குழந்தையின் பல் மஞ்சளாக உள்ளது

ஹாய் ஃப்ரண்ட்ஸ், என்னுடைய குழந்தைக்கு 2 வயதாகிறது.அவளது பற்கள் மஞ்சளாக உள்ளது.அதற்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.....என்ன பேஸ்ட் யூஸ் பண்ணலாம். பெயர் சொல்லுங்கள் தோழீகளே.......

//குழந்தைக்கு 2 வயதாகிறது.// //என்ன பேஸ்ட் யூஸ் பண்ணலாம். பெயர் சொல்லுங்கள் தோழீகளே.// பொதுவாக‌ ப்ளீச்சிங் ஏஜண்ட் (பேக்கிங் சோடா) சேர்த்திருப்பார்கள் இப்படியான‌ பற்பசைகளில். இப்போ பேஸ்ட் எல்லாம் பூசித் தேய்த்து இருப்பதைக் கெடுக்க‌ வேண்டாம். விட்டுவிடலாம். இவை இன்னும் 5 வருடங்களுக்கு மேல் இருக்கப் போவதில்லை. பற்கள் விழுந்து முளைக்கும் போது நிறமும் சரியாகிவிடும். (என் சின்னவருக்கு திட்டுத் திட்டாக‌ அடையாளம் இருந்தது. இப்போ அதற்கு எதிர்மாறாக‌ பளிச்சிடும் வெண்மை. எதுவும் செய்யவில்லை நான்.) நீங்கள் செய்ய‌ வேண்டியது, ஆறரை வயதிற்குப் பிறகு கறை படியும் உணவுகளைத் தவிர்க்கப் பாருங்க‌ள். அது போதும். ஆனால் பற்கள் விழும் வரை காத்திருக்க‌ வேண்டாம். உள்ளே புதுப் பல் வளர‌ ஆரம்பிக்கும் முன்னால் கவனியுங்கள். ஒரு தடவை டென்டிஸ்ட்டிடம் காட்டிக் கேட்டுப் பார்க்கலாமே!

காரணம் என்னவாக‌ இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? முன்பானால் கருத்தரித்திருக்கும் சமயம், பாலூட்டும் சமயம் டெட்ராசைக்கிளின் போட்டிருந்தால் குழந்தையின் பல் மஞ்சளாகும் என்பார்கள். இப்போ அதன் பயன்பாடும் இல்லை.

நீங்கள் சமையலில் மஞ்சள் அதிகம் பயன்படுத்துவீர்களா? எல்லோருக்கும் இப்படி ஆவதில்லை என்றாலும் சிலருக்கு இதனால் கறை படியலாம். காப்பி தேனீர் கூட‌ கறை படியும். என்ன‌ அதிகம் சாப்பிடுகிறார்? 'கோக்' கறை படியும்.

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா அம்மா. பதில் அளித்தமைக்கு நன்றி. மேலே உள்ள பற்களில் மேல் பாதி வெள்ளையாகவும் , கீழ் பாதி மஞ்சளாகவும் உள்ளது. பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்தால் போய்விடும் என்று சொல்கிறார்கள். அதனால் தான் என்ன பேஸ்ட் யூஸ் பண்ணலாம் என்று கேட்கிறேன்.என் மகள் பால் மட்டும் தான் குடிக்கிறாள்.சாப்பாடு சரியாக சாப்பிடுவதில்லை.

இது ஒன்றும் பெரிய‌ பிரச்சனை இல்லை என்றுத்தான் நினைக்கிறேன்.
உங்கள் பிள்ளைக்கு மிகவும் புளிப்பான‌ சாப்பாடு ஏதாவது கொடுக்கிறீர்களா?
நிறைய‌ சோடா,கோக் போனற‌ பானங்கள் குடிக்கிறாளா? மிட்டாய் மற்றும் இனிப்புகள் சாப்பிடுகிறாளா?
அல்லது ஏதவாது ஆன்டிபயடிக்ஸ், வேறு ஏதாவது மருந்து கொடுகிறீர்களா?அதுவும் ஒரு காரணமாக‌ இருக்கலாம்.
குழந்தைக்காக‌ ஸ்பெஷ்லாக‌ பேஸ்ட் கிடைக்குமே,அதனை போட்டு பாருங்கள்.
குழந்தை மிட்டாய் சாப்பிட்டாலும் சரி; என்ன‌ சாப்பிட்டாலும்,சாப்பிட்டு முடித்தப்பின் உடனே பல்லை விலக்கி விடுங்கள்.
பல்லை விலக்குவது என்றால், பேஸ்ட் போட்டு இல்லை. சும்மா தண்ணீரினால் பல் விலக்குவதுப்போல் விலக்கி விடுங்கள். இந்த‌ வயது பிள்ளைக்கு 1 நாளைக்கு ஒரு முறை பேஸ்ட் போட்டு விலக்கலாம். மற்றப்படி தண்ணீரால் கழுவது எத்தனை முறை வேண்டுமானலும் செய்யலாம்.

பிள்ளை வாந்தி எடுக்கிறாதா? அடிக்கடி ஏதாவது வயிற்றுப்போக்கு ஏதாவது வருகிறதா?

முக்கால்வாசி பல்லை சரிவர‌ கவனிக்காமல் இருந்தால் இதுமாதிரி வரும்.
பல் டாக்டரிடம் இந்த‌ வயதிலிருந்து வருடம் ஒருமுறை consult பண்ணுவது நல்லது.

இந்த‌ வயதிலிருந்த்துதான் பிள்ளைகள் சாப்பிட வைப்பது பெரும் பாடாக‌ இருக்கும். தனியாக‌ சாப்பிட‌ வைக்கிறீர்களா? ஊட்டித்தான் விடுகிறீர்களா?இந்த‌ வயதில் அதுவாகவே தனியாக‌ சாப்பிட‌ பழகினால் நல்லது. தனியாக‌ சாப்பிடும் பிள்ளை என்றால் அது சாப்பிடும் தட்டில் சாப்பாட்டை அழகாக‌ ஏதாவது ஒரு வகையில் அலங்கரிக்கலாம். ஒரு முகம் வடிவில் வைத்து இப்போ இந்த‌ முகத்திலிருக்கும் வாயை சாப்பிடலாம் என்று சொல்லி அதையே ஒரு கதையாக‌ சொல்லிக்கொண்டே சாப்பிட‌ வைக்கலாம்.
ஊட்டுவதாக‌ இருந்தால்,பொம்மைகளை வைத்துக்கொண்டு அதற்கு சாப்பிடா கொடுப்பதுப்பதுபோல் செய்து அல்லது பிள்ளையை பொம்மைகளுக்கு சாப்பிட‌ சொல்லிக்கொடுக்கலாம் வா. என்று சொல்லி பிள்ளையின் வாயில் சாப்பாட்டை கொடுத்து மென்னுக்காடு பொம்மைக்கு அப்போதான் அது சாப்பிட‌ கத்துக்கொள்ளும் என்று சொல்லி சாப்பாடு கொடுக்கலாம்.
இப்படி நிறைய‌ முறையில் சாப்பிட‌ வைக்கலாம்.
ஆனால், சாப்பாட்டு நேரத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன் மிட்டாய், பிஸ்கெட் எதுவும் நொருக்கு தீனி கொடுக்க‌ கூடாது.குடிக்க‌ தண்ணீரி கொடுங்கள். அதுவும் அதிகம் வேண்டாம்.
நன்றாக‌ விளையாட‌ வைத்து சாப்பாடு கொடுங்கள்; பசி வரும். சாப்பிட்டு தூங்க‌ வைத்து விட்டு சாயிந்திர்ம் மூண்றை மணி அல்லது 4 மணிக்கெல்லாம் எழுப்பி விடுங்கள். வெளியே எங்காவது கூட்டி செல்லுங்கள் சாப்பிட‌ ஏதாவது கொடுங்கள். நன்றாக‌ விளையாட‌ விடுங்கள்.

என்னை இகழ்பவர்களுக்கு எனது ஒரே பதில் மவுனம்தான் என்பதை நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

//பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்தால் போய்விடும்// போகும். ஆனால் அந்தப் பற்பசைகள் எதனால் ஆனவை, எப்படித் தொழிற்படுகின்றன‌ என்பதைப் பற்றி அறிந்துகொள்வது முக்கியம். அதே சமயம் உங்கள் குழந்தைக்கு எதனால் பற்கள் அப்படி ஆகின‌ என்பதையும் தெரிந்துகொள்வது முக்கியம்.

என்ன‌ தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறீர்கள்? கிணற்று நீர்! குடிக்கும் நீரினாலும் இப்படி ஆகலாம். அந்த‌ நீரிலுள்ள‌ மிரனல்கள் காரணமாக‌ பற்கள் உருவாகும் போதே இப்படி உருவாகி வளர்ந்திருக்கலாம். பற்களின் மேல் படிவாகியுள்ள‌ கறை என்றால் மட்டுமே பேஸ்ட் உதவும் என்று நினைக்கிறேன். பற்கள் வளரும் காலத்தில் உடலில் சேர்ந்த‌ கனியுப்புக்கள் காரணமாக‌ பற்கள் நிறம் அப்படி அமைத்திருந்தால் அதை பற்பசையினால் மாற்ற‌ முடியாது என்று நினைக்கிறேன். ஒரு தடவை டென்டிஸ்ட்டிடம் காட்டி அபிப்பிராயம் கேளுங்களேன். என் மகனுக்காக‌ நாங்கள் செய்த‌ மாற்றம், இப்போ இதைத் தட்டும் போது தான் நினைவு வருகிறது... அவருக்கு மட்டும் குடிப்பதற்குக் குழாய் நீர் கொடுக்க‌ ஆரம்பித்தோம்.

வைட்னிங் டூத்பேஸ்ட்... இங்கு சிக்னல் கிடைக்கிறது. எல்லா ப்ராண்டுகளிலும் வைட்னிங் பேஸ்ட் இருக்கும். குழந்தைகளுக்கான‌ பற்பசைகளும் இருக்கின்றன‌.

பற்களைச் 'சுத்தம் செய்வது' பீங்கான் பாத்திரம் சுத்தம் செய்வது போல‌ அல்ல‌. பற்களைத் தேய்க்கவெல்லாம் கூடாது. எந்தப் பற்பசையானாலும் ஒரு சிறு நிலக்கடலைப் பருப்பின் அளவு மட்டும் எடுத்துக் கொண்டால் போதும். 'சாஃப்ட்' ப்ரஷ் குழந்தைக்குப் போதும்; ஈறுகளைக் கெடுக்கக் கூடாது. அழுத்தாமல் மெதுவாக‌ சுழற்சி இயக்கத்தில் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். ஒரு இடத்தில் 2 செக்கன்கள் தேய்த்தால் போதும் என்கிறார்கள். வளர்ந்தவர் ஒருவருக்கு 2 நிமிடங்களில் பல் தேய்க்கும் வேலை முடிந்தால் நல்லது. அதற்கு மேல் தேய்ப்பதால் தேய்மானம் ஆகும். நாம் சுத்தம் செய்வதாக‌ நினைத்துக் கெடுதலாகி விடும். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பார்கள். ப்ரஷ் ஊர‌... பல்லும் தேயும். ;))

தேய்ப்பதால் மட்டும் பற்கள் தேய்மானம் ஆவதில்லை. பற்பசையிலுள்ள‌ ப்ளீச்சிங் ஏஜண்டும் பல்மிளிரியைக் கரைக்கும். வைட்னிங் பற்பசைகள் ஒன்றிரண்டு நாட்களில் வெண்மையைக் கொண்டுவராது. பல‌ நாட்கள்.. ஒரு மாதம் அளவாவது எடுக்கும் சிறிதளவு வெண்மை மீள‌. அப்படி அல்லாமல் விரைவாக‌ வெண்மை கிடைக்கிறது என்றால், அந்தப் பற்பசையினால் நன்மையை விடக் கேடு அதிகம் என்று புரிந்துகொள்ள‌ வேண்டும் நீங்கள்.

‍- இமா க்றிஸ்

மீனாவின் கருத்துக் கண்ணில் பட்டதும் நேற்று இங்கு வானொலியில் கேட்ட‌ விடயம் நினைவுக்கு வந்தது. பகிர்ந்துகொள்ள‌ நினைத்தேன். மீனா சொன்னது போல‌, //என்ன‌ சாப்பிட்டாலும்,சாப்பிட்டு முடித்த பின் உடனே// வாயைக் கொப்பளிக்கட்டுமாம். பல் விளக்குவது 30 நிமிடங்களுக்குப் பின் செய்வதுதான் நல்லதாம். அமிலப் பொருட்களை உட்கொண்டிருந்தால் அவை பல்மிளிரிகளை மென்மையாக்கி இருக்கும்; அந்தச் சமயம் தேய்த்தால் மிளிரி மேலும் தேய்ந்து போகும் என்றார்கள். ஏற்றுக் கொள்ளக் கூடிய‌ கருத்தாக‌ இருந்தது; பகிர்ந்து கொள்கிறேன். தேய்க்க‌ வேண்டிய‌ நேரம் என்றாலும் உணவின் பின் பல்மிளிரிக்கு 30 நிமிட‌ ஓய்வு கொடுத்த‌ பின்பு தேய்க்கச் சொல்கிறார்கள்.

உலர் பழங்கள் உண்பதைக் குறைக்க‌ முடிந்தால் நல்லது என்றார்கள். (இவை இனிமை & அமிலத் தன்மை செறிந்த‌வை; ஒட்டும் தன்மையும் கொண்டவை. ஒட்டிக் கொண்டு கரைந்து முடிவதற்குள் பற்களுக்குப் போதுமான‌ கெடுதி நேர்ந்திருக்கும்.) இன்னொன்றும் சொன்னார்கள்... குழந்தைகளுக்குப் பழங்களை உண்ணக் கொடுக்கும் போது கூடவே ஒரு துண்டு சீஸ் கொடுக்கட்டுமாம். அது அமிலத் தன்மையை மட்டுப்படுத்தும் என்றார்கள். கறை படியக் கூடிய‌ பானங்களை அருந்தக் கொடுக்கும் போது ஸ்ட்ரா வைத்துக் கொடுக்கட்டுமாம்.

//பல்லை விலக்குவது என்றால்,// பல்லைப் பிடுங்குவது மீனா. ;)) பல்லை வி..ள..க்குவது என்றால்... பேஸ்ட் / கரி / பற்பசை / வேப்பங்குச்சு இப்படி எதையாவது கொண்டு சுத்தம் செய்வது. ;)

//இந்த‌ வயது பிள்ளைக்கு 1 நாளைக்கு ஒரு முறை பேஸ்ட் போட்டு விலக்கலாம்.// இது... ம்.. 2 தடவை... காலையும் மாலையும் கட்டாயம் பேஸ்ட் போட்டு விளக்கத்தான் வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்