எனக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை பீரியட். இந்த மாதம் 40 ம் நாள் கொஞ்சம் மட்டும் பீரியட்ஸ் வந்தது. 1நாள் கூட பீரியட் வரல. இப்போ நான் கர்ப்பமாக இருக்க வாய்பு இருக்கா. எனக்கு இவ்வாறு வந்தது இல்லை பிலீஸ் உதவுங்கள் எனக்கு குழப்பமாக உள்ளது...
எனக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை பீரியட். இந்த மாதம் 40 ம் நாள் கொஞ்சம் மட்டும் பீரியட்ஸ் வந்தது. 1நாள் கூட பீரியட் வரல. இப்போ நான் கர்ப்பமாக இருக்க வாய்பு இருக்கா. எனக்கு இவ்வாறு வந்தது இல்லை பிலீஸ் உதவுங்கள் எனக்கு குழப்பமாக உள்ளது...
imma sis please help me
enaku kulappamaka ullathu payamaka iruku
Bharathi
நீங்க பிரெக்னன்சி டெஸ்ட் எடுத்து பாருங்க. இல்லையென்றால் டாக்டரிடம் போய் பாருங்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Pregnancy test eduthu
Pregnancy test eduthu parunga...some times pregnant ana spotting sollara bleeding varum...ungalku vanthathu periods illanu nenaikren..so payapatama test pannunga..ella nalla news ah irkum...time thamatha patuthama udane parunga
பாரதி 143
//இப்போ நான் கர்ப்பமாக இருக்க வாய்பு இருக்கா.// இருக்கு. ஆனால் இப்போது நிச்சயமாகச் சொல்ல முடியாது பாரதி. ப்ரெக்னன்சி டெஸ்ட்டில் முடிவாகத் தெரியும் வரை அமைதியாக இருங்கள்..
//எனக்கு இவ்வாறு வந்தது இல்லை// எம் உடல் எப்பொழுதும் ஒரே மாதிரி இயங்குவது இல்லை. //எனக்கு குழப்பமாக உள்ளது.// குழப்பமில்லாமல் இருங்கள். உங்களுக்குக் குழந்தை வேண்டும். அப்படியானால் சுழற்சி வரவில்லையென்றால் ஏன் குழம்ப வேண்டும்! ஸ்பாட்டிங்... மாதவிடாய் என்று எடுக்க முடியாது. நல்ல செய்தியாக இருக்கும் என்று நினைத்து சந்தோஷமாக இருங்கள். சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா; இதைச் சாப்பிடாலாமா, அதைச் சாப்பிடலாமா என்கிற சந்தேகம் எதுவும் இல்லாமல் எப்பொழுதும் போல இருங்கள்.
உடலை இயக்குவது மூளை. உங்கள் மனம் குழப்பமில்லாமல் இருந்தால்தான் உடல் இயக்கங்கள் சரியாக இருக்கும். இதை நினைக்காமல் மனதை வேற விஷயங்களில் திருப்புங்க. விரைவில் எல்லாம் நலமாகும்.
- இமா க்றிஸ்
இமா அக்கா
அக்கா இரண்டு நாட்கள் ப்ளீடிங் ஆகாமல் இன்று மதியம் யூரினில் சிறிது ப்ளீடிங் ஆனது அதுவும் சொட்டிங் மட்டும் இது எதனால்? இன்று மார்பை தொட்டால் லேசாக வலிக்கிறது. வயிறு வலி இல்லை. வயிறு வலி இல்லாமல் நான் பீரியட்ஸ் ஆனது இல்லை. நாளை கிட்டில் பரிசோதிக்கலாமா, முடிவு பாசிட்டாக வருமா , நெகட்டிவ்னா வருத்தமாக இருக்கும். பாசிட்டிவாக வரும் வாய்ப்பு இருக்குமானால் நான் கிட்டில் பார்க்கிறேன் இல்லையெனில் பார்க்காமல் விட்டு விடுகிறேன். வழிகாட்டுங்கள் அக்கா ப்லீஸ். தாய்மையை எதிர்பார்த்து அண்புடன் பாரதி.
பாரதிக்கு
//நெகட்டிவ்னா வருத்தமாக இருக்கும்.// ஆமாம், அவசரப்படாமல் இன்னும் ஒரு வாரம் கழித்துப் பாருங்களேன்!
- இமா க்றிஸ்
இமா அக்கா.....
காலை ஹோம் ப்ரக்னன்சி சோதனை செய்தோம் அக்கா C line Dark brown ஆகவும் L line light brown ஆகவும் தெரிகிறது. நான் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இருக்கா அக்கா. 2 கோடுகளும் டார்க் ஆக இருந்தா தான் பாசிட்டிவா, என் ரிசல்ட் பாசிட்டிவா நெகட்டிவா அக்கா ஆவலுடன் பாரதி....
please answer tholikale
ipdi yarukathu vanthu hospital la poditive aakiruka please yarathu answer pannunkale pls pls pls friends and sisters...
பாரதிக்கு
உண்மையில் எனக்கு இது பற்றிய அறிவு கிடையாது கண்ணா. யாராவது வந்து பதில் சொல்லும் வரை பொறுமையாக இருங்க. கொஞ்சம் நேரம் ஆகலாம். அது வரை அனமைதியாக இருக்கப் பாருங்க.
- இமா க்றிஸ்
வாழ்த்துக்கள் பாரதி
இரண்டு கோடுகள் தெரிந்தாலே நீங்க கர்ப்பமாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இன்னும் ஒருவாரம் கழித்து டெஸ்ட் செய்து பாருங்க இரண்டு கோடுகள் தெளிவாக தெரியும்... வாழ்த்துக்கள் தோழி
Trust in god