குழந்தைக்கு உதட்டில் வெடிப்பு

நாங்கள் அபுதாபி ல இருக்கோம்.இப்போ இங்க குளிர் அடிக்குது. என் பெண்ணுக்கு இப்பொழுது 8 மாதம் ஆகிறது. அவளுக்கு உதடுகள் வெடித்து இருக்கு.அதற்கு என்ன பன்ன என்று தெரியாமல் இருக்கும் எனக்கு யாராவது என்ன பன்ன வேண்டும் என்று சொல்லூங்கள். உதவுங்கள் தோழிக்கு.

பட்டர் / தேங்காயெண்ணெய் தடவலாம்.

நல்லதாக ஒரு லிப் பாம் ஸ்டிக் வாங்கிப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். பயணப்படும் போதும் இடையில் ஓரிரு முறை தடவலாம்.

எனக்கு குளிருக்கு சில சமயம் மூக்குப் பக்கமும் வெடிக்கும். அதற்கும் லிப் பாம் வேலை செய்திருக்கிறது.

லிப் பாம் ஸ்டிக் - ஒரே குடும்பமானாலும் ஒருவர் பயன்படுத்தியதை இன்னொருவருக்குப் பயன்படுத்த வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

தேங்காய் எண்ணெய் பயன் படுத்தி பார்க்கேன். பதில் சோன்னதுகு ரொம்ப நன்றி மா

மேலும் சில பதிவுகள்