ப்லீஸ் உதவுங்கள் ப்ரண்ட்ஸ்....

என் குழந்தைக்கு ஏழு மாதம் நடக்குது அவனுக்கு எப்போது நெய் லாம் கொடுக்கனும் அப்பறம் முட்டை எப்பொழுது கொடுக்கனும் பழங்கள் கொடுக்கலாமா என்ன பழம் கொடுக்கலாம் சொல்லுங்கள் தோழிகளே கேள்வி அதிகமா கேட்டு இருந்தால் Sorry.friends pls help me very argent .......

hai asma babyku ghee kodunga 2 or 3 drops kodunga, egg ippothaikku vandam. 10 month la kodunga, apply, nenthirampalam iddly paanaila vega vetchi kodunga.

Hi haseen thanks pa reply pannathukku

Hai asma epadi irukinga kutti thambi epdi irukkanga? babyku new food oththukudhuna vera vera food koduthu palakkapaduthunga. paruppu satham ghee kalanthu kodunga idly, carrot beans greens soop ellam kodunga.

7, 8 மாதங்கள்:
ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சதம், பால் சாதம் ஆப்பிள், வேகவைத்து மசிக்கப்பட்ட காரட், உருளை கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து, உப்பு பிஸ்கட் ஊற
வைத்து கொடுங்க. வெறும் பருப்பு சாதமா குடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுங்கள். பருப்புடன் , காரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுங்கள். பசும்பால் அறிமுகபடுத்துங்கள். 9. ,10 மாதம்:
இப்போது, இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை, போன்றவைகளை தரலாம்.
11, 12 மாதங்கள் :
NAம் வீட்டு நார்மல் சாப்பாட்டு குழந்தைக்கு பழக்கபடுத்துங்கள்.

எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்காதீங்க. அப்பறம் சாப்படவே பழகாது. குறைவாக இருந்தாலும் பார்க்கும் போதே சாப்பிட துண்டும் வகையிலும், சத்துள்ள தாகவும் கொடுங்கள். முக்கியமா குழந்தைகள் சாப்பிட ஒரே தட்டு, டம்ளர் வைத்து கொள்ளுங்கள். அதை அடிக்கடி சுட்டு தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். காரம், புளி போன்றவைகளை கொஞ்சம் குறைத்து கொடுங்கள். குழந்தை அதிகம் சாப்பிட வில்லை என்று கவலை பட்டு ஒன்றும் போவதில்லை. உணவு வகைகளை மாற்றி, அடிக்கடி கொடுங்கள்.

உணவை கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். உதாரணமாக் இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் அதற்கு ஜீரணம் ஆகாது, பதிலாக இந்த அட்டவணையை கடைபிடித்து பாருங்கள்.
7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தால்:-எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்,
8 மணி - குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்க
குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.
8.30 - காலை உணவு - திட உணவாக இருக்கட்டும்
10.30 - தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம்.
12 - திட உணவு
4 மணிவரை எதுவும் தேவை இல்லை. அப்பறம் பால் கொடுங்கள், கூட இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு ரொட்டி துண்டு.
7.30 மணிக்கு முழு திட உணவு கொட்டுங்கள்.
9 மணி மீண்டும் பால். இதற்க்கு இடையில் தாய்ப்பால், கணக்கே இல்லை.

ஒவ்வாமை: குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

Romba thanks friend neenga sonna ellam use fulla irukku pa thanks

மேலும் சில பதிவுகள்