20 days baby motion problm

en ponnukku 20 days aguthu motion sariya porathu illa 3 days once tha pora.enakku ceserian pannunathunala amma entha oru food kudukavum payappatranga keerai rasam thavira ethum saptrathu illa. entha mathire food eduthukanum soluga frnds.romba kastama irukku

//enakku ceserian pannunathunala amma entha oru food kudukavum payappatranga// உண்மையைச் சொல்லப் போனால்... சிசேரியன் ஒரு அறுவை சிகிச்சை. சாதாரணமாகப் பிரசவித்தவர்கள் போல சிசேரியனுக்கு உட்பட்டவர்களுக்கு, பெண்ணுறுப்புக்குப் பாதிப்பு எதுவும் இராது. எனவே சிறுநீர், மலம் கழிக்கும் போது எரிச்சல், கிருமித் தொற்று என்பதெதுவும் இராது. உணவைக் கட்டுப்படுத்தத் தேவையே இல்லை.

//keerai rasam thavira ethum saptrathu illa.// கர்ர்ர்... அப்பெண்டிசைடிஸ், ஹேணியா ஆப்பரேஷன் போல‌ இதுவும் ஒரு சர்ஜரி. சர்ஜரி செய்றவங்க‌ எல்லோரும் கீரையும் ரசமுமா சாப்பிடுறாங்க‌!! !!

உடலில் எந்தக் காயம் ஆனாலும் உடல் அதைச் சரிசெய்ய‌ புரத‌ உணவு அவசியம். நீங்கள் சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி இருக்கிறீர்கள். அந்தக் காயங்களை உடல் திருத்துவது எப்படி? ஒழுங்காக‌ எல்லாச் சத்துகளும் கிடைப்பது போல‌ நல்ல‌ ஆகாரமாகச் சாப்பிடுங்கள். சாதாரணமாகச் சாப்பிடுவது போல‌ சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவரானால், மீன் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கீரைகளில் வைட்டமின்கள் உண்டுதான். அது மட்டும் போதுமா! ரசத்தில் என்ன‌ சத்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்!! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மல்லி சீரகம்... இவையெல்லாம் காயத்தை ஆற்றும்; மருத்துவ‌ குணங்கள் உள்ளவை எனலாம் நீங்கள். சாப்பிடுங்கள், வேண்டாம் எனவில்லை. ஆனால் தனியே கீரையும் ரசமும் சாப்பிட்டு உடம்பும் தேறி குழந்தைக்கும் பாலூட்டுவது எப்படிச் சாத்தியம்! உங்கள் உடம்பு கெட்டுப் போகும். நோயெதிர்ப்புச் சக்தி குறையும். வீட்டார் வேறு தொற்று நோய்களுக்குக் காவிகளாகச் செயற்பட்டால், நோய்கள் உங்களுக்குச் சுலபமாகத் தொற்றும்.

இன்னொரு விஷயம், இப்போது நீங்கள் எடுக்கும் உணவு உங்களுக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்த‌லாம். உடலில் நீர் அளவு குறையும். நீங்கள் குழந்தைக்கும் பாலூட்டவில்லையா? அதனாலும் உங்களுக்கு நீரிழ‌ப்பு ஏற்படப் போகிறது. நன்றாகத் தண்ணீர் குடிக்கிறீர்கள் இல்லையா? பலர் தண்ணீர் குடிக்க‌ விட‌ மாட்டார்கள். :)

கேட்கத் தோன்றுகிறது, ஒரு தரவுக்காகக் கேட்கிறேன். பதில் சொல்ல‌ வேண்டும் என்று அவசியமில்லை. கேள்வியைக் கவனிக்காதது போல விட்டுவிடலாம். ;) உங்கள் தாயாருக்கு என்ன‌ வயது? வேலை பார்க்கிறார்களா, இல்லத்தரசியா?

‍- இமா க்றிஸ்

மீன் சாபிட்டால் operation pannaஇடம் அரிப்பு எடுக்காதா ?

எடுக்காது. நான் சாப்பிட்டிருக்கிறேன். நான் வேறு வழி இல்லாமல் தினமும் மீன் சாப்பிட்ட‌ காலம் பிரசவத்தைத் தொடர்ந்து வந்த‌ மாதங்களும் சர்ஜரிகளுக்குப் பின்பான‌ காலங்களும் மட்டும்தான். ஹாஸ்பிட்டலில் சாதம் கொடுக்கவில்லை. ஐரோப்பிய‌ உணவு... மாமிசம் வேண்டாம் என்றுவிடுவேன். மதியம் பெரிதாக‌ வட்டமாக‌ ஒரு துண்டு மீன் தினமும் கொடுப்பார்கள். எதுவும் செய்யவில்லை.

எல்லா மீன்களுக்கும் எல்லோருக்கும் அரிக்கும் என்பது இல்லை. மீன் அலர்ஜியாக இருந்தால் குறிப்பிட்ட‌ சில‌ வகை மீன்களுக்கு மட்டும் அரிக்கும். அப்படியானவர்களுக்கு சர்ஜரிக்குப் போகாவிட்டாலும் கூட குறிப்பிட்ட சில வகை மீன்கள் சாப்பிட்டால் ரியாக்ஷன்ஸ் இருக்கும். தோலில் அரிப்பு, வீஸிங், கண் அரிப்பு, உதடு வீங்குவது என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகக் காட்டும்.

தழும்பில் அரிப்பு, காயம் ஆறும் சமயம் எந்தக் காயமானாலும் ஏற்ப‌டுவதுதான்.

அரிப்பு ஏற்படுவதற்கு இன்னொரு காரணம் இன்ஃபெக்க்ஷன். காயத்தைச் சுத்தமாக‌ உலர்வாக‌ வைத்திருக்க‌ வேண்டும். அழுத்தித் துடைக்கக் கூடாது. ஒற்றித் துடைக்க‌ வேண்டும்.

‍- இமா க்றிஸ்

Hai frnz;

Enakku mrg agi 8 month aguthu mrg anathularunthu 1st 3 month periods varla .
Apram 4mnth period's anathu. .athukkapram 1.50 month periods varla. Pregnancy check pannunom negative. ...athukkapram October .November vanthathu..corecta ,12 date. minimum 5 days vanthathu dn stop achu. Ipo last a November anath 12to 17 varaikkum...apram nanga seanthom ..Ipo 50 December 12 periods varla so 43 days poi pregnancy check pannunom negative rslt. Doctor sonnaga 1mnt kalichi check pannuganu sollirukanga ..evlo nal kulla cnfrm nu therium. Knjm sollunga dn epdi food eduthukarathu. Ennapannanum...Knjm sollunga...

என் மகனுக்கு 1 வயது முடிந்து விட்டது ஆனால் இன்னும் நடக்க வில்லை என்ன செய்வது கஷ்டமாக உள்ளது. ஏதாவது வழி சொல்லுங்கள்...

சில குழந்தைகள் நடக்க ஆரம்பிப்பது தாமதமாகும். இது பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. பெரிதாக ஏதாவது பிரச்சினை இருந்தால் இத்தனைக்கும் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும். இது சாதாரண விடயம் என்றுதான் தோன்றுகிறது. திடீரென்று ஒருநாள் நீங்கள் எதிர்பாராத சமயம் நடக்க ஆரம்பித்துவிடுவார் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்