ஈஸி உருளை ஃப்ரை

தேதி: January 10, 2016

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (14 votes)

 

உருளைக்கிழங்கு - அரைக் கிலோ
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தயிர் - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி மைக்ரோவேவில் ஹையில் 5 நிமிடம் வைக்கவும். 3 நிமிடத்தில் எடுத்து, கிளறி விட்டு மீண்டும் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உருளைக்கிழங்கை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும்.
அதில் பொடி வகைகளை சேர்த்து பிரட்டி மேலும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.
கடைசியில் தயிர் சேர்த்து கிளறி, தயிர் ஈரப்பதம் போனதும் இறக்கவும்.
சுவையான ஈஸி உருளை ஃப்ரை ரெடி.

தயிர் சேர்க்காமல் செய்தாலும் சுவையாக இருக்கும். சேர்த்து செய்தால் லேசான புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & டீம் க்கு நன்றி..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

இந்தக் குறிப்பு பிடிச்சிருக்கு அபி. ட்ரை பண்றேன்.

‍- இமா க்றிஸ்

நன்றிம்மா.. செய்து பார்த்ததும் சொல்லுங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சகோதரி மைக்ரோ ஓவன் இல்லாமல் சமைப்பது எப்படி என்று கூற முடியுமா?

ஓவனில் வைக்காமல் நேரடியாகவே கடுகு தாளித்து உருளை கிழங்கை போட்டு வேகவிடலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி