தேதி: January 12, 2016
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - 5 வேக வைத்தது
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 4 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய்
தாளிக்க
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை - சிறிதளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை எடுத்து சற்று ஆறவைத்து, நறுக்கின இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த முட்டையை கீறி விட்டு சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து கிளறிவிடவும்.

அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

க்ரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான முட்டை மசாலா தயார்.

Comments
nithyaramesh
அக்கா முட்டை மசாலா சூப்பர் அண்ட் ஈஸி ரெசிபி..:-)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
முட்டைமசாலா ரெசிப்பி ரொம்ப
முட்டைமசாலா ரெசிப்பி ரொம்ப சூப்பர்
முட்டை மசாலா
குறிப்பை வெளியிட்ட அட்மின் & டீம் க்கு என் நன்றிகள்...
முட்டை மசாலா
ரேவதி, கனிமொழி க்கு நன்றி.
நித்யாக்கா
முட்டை ரெசிப்பி ஒன்று தோழி கேட்டாள்.இந்த ரெசிப்பியை அனுப்பினேன்.. செய்திட்டு செம டேஸ்டாக இருந்ததாக சொன்னாள்.. சாரி போட்டோ எடுக்கலையாம் நெக்ஸ்ட் பண்ணும் போது கண்டிப்பா எடுப்பதாக சொன்னாள்... நன்றி சொல்ல சொன்னாள் அக்கா...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
Super
Super
Give respect and take respect
(No subject)