இரண்டு முறை (Cervical Cerclage ) தோல்வி / குழந்தை இழப்பு

நிரந்த தாய்மை தீர்வை எதிர்பார்த்து...!

எனக்கு இரு முறை குழந்தை இறந்து பிறந்தது முதல் (Feb / 2015) முறை 21 வது வாரம் முதல் நாள் வலி ஏற்பட்டது மருத்துவரிடம் சென்றதற்கு குழந்தை ஏற்கனவே அடிவயிற்றில் இறங்கிவிட்டது அபார்ட் ஆய்டும் என்றார்கள். அதேப்போல் அன்றே குழந்தை பிறந்து இறந்தது.

இந்த முறை மிகவும் கவனமாக மருத்துவரின் ஆலோசனை படி மூன்றாம் மாதத்திலே கற்பபை வாயை தைத்துவிட்டர்கள் (Cervical Cerclage). எல்லாம் சரியாக சென்றது Feb / 04 / 2016 அன்று வரை. அன்று அதே 21 வது வாரம் காலை திடிரென வலி ஏற்பட நம்பிக்கையுடன் மருத்துவரிடம் சென்றோம். ஆனால் மருத்துவர் குழந்தை தையலை பிய்த்துகொண்டு வெளியேற பார்க்கிறது , தையலை பிரிக்கவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் தையலை பிரித்தார்கள் , சிறிது நேரத்தில் குழந்தையும் பிறந்து இறந்தது.

முதல் பிரசவம் வெளிநாட்டில் இரண்டாவது கும்பகோணத்தில். இந்த முறை மருத்துவர் 20 வாரத்திற்கு மேல் குழந்தை வளர்ச்சி அதிகரிக்கும் அந்த அளவுக்கு கர்பபை விரிவு கொடுக்கமாட்டுகிறது எனவே குழந்தை பலவீனமான பகுதி வழியாக வெளியேறுகிறது என என்ன என்னவோ சொல்கிறார்கள்.

தயவு செய்து இது போன்ற பிரட்சனை யாருக்கேனும் ஏற்பட்டதாகவும் / அதில் தீர்வு கண்டதாகவும் தெரிந்தால் தயவு செய்து தெரிய படுத்தவும்.
அல்லது நல்ல மருத்துவர் தெரிந்தாலும் ஊர் / மருத்துவர் பெயர் தெரிய படுத்தவும்.

இன்னொரு இழப்பை எங்களால் தாங்கமுடியாது எனவே தகுத்த ஆலோசனை வேண்டி...!

Cervical Cerclage என்று இங்குள்ள சேர்ச் பாக்ஸ் ல் தேடவும் . ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விதான் .

நன்றி @Surejini ..! தோழிகள் ஆறுதல் பதிலை படித்ததும் சிறிது நம்பிக்கை பிறக்கிறது இன்னும் மீலாத பயத்துடன்.

"Transabdominal Cervical Cerclage " செய்து வெற்றி பெற்றவர்கள் அல்லது அதை பற்றி கேள்விபட்டவர்கள் பதில் கூறினால் இன்னும் நன்மை பிறக்கும். இன்னொரு இழப்பை உடல் தாங்காது என்பதை விட மனது தாங்கும் பக்குவமில்லை. அதனால் இதில் அனுபவமுள்ள மருத்துவமனை / மருத்துவர் பற்றிய விவரங்கள் தெரிந்தாலும் தெரிவியுங்கள் தோழிகளே.

cooking

என் இரண்டு குழநதைகளுக்கும் "babycenter.com" பதிவு செய்திருந்தேன் . அதன் அப்டேட் தினமும் என்னை வேதனைக்குள்ளக்குகிறது. அப்டேட் வராமல் எப்படி தடுப்பது ? தெரிந்தவர்கள் சொல்லவும் .

cooking

Thozhi nanum ungainly pol than sirantha Maruthuvarai thedi kondirkiren... Thambarathil Shanthi Siva Kumar en thozhiku success agi ullathu.. Ennal sella mudyavillai. Engu sendralum visarithu vitu sellungal. Nala the nadakm ena nambubom

GOD IS LOVE

மெயில் இன்பொக்ஸ் ஐ ஒபென் பண்ணி பேபி செண்டர் மெயில் ஐ செலக்ட் பண்ணுங்கோ. அப்பறம் மேல றைட் சைட்ல உள்ள அறோவ் ஐ கிளிக் பண்ணினால் அனுப்பினவங்களை புளொக் பண்ணும் ஆப்ஷன் வரும் அதை கிளிக் பண்ணுங்கோ தொடந்து வராது.

அல்லது மேல குட்டி பாக்ஸ் மாதிரி இருக்கிறதை கிளிக் பண்ணினால் ரிப்போட் ஸ்பாம் ந்னு வரும் அதை கிளி பண்ணினாலும் தொடந்து வராது

@surejini

நன்றி தோழி . செய்துவிட்டேன். மருத்துவமனை பற்றிய தகவல் யாரேனும் கொடுத்தால் விசாரிக்க எதுவாக இருக்கும்.

cooking

@ JAYA GOWRI

நன்றி . அவரை பற்றி சென்னையில் உள்ளவர்களிடம் விசாரிக்கிறேன். இணையத்தில் கூட அவரை பற்றி சில நேர் / எதிர் கருத்துக்களை பார்க்க நேரத்து.

cooking

Naanum nerya doctors pathudaen. Pathi per gud comments thanthurjanga. Pathi part avanga anupatha solli Irukanga . Enakum nerya anupavangal nadanthuruku adhanala next month doctor ta polamunu iruken... Sila Maruthuva manaiyum select panirken. Visarichudu than poganum. Arc fertility centre Perambur and surya fertility centre and doctor Geetha Hari Priya . Yaradu orudavangalda kamiklanu idea. Ungalukum yaradu terinja suggest panunga.. Pls

GOD IS LOVE

Hi soffi, i can understand your feelings. Dont worry , enala ungaluku allosanai kodukka mudium... Naanum ithey cervical cerclage la failure aagi, adutha kolanthai ithey pol aaga kudathu nu vendi kastapattu sucess ah kolanthai pettru konden..

Ithey arusuvai il ithey kelvi nan ketten before 4years , thedi paarkavum ....

Nenga nambikaiyoda try panunga.. Fellow this.. 1st nenga 3rd month la cerclage panathum... Full bed rest la irukanum... Baby porakum varai.... Its not easy but if you want to have a baby... Do it.

Outing shopping working walking cooking alllll ethuvume panakudathu... ONLY BED REST ..... Eat gud food.. Tv paarunga books padinga music kelunga friends invite pani pesuga ipadi panunga.. Uthaviku aal vaika mudinja vaichukunga (enaku,ellamey en kannavar than paathukitaru)

8month la cerclage eduthuruvanga ... Athuku apram epa venalum baby porakalam... But enku correct term la than poranthuchu.... Nan 35 weeks lela than i started to walk ... Konjam konjma nadaka arambichen..

Ungaluku any doubt iruntha kelunga ... Mukiyama mana thairyam venum.. Confident... And enala mudium nu nenaichukonga sister tc bestnof luck

@ Preety :

உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி தோழி..!

எனது சந்தேகம் இரண்டாவது முறை மிகவும் நான் மிகவும் கவனாமாக இருந்தேன். அத்தியாவிசிய தேவைகள் தவிர்த்து மற்ற நேரங்களில் படுத்தே இருந்தேன். அதனால் தான் தற்போது மிகவும் பயமாக இருக்கிறது மூன்றாவது முறை முயற்சிக்கலாம என.

இரண்டாவது முறை டாக்டர் சொன்னது - 21 வது வாரத்திலிருந்து "கற்பபை விரிய" மாட்டுது எனவே குழந்தைதானாக வெளியேறுகிறது என சொன்னார் . இது சாத்தியமா..? செயற்கையாக கர்ப்பை விரிய மருத்துவம் இல்லையா..? ஐந்து மாதம் (குழந்தை வெளிஏறிய) முதல் நாள் வரை எல்லாம் நலமாக இருக்கிறது என இரண்டு முறையும் சொன்னார்கள் அந்த நாள் திடிரென ரத்தபோக்கு பிறகு குழந்தை வெளியேறுகிறது.

தோழி சில சந்தேகம்.

உங்களுக்கு குழந்தை வெளியேறிய வாரம் என்ன..? வெளியேறிய காரணம் என்ன சொன்னார்கள்...? கர்ப்பை சம்மந்தமாக (எனக்கு சொன்னது போல் ) ஏதாவது சொன்னார்களா..?
உங்கள் மருத்துவமனை / மருத்துவர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தோழி.

cooking

மேலும் சில பதிவுகள்