sugar problem

hi friends i am viji. ennoda husbandku thideernu sugar problem vandhuduchu. ippo age 30 thaan aguthu. but sugar before food - 280 and after food - 395 irukku. romba bayanthu poirukkar. please enna food sapital sugar control agum. yaravathu help pannunga please. summa check parthathula therichuthu.

//enna food sapital sugar control agum.// சாப்பிடாவிட்டால் என்று கேட்டிருந்தால் பொருத்தமாக‌ இருந்திருக்கும் விஜி. குறைக்க‌ வேண்டியவை சின்னச் சின்னதாக‌ நிறைய‌ இருக்கும். எடை சரியாக‌ இருக்கிறதா? அதைக் கவனியுங்கள். முக்கியம் செய்ய‌ வேண்டியவை... சாதம் மற்றைய‌ பிரதான‌ உணவாக‌ எடுக்கும் மாப்பொருட் பண்டங்களுக்குப் பொருத்தமான‌ நார்ச் சத்து அதிகம் உள்ள‌ மாற்று உணவுகளைச் சாப்பிடலாம். இருந்தாலும் உள்ளெடுக்கும் அளவைக் கட்டாயம் குறைக்க‌ வேண்டும். சர்க்கரையைத் தவிர்க்கச் சொல்லுங்க‌ள். கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சியைக் கூட்ட‌ வேண்டும்.

உணவு என்றில்லாமல் ஒன்று சாப்பிட்டால் குறையும் என்கிறார்கள். விரும்பினால் ஒன்றிரண்டு நாட்கள் முயற்சித்துப் பாருங்கள். படுக்கைக்கு முன் சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற‌ விட்டு காலை எழுந்ததும் பருகச் சொல்கிறார்கள். முடிந்தால் ஊறிய‌ வெந்தயத்தையும் உட்கொள்ளலாம். (இதில் சகிக்க‌ முடியாத‌ விடயம் சிறுநீரோடு வெளியாகும் வெந்தய‌ வாடை.)

‍- இமா க்றிஸ்

avanga amma health inspector ah irukanga. ethukku eduthalum tablet tablet nu pidivathama irukanga. today check panninapa before - 130 and after - 250 agiduchu. wait panni parthuttu tablet continue pannanlamnu solren purinjikka matranga. enna seirathunu puriala. tablet continue pannina tablet continue agidumnu sila peru solranga. walking and diet food ellam eduthukuranga. konjam wait panni parthutu podalamnu solren kekka matraru. daily morg vendhiyam tharen. please vera ethavathu idea iruntha sollunga mam please.

அன்புள்ள சகோதரி,
சர்க்கரை அதிகமாக இருக்கதென்றல் முதலில் complete medical check up ஒரு முறை செய்யவும், B P எவ்வளவு இருக்கிறதென்று தெரிந்து கொள்ளவும். உடல் எடை எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்ளவும். கண், பல் இதயம், கிட்னி, கால் பாதங்களில் உணர்வின் அளவு இவைகளையும் தெரிந்து கொள்ளவது மிகவும் நல்லது. திரூமதி Emma அவர்கள் கூறியது போன்று வெந்தியம் மிக நல்ல வைத்தியம் என்றாலும் BP அளவு குறைவாக இருக்கும் போது வெந்தியம், (BP) மேலும் குறைய வாய்புள்ளது.
நீங்கள் ஒரு சிறந்த சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவும்.
/(sugar before food - 280 and after food - 395 irukku.
before - 130 and after - 250 agiduchu / என்பதெல்லாம் மிகவும் அதிக அளவுதான்
சக்கரை அளவு மாறுபாடு என்பது ஒரு குறைபாடு மட்டுமே நோய்யல எனற நம்பிக்கை உங்கள் இருவருக்கும் வரவேண்டும்.
S.PALANI

Information is wealth

இந்த தகவல் உங்களுக்கு மிகவும் தேவையானதாக இருக்கும்
https://www.vikatan.com/news/health/83523-health-tips-for-diabetes-patient.html

மேலும் சில பதிவுகள்