸிலிருந்து துபாய் வழியாக‌ செல்கிறேன்.

வாணி வாசு சொன்னதுப்போல் ட்ரான்சிட் விசா தருகிறார்கள் என்று டிக்கெட் ஏஜன்ஸியில் சொன்னார்கள்.

ஆனாலும் எனக்கு சந்தேகம். அதனால்தான் உங்கள் யோசனையை கேட்டேன்.
கஷ்டம் என்றால் விட்டு விடுவேன்.
இருக்கும் கொஞ்ச‌ நேரத்தில் வெளியே போவது நல்லதா? அதற்குள் ஏதாவது சுற்றி பார்க்க‌ சாத்தியமா?

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

//இமா நீங்கள் சொன்னதுப்போல‌ தலைப்பை மாற்றிவிட்டேன்.// அவ்வ்வ்!!
தலைப்பை எங்கே மாற்றினீங்க! புது இழை இல்லையா திறந்திருக்கீங்க‌!!! ;)

//வாணி வாசு// இல்லை அவங்க‌, வனி வசு. ;)

//இருக்கும் கொஞ்ச‌ நேரத்தில் வெளியே போவது நல்லதா?// இடம் புதிது. திரும்ப‌ உள்ளே வந்து செக் இன் செய்ய‌ வேண்டும். தாமதமாகக் கூடாது. //அதற்குள் ஏதாவது சுற்றி பார்க்க‌ சாத்தியமா?// இது உங்கள் ரசனையையும் உங்களுக்குக் கிடைக்கும் ட்ரான்சிட் நேரத்தையும் பொறுத்தது.

ட்ரான்சிட் வருவது போல‌ பயணங்கள் என்றால் டிக்கட் புக் செய்யும் போது மணித்தியாலக் கணக்கு என்று இல்லாமல் வசதியைப் போல‌ ஒன்று அல்லது இரண்டு நாட்கள் (அல்லது அதற்கு மேல்) இருப்பது போல‌ புக் பண்ணுவது நல்லது. ஆறுதலாக‌ பார்க்க‌ வேண்டியதைப் பார்க்கலாம். (இப்படித் தான் நான் இந்தியா சிங்கப்பூர் எல்லாம் போகிறேன்.)

////இருக்கும் கொஞ்ச‌ நேரத்தில் வெளியே போவது நல்லதா?//// யார் யார் போகிறீர்கள்? (குழந்தைகளோடு போவதானால் சிரமங்கள் இருக்கும்.) பயணத்தில் வாந்தி வருவது இல்லையா? உங்கள் களைப்பு லெவல் எப்படி இருக்கும்? நீங்கள் தான் யோசிக்க‌ வேண்டும்.

//முன்பு இருந்த‌ கடவு சொல்லை மறந்து விட்டேன்.// உள்நுழையும் போது அறுசுவை தானாகவே கேட்குமே, 'கடவுச் சொல்லை மறந்துவிட்டீரா?' 'புதிய‌ கடவுச் சொல் மாற்ற‌ வேணுமா?' என்றெல்லாம். ;) மாற்றலாம் நீங்கள். இருக்கும் கேள்வியிலேயே, கேள்வித் தலைப்பை மாற்றலாம். கேள்வியையே கூட‌ மாற்றலாம். கமண்ட் கூட‌, இன்னொருவர் பதிலளி க்ளிக் செய்யவில்லை என்றால் எடிட் செய்யலாம். கொஞ்ச‌ நாளிலேயே பழகிருவீங்க‌ எல்லாம்.

‍- இமா க்றிஸ்

வனி வாசு உங்கள் பெயரை தப்புதப்பாக‌ எழுதியதை தவறாக‌ நினைக்க‌ வேண்டாம். இனிமேல் தப்பாக‌ எழுத‌ மட்டேன்.

வணக்கம் இமா

இப்படி எனக்கு அழகாக‌ தப்பை திருத்தி சொல்லிகொடுத்து இருக்கிறீர்கள். அதற்கு முதலில் மிக‌ மிக‌ நன்றி.

எனக்கு சில‌ ஆண்டுகளாக‌ என்ன‌ சொன்னாலும் மறந்துவிடும். அதனால்,இனி திரும்பவும் அதே தப்பை நான் செய்தால்,தவறாக‌ நினைக்காமல் சொல்லி விடுங்கள். சொல்லி கொடுத்தும் விடுங்கள்.

சிரிப்பு வந்தால் சிரித்துக்கொண்டே சொல்லிக்கொடுங்கள்.

இந்த‌ நோய் என்னை விட்டு போக‌ வேண்டும் என்றுத்தான் நான் blog திறந்தேன். அறுசுவையிலும் சேர்ந்தேன்.
அறுசுவைக்கும் நான் புதிய‌து அது வேறு விஷயம்??

நாங்கள் எல்லோரும் கும்பாலாகத்தான் போகிறோம்.
என் பிள்ளைகள் எல்லாம் பெரிய‌ பிள்ளைகள்தான் என்று நினைக்கிறேன். கடைசி பெண்ணே 10 எழுத‌ போகிறாள். என் கணவரும் என்னை விடவும். என் பிள்ளைகளுடனும் பெரியவர்.

இதில் எனக்கு மட்டும்தான் 17 வயது. அப்போ சொல்லுங்க‌ இதில் நான் மட்டுமே எல்லாருக்கும் இளைஞியாக‌ இருக்கிறேன். ஏதாவது குழைப்பி விட்டேனா? எப்படியோ இதிலிருந்து புரிந்துக்கொண்டு இருப்பீர்கள். இந்த‌ கும்பலில் ஒரு குழந்தைதான் என்று.

வாந்தி எடுக்கும் பிரச்சனை முன்பு என் பிள்ளைகளுக்கு இருந்தது. கொஞ்ச‌ நாட்களாக‌ அது இல்லை. மேலும் மாத்திரையையும் கையில் எடுத்துக்கொள்வேன். மருந்துக்கடையில் வியாபாரம் ஆக‌ வேண்டாமா?

எங்களுடன் எங்களது வெள்ளைக்கார‌ நண்பருகளும் சிலர் வருகிறார்கள்.
நீங்கள் சொன்னதுப்போல் களைப்புக்கு யாருமே க்ரேண்டி கொடுக்க‌ முடியாது. பயணம் என்றாலே!!!!!!!

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பேரை எப்படி கூப்பிட்டாலும் எனக்கு சரி தான்.

துபாய் ஏர்போர்ட் போய் விசா வாங்க இயலாது. வாங்கிட்டு தான் போகணும். அங்க இருந்து வெளிய போகவே குறைஞ்சது 1 மணி நேரம் எடுக்கும். க்ருப்பா போறிங்கன்னா எல்லாரும் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு வெளிய போக இன்னும் 30 நிமிஷம் கூட வைங்க.

மீண்டும் செக்கின் 2 - 3 மணி நேரம் முன்னாடி. ஆக 4 - 5 மணி நேரம் போச்சு. பாக்கி 4 மணி நேரத்தில் ஊருக்குள் பயணம் 1 மணி நேரம் என்றால் கூட சுற்றிப் பார்க்க் நேரமில்லை என்பது என் கருத்து.

இருக்கும் நேரம் ஏர்போர்ட்டை சுற்றலாம். பெரிய ஷாப்பிங் உண்டு உள்ளே. நேரம் போவதே தெரியாது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மொத்ததில் கணக்கு போட்டு பார்த்தால்,ஏர் போர்டிலேயே காலம் தள்ளுவது மிகவும் நல்லது என்று நினைக்கிறேன்.
இன்னும் ஐடியா கொடுத்துக்கொண்டே இருங்கள். ஐடியா கொடுப்பததிற்கு மீண்டும் நன்னி,நன்னி. இனிமேலும் நன்றி,நன்னி.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்க ஃப்ரெஞ்ச் பாஸ்போட் ஹோல்டர் எனில் உங்களுக்கு துபாய் ஏர்போட்டிலே விசா எடுக்கலாம். ஆனால் நேரம் அதிகமாகும். அதுவும் வியாழன், வெள்ளி, சனி கிழமைகள் எனில் மிக அதிக நேரம் ஆகலாம்.
அடுத்து உங்களுக்கு இருப்பது எட்டு மணி நேரம் தான். அதற்க்குள் விசாவும் எடுத்து விட்டு வெளியே சென்று டாக்ஸி புக் பண்ணி செல்வதாக வைத்துக் கொள்வோம்... டிராஃபிக் - லிருந்து தப்பி உரிய நேரத்திற்க்குள் மறுபடியும் அடுத்த விமானம் புறப்படும் நேரத்திலிருந்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்திற்க்கு முன் விமான நிலையத்திற்க்குள் இருந்தாக வேண்டும். வெள்ளி கிழமை காலையில் துபாயில் டிராஃபிக் குறைவு. மற்ற நாட்களில் காலை 8 மணிக்கு மிக அதிக அளவில் சாலையில் நெருக்கடியாக இருக்கும்.
ஏர்ப்போட் அருகில் சுற்றிப் பார்க்கும் அளவில் இடங்கள் இல்லை. ஆனால் துபாய் மால் Dubai Mall ஏர்ப்போட்டுக்கு அருகே உள்ளது. ஷாப்பிங்க் பண்ணிட்டு துபாய் மாலை
சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். துபாயில் உள்ள மற்ற இடங்களுக்கு குறுகிய மணி நேரத்திற்க்குள் சென்று வர வாய்ய்ப்பில்லை.
துபாய் ஏர்ப்போட் சுற்றிப் பார்க்கும் அளவிற்க்கு மிக அழகாக இருக்கும். மிகவும் பெரிய ஏர்ப்போட்டும் கூட. ஒரு இடத்தில் தொடங்கி மீண்டும் அதே இடத்திற்க்கு வரவே 2 - 21/2 மணி நேரங்கள் ஆகும். ஏர்ப்போட்டை சுற்றிப் பார்த்து விட்டு அங்கேயே உள்ள உணவகத்தில் விருப்பமான அல்லது மத்திய கிழக்கு உணவுகளை ருசிக்கலாம் :))

Sis Meena selvi,
neenga pre approved visa apply panni travel pannuvathu nandraha irukum.french pp holderku enna procedure yendru yenaku theriyathu.
dubaiku velia 24 hourskaga pogavathu yenpathu waste.. ungaluk sufficient time irukukathu. Middle east id holderku kooda ippa arrival visa stop panni vittaanga dubaiku.

ithu yen opinion.

Thanks@

Naangal sudan pogum pothu dubai valiyaga than ponom.air arabia flight free visa kuduthanga ticket book pannum pothu transit potu 10 hours dubai ulla poi suttri parthom.neenga ticket podum pothu visaringa

adi maram kolirnthalthan nooni maram valarum

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி aashima,Mohamed Niyaz.நீங்கள் சொல்ல்வதைப்பார்த்தால் இது ரொம்பவும் ரிஸ்க் என்று நினைக்கிறேன்.அடுத்தமுறைத்தான் aashima சொன்னதுப்போல் டிக்கட் வாங்க‌ வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் சில பதிவுகள்