பீன்ஸ் கேரட் பருப்புக் கறி

தேதி: December 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பீன்ஸ் - கால் கிலோ
கேரட் - ஒன்று
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை மலர்ந்த பதத்தில் வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வேக வைத்த பருப்பில் உள்ள தண்ணீரைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துப் பிரட்டவும்.
அதனுடன் வேக வைத்த பீன்ஸ் மற்றும் கேரட்டைச் சேர்த்து, பருப்பு தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
காய்களுடன் உப்பு, காரம் சேர்ந்ததும் வேக வைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் பிரட்டிவிடவும்.
காய்கள் பருப்புடன் சேர்ந்து கெட்டியாகி கூட்டு பதம் வந்ததும் இறக்கவும்.
பக்க உணவாகப் பரிமாற, சுவையான பீன்ஸ் கேரட் பருப்புக் கறி தயார்.

சாம்பாரில் பீன்ஸ் சேர்த்து செய்தால் நிறைய குழந்தைகளும், பெரியவர்களும் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக வெளியிட்ட டீம் க்கு நன்றி...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சூப்பரா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

Be simple be sample

ட்ரை பண்ணி பாருங்க நல்லா இருக்கும்.. சாம்பார் காய் எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்காது..இது பருப்புடன் சேர்ந்து நல்ல சத்து வேஸ்டும் ஆகாது...

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

வித்யாசமா இருக்கு அபி.செய்து பார்த்து சொல்ரேன்.

தேங்க்ஸ்... செய்து பார்த்திட்டு சொல்லுங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

TODAY I HAVE TO DO...

i love my familey