குழந்தையின் கண் பொங்குகின்றது ப்ளிஸ் ஹெல்ப்

குழந்தைக்கு ஒரு மாதமாக ஒரு கண்ணில் மட்டும் பொங்கிமூடிக்கொள்கிறது.10 நாட்களுக்கு முன்பு கண் ஆஸ்பத்திரியில் காண்பித்தோம்.தலையில் பொடுகு இருப்பதால் அப்படி கண் பொங்குகிறது கண்ணில் விடும் மருந்து ம் ஷாம்பு ம் எழுதி கொடுத்தாங்க.மருந்து விட கத்துகின்றான்.ஷாம்பு நாளைக்கு தான் கிடைக்கும்.

கண் முடிக்கு மேல் கையை வைத்து தேய்த்து விடுகிறான்.சிவந்து விடுகிறது.கொஞ்சம் கவலையாக உள்ளது. ஷாம்பு யூஸ் பண்ண சரியாயிடுமா? வேற என்ன செய்யலாம்? ?? ப்ளிஸ் உதவுங்கள் தோழிகளே. 1வயது குழந்தை.

மருந்து சொல்லத் தெரியவில்லை. நந்தியாவட்டை பூவை நீரில் போட்டு வைத்து ஒற்றி எடுத்தால் வேதனை குறைவாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எத்தனை தூரம் வேலை செய்யும் என்பது தெரியவில்லை.

முயற்சி செய்வதானால் முதலில் பூ, நீர், உங்கள் கைகள் எல்லாம் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கண்ணில் அழுத்த வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி ம்மா.நான் கேட்டுப பார்க்கிறேன் அந்த பூவை..கண்ணைக் கசக்கி லேசா இரத்தம் கண் முடிக்கு மேலிருக்கு.பூழை தள்ளி கண்ணின் மேல் படிந்து வடுகின்றது.துடைக்க விட மாட்டிகிறான் கையால கசக்கி இரத்தம் வருது.கண்ணின் வெளியே தான் இப்படி இருக்கு.

ராமர் கட்டி தடவி விடலாமா??? தோழிகளும் பதில் சொல்லுங்கள் ப்ளிஸ். ..

அன்பு தோழி. தேவி

காய்ந்து இருக்கும் சமயம் சுத்தம் செய்ய முயல வேண்டாம். இளம்சூட்டு நீரில் முகம் கழுவிவிடுங்கள். பீழை மெதுவாகி இருக்கும் சமயம் சுத்தம் செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

ம்ம்ம்...அப்படித்தான் ம்மா செய்கிறேன்...

அன்பு தோழி. தேவி

அன்புள்ள‌ அஸ்வதிக்கு,
நாட்டு மருந்து கடைகளில் நாமக்கட்டி கிடைக்கும்.
திருமாலை வழிபடுபவர்கள் வீட்டில் இது கட்டாயம் இருக்கும். இதை நீர் விட்டு
இழைத்து குழந்தை கண்ணை மூடச்சொல்லிவிட்டு கண்ணைச் சுற்றிலும்
நன்கு தடவி விடவும். கண் பொங்குவது நிற்கும், அரிப்பு நீங்கும், சிவப்பு மாறும்
நாமக்கட்டி கண்ணில் உள்ளே பட்டாலும் ஒன்றும் ஆகாது. குளு குளு என்று தான்
இருக்கும். காலையில் சாதாணமாகக் கழுவினாலே போதுமானது. மிக‌ அருமையான் மருந்து. "திண்ணைத் தூங்கி தாஸனுக்கு கண்ணைச் சுற்றி நாமம்‍‍
என்று ஒரு ப்ழமொழியே நடை முறையிலுள்ளது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நாமக்கட்டி யை தான் ராமர் கட்டி ன்னு கேட்டேன்..வீட்டில் இருக்கும்மா நாமக்கட்டி. .நன்றி ம்மா.. பழமொழியோடு சொல்லிருக்கீங்க.

அன்பு தோழி. தேவி

enaku kuzhanthai piranthu 16days aguthu.. Papaku right kannu pongukirathu. hospitalla pakkathu bedla irunthavanga babykum appadi than irunthuchu.. 3days munnadi sister in low baby piranthu iruku antha papakum appadi than irukkam.. Ethanala ippadi iruku.... Enna panrathu... Eppothaiku Thai papal mattum adikkadi papa eyela viduren.,. Pls help me

Kastathai istamakki kol.

kan pogiradhu na enna mean panringa eye problem ah one eye problem ah ?

கண் பொங்குவது ஐ ப்ராப்ளம் ன்னு ஐ டாக்டர் சொல்லவில்லை. ..தலையில் பத்து(ஐ மின் பொடுகுன்னு நினைக்கிறேன்) இருப்பதால் அப்படியிருக்குன்னு சொன்னாங்க. ..உடம்பு சூட்டு நளா கூட வரும்ன்னு சொல்றாங்க. .

இன்னும் பையனுக்கு சரியாகவில்லை. நாமக்கட்டி போட்டுருக்கேன்.

அன்பு தோழி. தேவி

baby ku body heat a iruntha baby ullankallayum, uchanthalailiyum vilakkenneiya thadavanum.

மேலும் சில பதிவுகள்