i want baby plz ans me frnds...

hi frnds na arusuvaikku puthusu.என் பெயர் மணிமலர். வயது 21. எனக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. நாங்கள் முதலில் குழந்தை வேண்டாம் என்று இருந்தோம்... பின் இந்த 2 மாதங்கள் குழந்தைக்கு try பண்ணிட்டு இருக்கோம்.. ஆனால் செட் ஆகவில்லை... எனக்கு பீரியட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. 28 டேஸ்க்கு ஒரு முறை periods வருகிறது. ஆனாலும் இம்முறை இன்று period வந்துவிட்டது. இனி என்ன செய்ய வேண்டும்? உதவுங்கள்....

முதல் 7 மாதங்கள் கணக்கில் வராது என்கிறீர்கள். ஆக‌... இது இரண்டாவது மாதம்தான் இல்லையா!

//குழந்தைக்கு try பண்ணிட்டு இருக்//காமல் இயல்பாக‌ இருங்கள். அப்போதான் மனதும் உடலும் கர்ப்பத்திற்கு ஒத்துழைக்கும். யோசிக்க‌ வேண்டாம்; இன்னும் காலம் இருக்கிறது. சந்தோஷமாக‌ இருங்கள். விரைவில் நல்ல‌ செய்தி சொல்லுவீர்கள்.

‍- இமா க்றிஸ்

சரிங்கம்மா நாங்க பொருமையா இருக்கோம்.... உங்கள் வார்த்தை நம்பிக்கை தந்தது... இருந்தாலும் எனக்கு கர்ப்பம் பற்றிய எந்த பொது அறிவும் இல்லை அம்மா.. அதைப்பற்றி தங்கள் கருத்தை எனக்கு கூறவும் ப்ளீஸ்...

கருத்து என்று எதைச் சொல்வது! உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். கண்ணில் படும் விடை தெரிந்த‌ சகோதரிகள் பதில் சொல்வார்கள்.

இன்னொரு இழையில் நீங்கள் சாகோதரியொருவரிடம் பகிர்ந்துகொண்ட விடயங்களைப் படித்தேன். அதை வைத்து என் அபிப்பிராயம்...

1. நாட்கணக்கு எல்லாம் பார்த்து எதையும் தவிர்க்காதீர்கள். //கருவுற ஏற்ற 5,6 நாட்களில்// இவை மருத்துவர்களின் அவதானிப்பின் விளைவான ஒரு கணிப்பு. நீங்கள் சிகிச்சைக்கென்று போய் உங்கள் உடல் பரிசோதனைகளுக்கு உட்பட்டிருந்து, அதன் முடிவாக‌ மருத்துவர்கள் இப்படிச் சொல்லியிருந்தால் சரியாக இருக்குமே தவிர மற்றப்படி...100% சரியானது என்று சொல்ல முடியாது.

ஒரே சமயம் 6 பயற்றம் வித்துக்களை நட்டுப் பாருங்கள். ஒரே விதமாகக் கவனித்தாலும், ஒன்று போல ஒன்று வளர்வதில்லை. ஒரே சமயம் பூத்து ஒரே அளவான விளைச்சலைக் கொடுப்பது இல்லை. மனிதர்களும் ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.

இன்னொன்று... நீங்கள் சொன்ன //கருவுற ஏற்ற 5,6 நாட்க//ள் தவிர்ந்த மீதி நாட்களில் கருக்கட்டாது என்பது கிடையாது. எல்லா நாட்களும் உகந்த நாட்களே.

2. //வேலை பளு// & //தினமும் இரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்க 11 PM அகிடுது. உடலும் சோர்வாகிவிடுகிறது. OFFICE & HOME வேலை பளு உடலை வாட்டுகிறது.. இந்த காரணங்களால் தான் எங்களால் சரியான முறையில் உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை..// என்றிருந்தீர்கள்.

என் குழந்தைகள், மாணவர்களுக்கு நான் எப்பொழுதும் சொல்லும் விடயம்... 'எப்பொழுது ஒரே சமயம் 2 அல்லது அதற்கு மேல் வேலைகள் ஆக‌ வேண்டி இருந்தாலும் எதற்கு முதலிடம் கொடுக்க‌ வேண்டும் என்பதை, லாப‌ நட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்யுங்கள்,' என்பேன். நிச்சயம் ஒன்று மற்றதை விட‌ முக்கியமானதாக‌ இருக்கும்; தவிர்க்கக் கூடாததாக‌ இருக்கும். இரண்டாவது இரண்டாவதுதானே! அது தவறிப் போனால் பரவாயில்லை. இன்னொரு சமயம் அந்த‌ வேலைக்காக‌ அமையலாம். அல்லாவிட்டாலும் கூட‌ மனது சொல்லும், 'முக்கியமானதைச் சாதித்தாய், அதனால் அடுத்தது இழப்பே அல்ல‌,' என்று. ஏக்கமாக‌ இராது.

இப்போ உங்கள் முதற் தெரிவு என்ன‌? எது முக்கியம்?

களைப்பைக் குறைக்க‌ எந்த‌ எந்த‌ வேலைகளை ஒத்திப் போடலாம்?
எது கிடைக்காவிட்டால் பரவாயில்லை! சிந்தியுங்கள். வேலைகளைப் ப்ளான் செய்ய‌ இயலாதா? யோசித்துப் பாருங்கள்.

உங்கள் பிரச்சினைக்கு விடை உங்கள் கையில்தான் தங்கியிருப்பதாகத் தெரிகிறது எனக்கு.

‍- இமா க்றிஸ்

அன்புள்ள இமா அம்மா அவர்களுக்கு, நீங்கள் கூறிய பதில் என்னை தெளிவுறச்செய்தது. இனி நான் குழம்ப மாட்டேன். இனி இயல்பாகவே இருக்கிறேன். என் வேலைகளை ப்ளான் செய்து வைத்துக்கொள்கிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன் அம்மா... நன்றி

காய்ச்சலுக்கு english மருந்து சாப்பிடும்போது நாட்டுமருந்து சாப்பிடலாமா? காய்ச்சலுக்காக பாராசிட்டமலும் விட்டமின் மாத்திரையும் கொடுத்தார்கள். அதை இப்போது சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம் நானும் என் கணவரும். இருவருக்கும் வைரஸ் பீவர். english மருந்து சாப்பிடும் போது நாட்டு மருந்து சாப்பிடலாமா? ஓரிதழ் தாமரை பொடியும் தேனும் வாங்கி வைத்திருக்கிறேன். அதை என் கணவர் சாப்பிடலாமா? அல்லது மாத்திரைகள் அனைத்தும் தீர்ந்தபின்பு ஓரிதழ் தாமரை பொடியை சாப்பிடலாமா? இப்போது இருவருக்கும் காய்ச்சல் சரியாகிவிட்டது அனால் பாராசிட்டமல் மாத்திரை 2 நாட்களுக்கும் விட்டமின் மாத்திரை 1 வாரத்திற்க்கும் இருக்கிறது. இதனுடன் நாட்டு மருந்து சாப்பிட்டால் ஏதாவது பக்கவிளைவு வருமா? என்ன செய்வது என்று தெரியவில்லை பதில் சொல்லுங்க மேடம்..

மேலும் சில பதிவுகள்