சிறுதானிய‌ தீபாவளி

தீபாவளி தலைப்புல‌ சொன்னதுல‌ என்ன‌ புதுசு இருக்கு. இது தான் எங்களுக்கு தெரியுமேனு சொல்லக் கூடாது. அதுக்காக தான் இந்த‌ வலைப்பதிவு. முறுக்கு அதிரசத்தையே சிறு தானியத்துல‌ செய்ய‌ கத்து தரேன். கூடவே அல்வாவும். இது நமக்கு சிறுதானிய‌ தீபாவளியா இருக்கட்டும்.

1. வரகரிசி முறுக்கு:

1. 1/2 கிலோ வரகரிசி, 100 கிராம் பாசி பருப்பு, 100 கிராம் கடலைப் பருப்பு, 50 கிராம் உளுந்து இவற்றை லேசாக‌ வாணலில் வறுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
2. இந்த‌ மாவில் 50 கிராம் வெண்ணெய், எள் 2 ஸ்பூன், சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு எண்ணையில் பொரித்து எடுத்தால் சுவையான‌ சத்தான முறுக்கு ரெடி.
குறிப்பு: இதை நமக்கு இஷ்டமான‌ மற்ற‌ அரிசியிலும் செய்யலாம். கேழ்வரகிலும் செய்யலாம்.

2. சாமை தினை அதிரசம்:

1. சாமை 1/2 கப், தினை 1/2 கப் இரண்டையும் 2 மணி நேரம் நீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக‌ அரைக்கவும்.
2. 1/2 கப் வெல்லத்தை மிக‌ சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பிடிக்கவும். (பாகு உருட்டு பதம் இருக்க‌ வேண்டும். உருட்டு பதம் என்றால் ஒரு சொட்டு எடுத்து தண்ணீரில் போட்டு பின் அதை எடுத்து உருட்டும் அளவுக்கு வர‌ வேண்டும்)
3. இந்த‌ உருட்டு பதத்தில் அரைத்த‌ மாவை சேர்த்து கிளறி, ஏலக்காய்தூள் சேர்த்து அப்படியே 2 நாளைக்கு புளிக்க‌ விட‌ வேண்டும்.
4. பின் எண்ணை தடவிய‌ வாழை இலையில் அதிரசமாக‌ தட்டி எண்ணையில் பொரித்து எடுக்க‌ வேண்டும்.

3. கம்பு கேழ்வரகு அல்வா:

1. கம்பு 250 கிராம், கேழ்வரகு 250 கிராம் இரண்டையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊறவைத்து அரைத்துப் பாலெடுக்கவும்.
2. 250 கிராம் வெல்லத்தை பாகு காய்ச்சவும்.
3. அடிகனமான‌ கடாயில் பிழிந்து வைத்திருக்கும் பாலை ஊற்றி பச்சை வாடை போக‌ நன்கு கிளறவும்.
4. பின் வடிகட்டிய‌ வெல்ல‌ பாகை இதனுடன் சேர்த்து 1 ஸ்பூன் ஏலப்பொடி, மற்றும் 150 கிராம் நெய் விட்டு கைவிடாமல் கிளறி அல்வா பதம் வந்ததும் நெய்யில் வறுத்த‌ முந்திரி சேர்த்து இறக்கவும்.

இன்னும் ஏதாவது வேணும்னா கேளுங்க‌ அடுத்த‌ வலைபதிவு போட்ருவோம்.

பலகாரம் தயார். அப்றம் என்ன‌? சூப்பரா தீபாவளிய‌ கொண்டாட‌ வேண்டியதுதான். சந்தோஷமா பட்டாசு வெடிங்க‌. முடிந்த‌ வரை பட்டாசில் காசை கரியாக்கமல், பட்டாசு செலவை குறைத்து அந்த‌ பணத்தை இல்லாதவர்க்கு கொடுக்கலாமே. எனக்கு கருத்து சொல்லலாம் வராது. அப்டியே கருத்து சொன்னாலும் கலாய்க்கறதுக்குனே சிலர் இருப்பாங்க‌. போதும். நான் சொல்ல‌ வந்தது இது தான். மறக்காம‌ 6 மணிக்கு முன்னாடி வெந்நீரில் குளிங்க‌. நல்லெண்ணை சீயக்காய் தேய்க்க‌ மறக்காதீங்க‌. அம்புட்டு தே. WISH YOU A ADVANCE HAPPY DIWALI

5
Average: 4.8 (5 votes)

Comments

சமையல் குறிப்பு எல்லாம் கலக்கலா இருக்கு. தீபாவளிக்கு உங்க‌ வீட்டுக்கு விருந்துக்கு வரலாமா! :‍)

‍- இமா க்றிஸ்

கட்டாயம் வாங்க‌. உங்களுக்கு இல்லாமலா.

//தீபாவளிக்கு உங்க‌ வீட்டுக்கு விருந்துக்கு வரலாமா// தீபாவளிக்கு மட்டுமா? நீங்க‌ எப்போ வேணாலும் வரலாம். இன்னும் ஸ்பெஷல் பலகாரம் எல்லாம் செய்து தரேன். எப்போ வருவீங்கனு காத்துட்டு இருக்கேன் அம்மா.

எல்லாம் சில‌ காலம்.....

சிறுதானிய‌ குறிப்புகள் அபாரம். அவசியம் செய்து பார்க்கிறேன். :))
இன்னும் இருந்தால் எடுத்து விடுங்க‌. பாலா.

இந்த‌ அதிரசம் இருக்கிறதே, அதை பார்த்தாலே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சாப்பிட‌ ஆசையை தூட்டி விட்டு விட்டீர்கள்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

தீபாவளி வேலையில் பிஸியா இருக்கேன் நிகி. சிறிது நாள் கழித்து பதிவிடுகிறேன். கோவிக்க‌ வேண்டாம்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி மீனா. செய்து பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

அருமையான குறிப்புகள்.... இதை ஸ்டெப் ஸ்டெப்பா புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தா வனி தான் முதல் பதிவு போட்டிருப்பேன். ஏமாத்திட்டிங்க :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு பாலா,

எல்லா குறிப்புகளும் நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி