ஓவரி கட்டி உதவித்தேவை

என் அம்மாவிற்கு வயது 47.10 வருடத்திற்கு முன் கற்பப்பையில் புண் இருந்ததால் அகற்றிவிட்டனர் இடது பக்க‌ ஓவரியும் நீக்கிவிட்டனர் அதற்கு பின் எந்த‌ தொல்லையும் இல்லை.ஒரு வாரத்திற்கு முன்பு முழு உடல் பரிசோதனை செய்தபோது வலது பக்க‌ ஓவரியில் 2கட்டி இருப்பதாக‌ சொல்லியிருக்கிறார்கள்.கட்டியின் அளவு 7cm and 9cm இருக்கிறதாம் உடனே கட்டியை நீக்கவேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார் இரத்த‌ பரிசோதனை முடிவு வந்ததும் அடுத்து நீக்க‌ சொல்லியிருக்கிறார்.
அது வர‌ இன்னும் ஒரு வாரம் உள்ளது ஆனால் அதுவரை பயமாக‌ உள்ளது.
இந்த‌ கட்டி எதனால் வருகிறது இப்போழுது கட்டியை நீக்கிவிட்டால் மறுபடி வர‌ வாய்ப்பு உள்ளதா?.லேப்ரோஸ்கோபி மூலம் நீக்கலாமா? வலி அதிகம் இருக்குமா? தயவுசெய்து பதில் தாருங்கள் தோழிகளே..

மேலும் சில பதிவுகள்