ellarum pathil koorunkal pls

தோழிகளே எல்லாரும் பதில் சொல்லுங்க.எனக்கு சமிப காலமாக பயம் என்ற வியாதி ஒட்டிகொண்டது ஏனென்றே புரியவில்லை. யாராவது அதட்டி பேசினாலோ ,சண்டை நடக்கும் இடம் என்றாலோ ,தன்னை குறை சொன்னாலோ ஓடி ஒளிந்து கொள்ளலாம் என்று தோனுகிறது. வாய் மட்டுமே நல்லா பேசுகிறது மனமும் உள்ளமமும் இனம் புரியாத பயம் தொடை நடுந்குகிறது. நேற்று ரேஷன் கடையில் ஒரு சண்டை.அதை நினைத்து இரவு முழுதும் தூங்கவில்லை. நானும் பாரதி கண்ட புதுமை பெண் போல தைரியம் வர வைத்தாலும் உடம்பு காட்டி கொடுகிறது நடுக்கம் தொண்டையில் அடைப்பு. நியமான கருத்துக்களை கூட சொல்ல முடியவில்லை. நேராக நின்று 10 வயது பெண்ணிடம் கூட தவறை சுட்டி காட்ட முடியவில்லை அழுகை வந்து விடுகிறது தைரியம் போதவில்லை. psychiatrist பார்க்கலாமா வேற எதுனா இருக்குமா.... என்னை பார்த்தால் பயந்த பெண் என்று கூரமாட்டார்கள். ஆயினும் பயந்தே எல்லாருக்கும் பயபடுகிறேன். கோவம் வந்தால் எதிர்த்து தன்னால் பேச முடியவில்லையே என்று இயலாமைய நினைத்து அழுதுகொண்டே இருக்கிறேன். இதற்க்கு என்ன செய்வது.

எந்த சம்பவம் உங்களை பெரிதும் பாதித்தது? எப்பத்திலிருந்து இப்படி பயம் தோழி

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக‌ ஆகின்றாய். ( சுவாமி விவேகான‌ந்தர் )

Reiki Guna ( Reiki Distance Group Healer )

சம்பவம் என்று ஏதுமில்லை தோழி...என் அப்பாவும் அண்ணனும் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுகொல்வர்கள். அதை பார்த்து பார்த்து பயம் தொற்றி கொண்டது. கல்யாணம் ஆகும்வரை ஒன்றும் தெரியவில்லை இப்போது நிறைய பொறுப்புகள் வந்து விட்டது இப்போதே உணருகிறேன் தேவை இல்லாமல் பயப்படுகிறேன் என்றே உணருகிறேன்.

இது உங்கள் மனதில் கற்பனைகளால் பதிவு செய்து கொண்ட பயமாக கூட இருக்கலாம்.உண்மையாக இப்படி பயம் ஏற்படுவதானால் காரணம் இருக்க வேண்டும்.

சோ இதுக்கு தீர்வு எனக்கு பயம் வருகிறது பயம் வருகிறது தொடை நடுங்குகிறது என்று மனதிற்குள்ளும் வெளியிலும் சொல்வதை நிறுத்தி வேறு நல்ல பொழுது போக்குகளில் மனதை திசை திருப்புங்கள்.

ஒருவர் எவ்வளவு வேலைகளில் பிஸியாக இருந்தாலும் எண்ண ஓட்டத்தையும் மன அமைதியையும் பொழுது போக்குகள் தான் தீர்மானிக்கிறது.

பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் பிஸியாக இருப்பதும் தவறு.
சிந்தனைகள் இறுக்கம் பெறும்.

தொலைக்காட்சி தொடர்களில் மூழ்குதல் ,பிறர் குடும்ப கதைகளை கேட்டல் ,மனித குணங்களை ஆராய்தல் இவை மன உணர்வுகளுக்கு தீங்கிழைக்கும் பொழுது போக்குகள்.

அப்படி ஏதாவது தினசரி பழக்க வழக்கங்கள் இருந்தால் மாற்றம் செய்து பார்க்கவும்

அப்பா,அண்ணன் சண்டை போட்டுக் கொள்வது எல்லோர் வீட்டிலும் உள்ளது தான். இப்போது உங்களுக்கு நிறைய பொறுப்பு வந்து விட்டது அதனால்தான் எல்லாவற்றையும் பார்த்து யோசித்து செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியாக செய்யனும் அதனால் கூட உங்கள் மனதில் பயம் வந்திருக்கலாம் தோழி. அதனால் எதற்கும் பயம் வேண்டாம் எல்லாம் நல்லதாகவே நடக்கும் . எதாவது தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் தோழி. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

சாராவின் கேள்விக்கு அழகாகப் பதில் சொல்லியிருக்கீங்க.
ஆனால்... அந்தக் கடைசிக் கேள்வி எதற்கு!அது தெரியாமல் நீங்கள் பதில் சொல்லலாம் இல்லையா!

‍- இமா க்றிஸ்

nisha surejini imma amma பதில் அளித்தமைக்கு ரொம்ப நன்றி...ஆமாம் surejini சொல்லுவது போல அடிக்கடி manathil சொல்லிகொள்கிறேன். அது தான் தானாகவே வந்து விடுகிறது.அதான் புரியவில்லை. அதுக்குதான் psychiatrist பார்க்கலாமா என்று தோனுகிறது இப்போதைக்கு எனக்கு ஒரு ஆள் தேவை என்றே கருதுகிறேன் தோழிகளே. கோவம் வந்தால் அழுகிறேன் தொண்டையெல்லாம் அடைகிறது. நிங்கள் கேட்கலாம் ஏன் கோவ படுகிறீர்கள் என்று ஆனால் சொரணை இல்லாமல் இருப்பது என்பது வேறு அல்லவே. கோவ படும் விஷயத்திற்கு கோவம் வந்து தான் தீர வேண்டும் அந்த நெலைம்யில் அழுதுகொண்டே வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறேன். அதற்கு மற்றவர்கள் உண்ணும் 4 வார்த்தைகள் கூடியே சொல்கிறார்கள். இதனால் மன அழுத்தமாக உள்ளது. என்னுடைய வீக்னஸ் மற்றவர்களுக்கு தெரிந்து விட koodatheஎன்று கொவபடாமல் இருக்க வேண்டியதாக உள்ளது. இதனால் என் மகளே (3 vayathu aakirathy)என்னை மதிக்க மாடலோ என்று தோனுகிறது. மனதில் பட்டதெல்லாம் சொல்கிறேன். அதனால் இதுக்கெல்லாம் புலம்பல ,என்று நேனைகாதீர் தோழிகளே..இது சிறிய பிரச்சனையாக எனக்கு தெரியவில்லை. வீட்டில் செல்லமாக வளந்துவிட்டு மாமியார் வீடிற்கு வந்ததும் சிறிய தவறு செய்தாலும் சுட்டிகாடுகிரர்கள். சரியாக செய்யவும் தெரிய மாட்டேன்குது. இதனால் நம்மளால செய்ய முடியவில்லையே என்று கலங்குகிறேன். ஆக மொத்தத்தில் மனம் வேதனையாக உள்ளது. தைரியமாக பேச ஆரம்பித்து விட்டால் நான் நன்றாக ஆகிவிடுவேன் என்று தோனுகிறது. அதனால் எனக்கு எவ்வாறு அப்படி இருப்பது என்று வழி கூறுங்கள். இதனால் கராத்தே class போக kooda ரெடியா இருக்கேன். "தொலைக்காட்சி தொடர்களில் மூழ்குதல் ,பிறர் குடும்ப கதைகளை கேட்டல் ,மனித குணங்களை ஆராய்தல் ..unmaithaan ..."அப்பா,அண்ணன் சண்டை போட்டுக் கொள்வது எல்லோர் வீட்டிலும் உள்ளது தான்" aam undu avarkal sandaiyiduvathil siruvayathiley irunthey kai kaal mana nadukkam yerpattathu ..ippothu athey pol unarkiren ... enkavathu sandai endraal payama iruku ...

நான் எதற்காக கேட்டேன் என்றால் எங்கள் வீட்டிலும் மூன்று குழந்தைகள் உள்ளனர் ரொம்பவும் வால் தனம் செய்வார்கள் அதனால் என் சகோதரி அவர்களை மோசமாக திட்டுவாள் கடுமையாக அடிப்பாள் குழந்தைகள் செய்யும் சேட்டையிலே அவள் மிகவும் டென்ஷன் ஆகி எங்களிடமும் கோபமாக போசுவாள். அதேபோல் அவருக்கும் இந்த மாதிரி டென்ஷனாகி இந்த மாதிரி இருக்குமோ என்று தான் கேட்டேன். மற்றபடி எதுவுமில்லை

இதற்கு முன்பு தட்டிய பதில் பதிவாக முன்னால் லாப்டாப் ரீஸ்டார்ட் ஆகப் போறேன் என்று தூங்கிப் போச்சு. எல்லாம் காற்றில் போயாச்சு. :-) இப்போ சுருக்கமாக...

//psychiatrist பார்க்கலாமா // உங்கள் மனது இது நல்லது என்று சொன்னால் பார்க்கலாம். கவுன்சிலிங் நல்லதுதான்.

உங்கள் கோபத்தை ஒரு கடிதத்தில் எழுதிக் கிழித்துப் போடலாம். மெய்லில் தட்டிவிட்டு மறுநாள் டிலீட் பண்ணலாம். இதைச் செய்யப் போய் வீட்டில் மாட்டிக் கொண்டதாக ஒரு தோழி எப்பொழுதோ சொன்னதாக ஞாபகம். அதனால் கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும்.

இன்னொரு வழி... நீங்கள் சாதாரணமாக இருப்பது போலப் பசாங்கு செய்வது. பயம் இல்லாதது போல, கோபமாக இல்லாதது போல ஆரம்பத்தில் நடிக்க வேண்டும். பிறகு தன்னால் அதுவே பழக்கமாகிவிடும். இது சரிப்படாது என்பதாகத் தோன்றலாம். ஆனால் நிச்சயம் வேலை செய்யும். தேவை விடாமுயற்சியும் மனம் தளராமையும். நடிப்பு வெற்றியாக முடியும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களை நீங்கள் தட்டிக் கொடுக்கலாம். அல்லாத சமயம், 'அடுத்த தடவை நிச்சயம் நன்றாக நடிப்பேன்,' என்று சொல்லிக்கொள்ளுங்கள். இது நிச்சயம் வேலை செய்யும். என் அனுபவம். :-) பின்னர் சமயம் கிடைக்கும் போது விபரம் சொல்லுகிறேன்.

‍- இமா க்றிஸ்

இம்மா அம்மா நிங்க கண்டிப்பா பதில் சொல்விங்கனு காத்திக்கிட்டு இருந்தேன். நடிப்படு தான் பிரச்சனையாக உள்ளடு அம்மா.எல்லாருக்கும் நான் நல்லவர்கள் போல் நடிபதால் தான் எனக்கு கோவம் வருடுமபிநாடி. அவங்க என்னிடம் நன்றாக பேசிவிட்டு பின்னால் போய் பேசுவடு மனவருத்தம் அம்மா. நான் அந்த வார்த்தையை கூறி இருக்கலாமா இந்த பிரிச்சனையை இப்படி பேசி தீர்த்டு இருக்கலாமா என்று லேட்டாக புத்தி வேலை செயுடு அம்மா. நாம் எதனால் சொன்னால் அவர்கள் மனசு வேதனை படுவர்கலோ அதனால் வாய் மூடி இருந்தால் அவர்கள் என்னை மனசு நோகடித்டு விடுகிறார்கள். அவர்கள் என்று சொல்வடு பொடுவானவர்கள் மாமியார் வீடு அம்மா வீடு அக்கம் பக்கத்தினர் கூட பயணம் செய்பவர்கள். அதனால் நான் என் மனசை stronga வட்சுகனும்னு நெனைக்கிறேன் அழுகை மூஞ்சுயயை தூக்கி போடணும்னு நெனைக்கிறேன். தைரியம் உள்ள பொன்னாக நடித்து பிரச்சினை வரும்போது ஓடி ஒளிகிறேன். நியமான கோரிக்கைகளை கூட வெளில சொல்ல முடியாம தொண்டை அடைப்பு கண்ணீர் எல்லாம் வந்டு என்னை முட்டுகட்டையாக இருக்கிறடு. உடல் உபொதையக இருக்குமோ நான் ஆரோகியமான உணவுதான் எடுத்டு கொள்கிறேன். என்னை தைரியபடுத்த நான் என்ன செய்ய வேண்டும் அம்மாசுருக்கமா சொன்ன பேசும்போது யாராவது ஏன்னை கேள்வி கேட்டாலோ அல்லது நான் கேட்டு அவர்கள் எதையவது மாறுதலோ அழுகை தொண்டை அடைப்பு ஏற்பட்டு குரல் உளறுகிறது. பொதுவாக சண்டை போடுற மாதிரி வீட்ல சிலபேரு பேசிபங்கா அப்போது நான் பேசணும்னு நெனைப்பேன் ஆனா பேச மாட்டேன் ஏன கண்ல தண்ணி வந்து குரல் அடிச்சு பேச முடியாத நிலை வந்து அசிங்க பட்டு விடுகிறேன். உண்ணும் சுருக்கமா சொன்ன சின்ன பசங்க போல கொச்சுகிறேன் இது எங்க அம்மா இப்படிதான் என்ன சொல்ல வரேன்னு தெரியாம கொசசுபங்க. அது மாதிரி எனக்கும் ஒட்டிகொண்டதனு தெரியல. இதெல்லாம் பிரமை நிங்களா நேனைது கொல்வதுன்னு மட்டும் சொல்லிடாதிங்க. நான் தைரியமா தான் காடிகிறேன் வெளில இந்த அழுகை தொண்டை அடைப்பு என்னை காட்டிகொடுகிறது இதை போக்க நான் என்ன செய்வது.

மேலும் சில பதிவுகள்