மல்லிகை மற்றும் ரோஜாக்கு

மல்லிகை மற்றும் ரோஜாக்கு யூரியா பயன் படுத்தலாமா? பயன் படுத்தலாம் என்றால் அதை எவ்வாறு பயன்படுத்துவது... எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்... சொல்லுங்க.. வீட்டு காய்கறி கழிவுகளையும் போடுறேன்.. ஆனால் போதுமாதாக இல்லை வீட்டுல எரு கேட்டேன் அதற்கு என் மாமியார் யாரோ ஒருத்தங்க யூரியா போட சொன்னாங்கன்னு சொன்னாங்க.. அதான் குழப்பத்தில் உங்களிடம் கேட்கிறேன் பதிலளிங்கள்.pls.

யூரியா இலை வளர்ச்சிக்கு நல்லது. செடியைச் சடைத்து வளர வைக்கும். இதனால் பூக்கள் குறைவாக இருக்கும்.

எந்தத் தாவரத்திற்கு யூரியா போடுவதானாலும் செறிவைக் குறைத்துப் போடுவது நல்லது. 10 லீட்டர் நீரில் ஒரு தீப்பெட்டி அளவு (தட்டையாக) யூரியாவைக் கலக்கி ஊற்றலாம். செடியின் நடுத் தண்டில் பட விட வேண்டாம். 15 செ.மீ வட்டம் விட்டு செடிக்கு ஒரு டம்ளர் அளவு மட்டும் ஊற்றுங்கள். (யூரியா விடும் முன்பாக சாதாரணமாக நீர் ஊற்றுவது போல ஊற்றி, மண் ஈரமாக இருக்க வேண்டும்.) தொடர்ந்து வரும் நாட்களில் மண் உலராமல் நீர் விட்டு வருவது முக்கியம். அல்லாவிட்டால் யூரியா செறிவு கூடி செடி காய்ந்து போகும். ஒரு தடவை விட்டால் பிறகு 3 மாதங்களுக்குள் யூரியா வேண்டாம்.

ரோஜாவுக்கு சுலபமான, நம்பிக்கையான பசளை வரட்டி. கையளவு காய்ந்த எருவை உதிர்த்தி மண்ணோடு கலந்துவிடுங்கள். தேவையானால் ஒரு மாதம் கழித்து மீண்டும் சேர்க்கலாம்.

ரோஜாவிற்குச் சிறந்த வேறு பசளைகள்:-
தேயிலைச் சக்கை (பால் சேராதது மட்டும்.) - உதிர்த்துத் தூவி மண்ணுடன் கலந்து விடுங்கள்.
வெண்காயத்தோல் - பறக்காமலிருக்க மேலே மண் தூவினால் போதும்.
வாழைப்பழத் தோல் - சின்னதாக வெட்டி, தூவி விடுங்கள். மொட்டுகள் அதிகம் வரும்.

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/20369?page=5 அப்படியே அடுத்த பக்கமும் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இம்மா..

மேலும் சில பதிவுகள்