குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ்

தேதி: December 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

 

குதிரைவாலி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2 (சிறியது)
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - ஒரு கப்
கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 2


 

குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கி விடவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.
குக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும்.
வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும். தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.
சுவையான குதிரைவாலி தக்காளி தேங்காய்ப்பால் புலாவ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... ஒரு நாள் பண்ணி பார்க்கிறேன்.. குதிரை வாலி அரிசியை பார்த்தது கூட இல்லை...இனி வாங்கிடலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நானும் பர்த்தது கிடையாது.குறிப்பு அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நானும் பார்த்த கிடையாது.அரிசி எவ்வளவு நேரம் ஊர‌ வைக்கனும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& அறுசுவை டீம் மிக்க நன்றி.

Be simple be sample

வரகு அரிசி போலவே இதுவும் சின்னதா இருக்கும்.செய்து பாருங்க.நல்லாருக்கும்.நன்றி.

Be simple be sample

ரொம்ப நாள் ஆச்சு முசி, உங்கள பார்த்து, குறிப்புகள் காணலயே. தான்க்யூ முசி. பார்க்க வரகு அரிசி போலதான் இருக்கும்.

Be simple be sample

10லிரிந்து 15 நிமிஷம் ஊறினா போதும். தாளிக்க ஆரம்பிக்கும்போது ஊற வைங்க. தான்க்யூ.

Be simple be sample