தேதி: February 20, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சைபயறு - ஒரு கப்
முருங்கைக்காய் - 4
பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
சோம்பு பொடி - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 1 1/2
பசு நெய் - 25 கிராம்
தேங்காய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
முதலில் பயரை லேசாக வறுத்து திருவையில் உடைத்து தோல் நீக்கி கொள்ளவும். இல்லையெனில் தோல் நீக்கிய பயறை லேசாக வறுத்துக்கொள்ளவும்.
பின்பு கழுவி குக்கரில் போட்டு அதில் ஒரு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி போட்டு 4 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
முருங்கைக்காயை விரல் நீளத்திற்கு நறுக்கி இரண்டாக நறுக்கி கொள்ளவும், பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
மேலும் வெந்த பருப்பில் காய்களை போடவும். அதில் மஞ்சள்பொடி, சீரகப்பொடி, சோம்பு பொடி, உப்பு ஆகியவற்றை போடவும்.
காய் நன்கு வேகவிடவும். பின்பு தேங்காயை அரைத்து குழம்பில் சேர்க்கவும், சோம்பை நசுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமானதும் அதில் சோம்பைப் போட்டு வதக்கி அதில் மிளகாய்பொடி சேர்க்கவும்.
பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி குழம்பில் கொட்டி கிளறி இறக்கவும்.
Comments
ரசியா
பச்சைபயிர் குழம்பு சுவை மிகவும் சூப்பர். நாளை காலை இட்லிக்கு செய்து வைத்தேன் . ரொம்ப ஹெல்த்தியா குழம்பு.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
தனிஷா
இந்த குழம்பு எங்கள் வீட்டில் செய்யும் போது ஒரு கப் சோறு அதிகம் ஆக்குவோம் எல்லோறுக்கும் விருப்பமான கறி.இதர்க்கு இறால் வருவல்,கருவாடு வருவல்,கனவாய் பிரட்டல்,உருளை பொறியல்,எண்ணை கத்திரிக்காய்,வெண்டிக்காய் பச்சடி இவை யாவும் பொருத்தமாய் இருக்கும்.மேலும் பின்னூட்டதிர்க்கு ரொம்ப நன்றி தனிஷா!
ரஸியா
ரஸியா
உங்கள் பச்சை பயறு குழம்பு முருங்கைக்காய் சேர்த்து செய்தது சுவையாக இருந்தது.. நன்றி..
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா