ஸ்டஃப்டு மசாலா இட்லி

தேதி: January 23, 2016

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

இட்லி மாவு - ஒரு பெரிய கப் அளவு
பட்டாணி - 1/2 கப்
உருளை கிழங்கு - 2 (பெரியது)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையானப் பொருட்களை எடுத்து கொள்ளவும். பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும். உருளைக் கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மசித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும்.
கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும்.
இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா ஸ்டஃப்டு இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

எவ்வளவு தண்ணீர் சேர்த்தாலும் மசாலா தண்ணீரை உறிஞ்சி கெட்டியாக்கி விடும். தளர்வாக இருந்தாலும் மசாலா மாவுடன் கலந்து இட்லி முழுக்க மசாலாவாகிவிடும்.

இட்லி வெந்தது பார்க்க சிலர் துளை போட்டு பார்ப்பார்கள். இதில் துளை போட முடியாது. நாம் தான் நேரம் பார்த்து எடுக்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அபி மேடம் ஸ்டஃப்டு மசாலா இட்லி சூப்பரா இருக்கு..

இதிலே கேரட் , பீன்ஸ் கூட‌ சேர்த்து செய்வாங்க‌ அதும் நல்ல‌ இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க‌.

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

என் குறிப்பை வெளியிட்ட அண்ணா & டீம் க்கு நன்றி..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றிங்க.

எங்கள் வீட்டில் பீன்ஸ், கேரட், பொரியல், கறியாக தான் பிடிக்குது.. இதில், சாம்பாரில் எல்லாம் சேர்த்தால் நான் மட்டும் தான் சாப்பிடணும்.. ஒரு நாள் எனக்கு மட்டும் செய்து பார்க்கணும்....

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை இது போன்று நானும் சமையல் வகைகளை அளிக்க உள்ளேன். keep support me

https://play.google.com/store/apps/dev?id=4702890658323381984