கடலைப்பருப்பு பணியாரம்

தேதி: December 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.9 (7 votes)

 

அதிகம் புளிப்பில்லாத மாவு - ஒரு கப்
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். அதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
மாவில் ஊற வைத்த கடலை பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு சரிபார்த்து கலக்கி கொள்ளவும்.
பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஒரு டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெய் விட்டு டம்ளரில் இருக்கும் மாவை பணயாரங்களாக குழியில் முக்கால் குழி வரை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.
பாதி வெந்ததும் திருப்பி போட்டு சிறிது சிவக்க வேக விட்டு எடுக்கவும்..
சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார். கார சட்னியுடன் பரிமாறலாம்.

காலையில் மீந்த மாவை மாலை நேர சிற்றுண்டிக்கு இந்த முறையில் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & டீம் க்கு நன்றி.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Paniyara kal illamal saiyya mudiyuma ?

பணியாரக்கல் இல்லாமல் நான் செய்ததில்லை. அப்படி செய்ய முடியாது என்று தான் நினைக்கிறேன்.. வேண்டுமானால் கெட்டி ஊத்தப்பமாக செய்து பாருங்கள். இல்லையென்றால் இந்த லிங்க்கில் இருப்பது போல எண்ணெயில் பொரித்து பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/19217

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி