குழந்தைக்கு ஜுஸ்.....

என் குழந்தைக்கு சளி யா இருக்கு இப்போ ஜுஸ் கொடுக்கலாம Friends .........six month,old aaguthu

Cold irukkum podhu ethukunga juice tharinga.???

ஸ்டெப் ஸ்டெப்பாகப் குட்டிக் கணக்கு ஒன்று போட்டுப் பார்க்கலாமா! :-)

ஜூஸ்... ஏதாவது பழத்தைப் பிழிந்து எடுக்கும் சாறு - பழச்சாறுதான் ஆங்கிலத்தில் ஜூஸ்!!
பெரும்பாலான பழங்களில் வைட்டமின் சீ நிறைய இருக்கிறது.
வைட்டமின் சீ நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தடிமல், சளிக்கு வைட்டமின் சீ நல்லது.

அப்படியானால்... ஜூஸ் மட்டும் எப்படிக் கெடுதல் ஆகும்!!

ஃப்ரிஜ்ஜில் வைக்காமல் ஐஸ் போடாமல் கொடுப்பதில் என்ன தப்பு!! நான் அதையும் செய்திருக்கிறேன். ஒன்றும் ஆனதில்லை.

எதையும் வெறுமனே எல்லோரும் சொல்வதால் ஆகும், ஆகாது என்று ஏற்றுக் கொள்ளாமல் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

‍- இமா க்றிஸ்

இமா மேம் எனக்கு இன்னோறு சந்தேகம் கேழ்வரகு கூழ்.சளியை உண்டாக்குமா? என் குழந்தைக்கு சளியா இருக்கு நான் அவனுக்கு இன்று கேழ்வரகு கூழ் கொடுத்தேன்.சளியை மேலும் உண்டாக்கி விடுமொ என்று பயமாக உள்ளது. Pls imma mam clear my doubt ........

//கேழ்வரகு கூழ்.சளியை உண்டாக்குமா?// நிச்சயம் இல்லை.

சளியை உண்டாக்குபவை... 1. காற்றிலுள்ள கிருமிகள் - உடல் எதிர்ப்புச் சக்தி குறையும் போது இவை மும்முரமாக தங்கள் வேலையை ஆரம்பிக்கும். 2. காற்றிலுள்ள தூசுப் பொருட்கள் - உள்ளே போன தூசு உறுத்தாமல் சுற்றி ஒரு படலத்தை உடல் தானாக ஒரு உருவாக்கிக் கொள்ளும். இது.. சிப்பியில் முத்து உருவாவது போல. அது நமக்கு.. தொந்தரவான சளி.

உணவுகளால் ஒவ்வாமை வருவதுண்டு. தும்மல், இருமல் இன்னும் சில உபத்திரவங்கள் இருக்கும். தனியே சளி மட்டும் வருவது என்பது உணவால் இல்லை கண்ணா. ஏற்கனவே சளி இருக்கிறது என்றால், தேவையானால் அதற்கான சிகிச்சையைப் பாருங்கள். கேள்வரகுக் கூழ் சாப்பிட்டு சளி கூடும் என்பது இல்லை.

‍- இமா க்றிஸ்

Thanku imma mam udane reply pannathukku.......

14 மாத குழந்தைக்கு பீட்ருட் துருவி அல்வா போல் செய்தால் சத்து கிடைக்குமா..அல்லது துண்டாக அவித்து paste போல செய்தால் சத்து கிடைக்குமா..எதில் சத்துக்கள் அழியும்..குழந்தைக்கு எது சத்து என்று கூறவும்..

உதவி

இரண்டிலும் சத்து இழப்பு இருக்கும் என்றாலும் இரண்டாவது பரவாயில்லை என்று தோன்றுகிறது. பீட்ரூட்... கிழங்குக்குக் கிழங்கு ஒவ்வொரு மாதிரி. சிலசமயம் ஒருவிதமான புழுதி / மண் வாசனை வரும். நீங்கள் கஷ்டப்பட்டுச் சமைத்த பின் குழந்தை சாப்பிடாவிட்டால் வற்புறுத்த வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா...பொரிகடலை குழந்தைக்கு தரலாம் என்றால் பொரிகடலை வறுத்து திரித்து பாலில் ஒரு ஸ்பூன் கலந்து தரலாமா சரியா,,,1 1/4 வயது குழந்தை உணவுகள் எதில் பார்க்கவேண்டும்.. மற்றும் குழந்தைக்கு வேறு என்ன தரலாம்

//பொரிகடலை// உண்மையில்... :-) இது என்னவென்றே எனக்குத் தெரியாது குமாரி. ஊகத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. //பொரிகடலை வறுத்து திரித்து பாலில் ஒரு ஸ்பூன் கலந்து தரலாமா// நானானால் எதையும் பயமில்லாமல் கொடுப்பேன். //சரியா,,,/// சரி தப்பு எல்லாம் கிடையாது. செரிக்கிறதா இல்லையா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். இதுவும் குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். என் எண்ணங்கள் பெரும்பாலான அறுசுவைப் பெண்களுடன் ஒத்துப் போவது இல்லை. :-) மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் பதில்கள்தான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். //1 1/4 வயது குழந்தை உணவுகள் எதில் பார்க்கவேண்டும்.// மேலே கூகுள் கஸ்டம் சர்ச் இருக்கிறது. அங்கே தட்டித் தேடினால் கிடைக்கும். //மற்றும் குழந்தைக்கு வேறு என்ன தரலாம்// வேண்டாம், மற்றவர்கள் வந்து பதில் சொல்லும் வரை பொறுத்திருங்கள். :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்