கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்

எனக்கு இரண்டு பையன்கள். பெரியவனுக்கு 4வயது, சின்னவனுக்கு 1வயதாகின்றது.இரண்டு பேருமே படுச்சுட்டி நானே தான் இருவரையும் கவனிக்க வேண்டும். பெரியவன் ஸ்கூல் போகின்றான்.இரண்டு பேருக்கும் இரட்டை சுழி.சின்னவன் நடப்பதல்ல ஓடுகிறான் அதாவது ஓட்டம் பிடிக்கிறான்.

பசங்களின் சுட்டியால் உடனே டென்ஷன் ஆகிவிடுகிறேன்.அடிக்காமல் இருந்த(பெரியவன்)பிள்ளையை இப்பொழுது அடிக்கிறேன்...சின்னவனும் கத்துகிறான்.

சமையலறைக்கு ள் நுழைந்த காலை பிடித்துக் கொண்டே இருப்பான் அப்படி வைத்துக் கொண்டே சமைக்கிறேன்.வாக்கரில் உட்கார வைத்தால் கத்திவிடுகிறான்.பெரிய வாக்கர் தான் அதிலிருந்து விழுந்தான்.பெரியவன் மற்ற சேட்டைகளை செய்கிறான்..எதாவது அடிபட்டு விடுமோன்னு கோபப்படுகிறேன்.

நானே தான் எல்லா வேலைகளும்.நான் ரொம்ப அமைதியானவாள்.பொறுமையாகத் தான் இருப்பேன். நான் எப்படி கோபத்தை கட்டுப்படுத்துவது?

//இரண்டு பேருக்கும் இரட்டை சுழி.// இதற்கும் இந்த இழைக்கும் என்ன சம்பந்தம்!! ;) அவங்களுக்கு இரட்டைச் சுழியானால் உங்களுக்கு ஏன் கோபம் வரணும்!1

ஏதாவது ஒரு காரணம் சொல்லப் போறீங்க. சில விஷயங்களை நாங்கள் சொல்லிச் சொல்லியேதான் இல்லாததை உருவாக்கி வைக்கிறோம். மனசு நம்ப ஆரம்பிக்க... எம் நடவடிக்கைகளுக்கு அதைக் காரணமாகச் சொல்லி வைக்கிறோம். உண்மையில்... இது காரணம் அல்ல, எம் மனது சொல்லும் சாக்கு.

//நான் எப்படி கோபத்தை கட்டுப்படுத்துவது?// முதலில்... உங்கள் குழந்தைகள் அவர்கள்; குழந்தைகள் துருதுருதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால்தான் யோசிக்க வேண்டும்.

இரண்டாவது... //நானே தான் எல்லா வேலைகளும்.// ம்ஹும்! இந்த எண்ணத்தையும் மாற்ற வேண்டும். நீங்கள் மட்டும்தான் இப்படி வாழ்கிறீர்களா? இங்கு பலர் இருக்கிறார்கள், 2 குழந்தைகளோடு தம் வேலைகள் எல்லாம் தாமே பார்த்து அதற்கு மேலும் பார்ப்பவர்கள். பிழையான விதத்தில் ஒப்பிடுகிறீர்கள். அதை விட்டு, மற்றவர்களால் முடிந்தால் நாம் அதைவிட அதிகம் சாதிப்போம் என்று உங்கள் மனதுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதும் பிரதானமானதும்... ப்ளானிங். இது சரியாக இருந்தால் எல்லா வேலைகளும் சீராகப் போகும். உங்களுக்குக் கோபம் வரவே வராது. குழந்தைகளோடு ரசனையாகப் பொழுது போகும். 4 வயதுக் குழந்தை நிறைய வேலைகளிம் உதவும். பழக்குங்க. அவங்களும் ரசிப்பாங்க. பெருமையாக உங்களுக்கு உதவியா இருப்பாங்க.

‍- இமா க்றிஸ்

தங்கள் பதிலுக்கு நன்றிம்மா.இரட்டை சுழியை நான் பொருட்படுத்துவது இல்லைம்மா.எல்லாரும் தான் சேட்டை பண்றாங்க.

அருமையான படம் "பசங்க" பார்த்து நிறைய மாறிவிட்டேன்.நான் இருக்கும் வீட்டில் அபார்ட்மென்ட் ல எல்லாருக்கும் இரண்டு பிள்ளைகள் தான் சிலர் அமைதியாகவும் சிலர் துருதுரு.இரண்டு பேருமே துருதுருன்னு தான் இருக்காங்க.தையல் & ஆங்கிலம் கற்றுக் கொண்டு இருக்கிறேன்...ம்மா.நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன் ம்மா.சாரிம்மா நான் யாரையும் ஒப்பிடலை.கணவரின் வேலையால் நானே தான் பார்க்கிறேன் ன்னு சொன்னேன்

ஹெல்ப் ளாம் பண்றான்ம்மா..நன்றி ம்மா

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்